May 23

Date:23 May, 2017

May 23

We Shine Daily News

jkpo;

மே 23

தேசிய செய்திகள் :

 • ஜி.எஸ்.டி வரி விதிப்பால், ஸ்மார்ட் போன், சிமெண்டு மற்றும் மருந்து பொருட்களின் விலை குறையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 

 • மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி ‘இந்தியா 2017’ எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். மேலும் இப்புத்தகம் குடிமைப்பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

 

 • குழந்தைகளை தத்தெடுப்பதற்கான கட்டணத்தை ரூ.15 ஆயிரம் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • ஜம்மு – காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை பிடித்த பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவத்தின் சிறப்பு விருது (கமெண்டேசன் கார்டு) வழங்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியா அடுத்த போரை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் அந்த போரை எதிர்கொள்ள வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

 

 • நவீன வசதிகளுடன் கூடிய தேஜாஸ் எனும் அதிவேக சொகுசு ரயில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் மும்பையில் இருந்து கோவா மாநிலம் கர்மாலி வரை இயக்கப்படுகிறது.

பன்னாட்டு செய்திகள் :

 • வட கொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையொட்டி, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்ய அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.

 

 • மவுண்ட் எவரெஸ்ட்டில் இருந்த ஹிலாரி ஸ்டெப் என்ற 12 மீட்டர் அபாய நெடும்பாறை தற்போது இல்லை என்று எவரெஸ்ட் மலையேற்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • அணு ஆயத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நிலையில் இந்தியா அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவில் இணைவதை சீனா அனுமதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 • தீவிரதத்தால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்க, ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், அந்த ஏவுகணை உடனடியாக ராணுவத்தில் சேர்க்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • உலகின் 2-ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு பிரெஞ்சு ஓபனின் முன்னாள் வீரர் ஆன்ட்ரே அகஸ்லி பயிற்சியளிக்கிறார்.

 

 • அக்வா விளையாட்டுக் கழகம் சார்பில் பெரியநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்.ராமசாமி நினைவு 49 வது மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 • ஸ்பெயினில் நடந்த லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், ரியல் மாட்ரிட் அணி 93 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.

 

 • ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • ஏ கிரேடு வழங்கப்பட்டுள்ள வீரர்களுக்கான ஊதியத்தை ஆண்டுக்கு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி வலியுறுத்தி உள்ளார்.

 

 • ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற சுதிர்மான் கோப்பை பேட்மின்டன் தொடரில் இந்திய அணி டென்மார்க் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கியை இன்று முதல் தொடங்கியது. மேலும் 2020ஆம் ஆண்டில் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு வங்கி சேவையைத் தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனம் புதிய ஜாகுவார் எக்ஸ்இ செடான் டீசல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையேயான ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.64.78 காசுகளாக உள்ளது.

 

 • இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.17 புள்ளிகள் சரிந்து 30485.80 புள்ளிகளாக உள்ளது.

 

 • ஜிஎஸ்டியில் தங்கத்துக்கு 5 சதவீத வரி விதிக்க பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Call Now
Message us on Whatsapp