May 26

Date:26 May, 2017

May 26

We Shine Daily News

jkpo;

மே 26

தேசிய செய்திகள் :

 • இந்திய ரயில்வே 18 நவீனு ரக டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ 200 கோடியாகும். மியான்மருக்கு மட்டுமின்றி இலங்கை, வங்கதேசம், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்திய ரயில்வேயின் உற்பத்தி மையங்கள் தான் என்ஜின்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

 

 •  அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அருகே இருக்கும் சாதியா என்ற இடத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் உள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளில் குறுக்கே சுமார் 9.2 கிமீ தொலையில் கட்டப்பட்டுள்ள பாலத்ஐ;த பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 60 ரன் எடை கொண்ட ராணுவ பீரங்கி வாகனங்களை ஓட்டிச் செல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது. இந்தியாவில் உள்ள பாலங்களிலே மிக நீண்ட பாலம் இதுவாகும்.

 

 •  உலகளவில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த 10 முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் காதல் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழும் தாஜ்மஹால் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. கம்போடியா நாட்டிலுள்ள உலகிலேயே மிகப் பெரிய கோவிலான அங்கோர் வாட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆசிய அளவிலான சுற்றுலா தளங்களின் பட்டியலில் தாஜ்மஹால் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 •  சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ம் தேதியை ஐ.நா சபை அறிவித்தது. இதையொட்டி நாடு முழுவதும் புதிதாக 100 யோகா மையங்களை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர், நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க், லண்டனின் ட்ராஃபல்கர் சதுக்கம் உள்ளிட்ட சர்வதேச அளவில் புகழ் பெற்ற இடங்களிலும் யோகா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

 

 •  உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மும்பை 2வது இடத்திலும் வங்கதேசத் தலைநகர் டாக்கா முதலிடத்திலும் உள்ளதாக ஐநாவின் மக்கள் வாழ்விடம் குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎப்) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரம் 7வது இடத்திலுள்ளது.

 

 •  மண்ணெண்ணெய் உபயோகப் படுத்தாத மாநிலமாக ஆந்திரா உருவாகி இருப்பதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.

 

 •  ஆதார் பதிவுக்கு வயதுச் சான்றிதழ் அவசியமில்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நேற்று குறிப்பிட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • சிங்கப்பூரில் ஒரு வாரம் நடைபெற்ற 2017ம் ஆண்டுக்கான இந்திய –சிங்கப்பூர் கடற்படை கூட்டுப்பயிற்சி மே 24ல் நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் எஃப்-15 விமானங்கள் முதல் முறையாகப் பங்கேற்றன. கடந்த 1994ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  24வது முறையாக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டுப்பயிற்சி சிங்கப்பூரின் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா –சாங்கி கடற்படைத் தளத்திலும், தென்சீனக்கடல் பகுதியிலும் மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சியில் சிங்கப்பூரின் ஹெலிகாப்டருடன் கூடிய ஆர்எஸ்எஸ் ஃபர்மிடபிள், ஏவுகணை வீசும் திறன் கொண்ட ஆர்எஸ்எஸ் விக்டரி ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்றன.
  இந்திய தரப்பில், ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஐஎன்எஸ் சிவாலிக், ஐஎன்எஸ் காமோத்ரா, ஐஎன்எஸ் ஜோதி ஆகிய கப்பல்களும் பி8-1 ரக கண்காணிப்பு விமானமும் ஈடுபடுத்தப் பட்டன.

 

 •  பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ உதவித் தொகையைக் குறைக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட செலவுகளை அந்நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அளித்து வருகிறது. “கூட்டுப்படை ஆதரவு நிதி” என்று அறியப்படும் இந்த நிதிக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

 •  கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நேபாளப் பிரதமாராகப் பொறுப்பு வகித்த பிரசாண்டா, 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் இரண்டு முறை பிரதமரான மாவோயிஸ்ட் தலைவர் என்ற பெருமையை பெற்றார். தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

 •  காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் கசாய் பகுதிக்கு உணவுப் பொருள்களை வழங்குவது தடைப் பட்டுள்ளதால், அங்கு 4 லட்சம் குழந்தைகள் பட்டினியால் சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

 

 •  ஓரினச் சேர்க்கையாளர்கள் இடையேயான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க தைவான் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் ஓரினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெறும்.

 

 •  சாக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக் கொண்டவர்களின் ரத்த ஓட்டம் சீரானதாகவும், மேலும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியிலும் சாக்லெட் ஈடுபடுவது லண்டன் மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் மூலம் மாரடைப்பு இதயம் சார்ந்த நோய்களுக்கு சாக்லெட் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

 •  மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான கத்தாரைத் தலைமையடமாக கொண்டு செயல்படும் அல்-ஜசீரா உள்பட 21 செய்தி நிறுவனங்களில் இணையதளங்களை எகிப்து தடை செய்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • டப்ளின் நகரில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி வென்றது. இதன் மூலம் வங்கதேச அணி ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 •  இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை விநியோகித்து அதற்கான தேர்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

 •  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருதை சியெட் நிறுவனம் வழங்கியது.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் திருவள்ளுர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக நஜம் சேத்தியை நியமிப்பதென பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது சஹாரியார் கான் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 •  கரூரில் நடைபெற்ற எல்ஆர்ஜி நாயுடு கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் புதுதில்லி ஏர்போர்ஸ் அணி, சென்னை கஸ்டம்ஸ் அணியை வென்றது.

 

 •  ஆஸ்திரேலியாவின் கோஸ்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடரின் கால்இறுதியில் இந்திய அணி இன்று சீன அணியுடன் மோதுகிறது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • தற்போதைய சேவை வரி மூன்று சதவீதம் அதிகரிப்பதால் மியூச்சுவல் பண்ட்களின் செலவு விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

 

 •  சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் தர மதிப்பீட்டை குறைத்திருக்கிறது. பிஏஏ3 என்னும் நிலையிலிருந்து பிஏ2 என்னும் நிலைக்கு குறைத்திருக்கிறது.

 

 •  விஸ்டாரா நிறுவனத்தின் விமான சேவையில் முதலாவது ஏ320நியோ ரக விமானம் புதன்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டது.

 

 •  பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.3721 கோடி லாபம் ஈட்டியது.

 

 •  இயக்குநர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோரும் தாமாக முன்வந்து பதவி விலகும் திட்டத்தை முதல் முறையாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் காக்னிஸன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Call Now
Message us on Whatsapp