May 21

Date:21 May, 2017

May 21

We Shine Daily News

jkpo;

மே 21

தேசிய செய்திகள் :

 • பயங்கரவாத மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 

 • நோயினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு லான்செட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

 • ‘தி இந்து’வின் ஆங்கில பதிப்பு திருப்பதியில் கடந்த 17ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் பிரதிகள் 18ம் தேதி முதல் வெளியாகியது. மேலும் இது ‘தி இந்து’வின் 19 வது அச்சக மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹமீது அன்சாரி, மன்மோகன் சிங் ஆகிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

 

 • இந்தியா முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டு தூய்மையான ரயில் நிலையங்கள் குறித்த பட்டியலை இந்தியாவின் தர கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 49வது இடத்தில் உள்ளது.

 

 • மாநில மொழிகளில் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் நிலை உருவாக வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

 

 • ஈரான் நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • ‘வான்னா கிரை வைரஸ்’சின் முதல் பதிப்பின் சில குறியீடுகுள், வடகொரியாவின் லாசரஸ் குரூப் ‘புரோகிராம்’களில் காணப்பட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டறிந்தன. இந்நிலையில் ‘வான்னாகிரை’ வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

 • மீண்டும் நான்காண்டுகளுக்கு அதிபராக தேர்வு செய்யப்பட்ட ரூஹானி “சீர்குலைவு சக்திகளுக்கு” கொடுத்து வரும் ஆதரவை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

 

 • சவுதி, இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

 • பாகிஸ்தானில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, இந்தியத் தூதரகம் உதவ அனுமதிக்கும்படி சர்வதேச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியா-சிங்கப்பூர் நாடுகளின் கடற்படைகள் கூட்டாக இணைந்து, தென் சீனக் கடற்பகுதியில் வருடாந்திர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒத்திகையை விரைவில் நடத்துவதாக இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.

 

 • அமெரிக்காவின் “இன்டெல்” நிறுவனம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியில், சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பிரசாத் ரங்கநாதன் என்ற மாணவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சர்வதேச அறிவியல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய இளம் அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் அரிஜோ நகரில் நடந்த ஆட்டத்தில் முதல் முறையாக இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

 

 • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா அணி மார்ட்டினா ஹிங்கிஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

 

 • உலக கோப்பை வில்வித்தை போட்டி ஷாங்காய் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி கொலம்பியாவை எதிர்கொண்டது. இறுதியில் இந்திய அணி கொலம்பியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

 

 • பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் 12ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி அரியலூரில் நடைபெற்றது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சுழற்கோப்பையை வென்றது.

 

 • மலேசியாவின் மாலாகாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ 1000 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அயர்லாந்தைத் தோற்கடித்தது.

 

 • நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கித் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • வடகிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 

 • அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பான புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. இதில் நாட்டின் அந்நிய செலாவணி மே 12ம் தேதி நிலவரப்படி 44 கோடி டாலர் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • குறைந்த வரி விதிப்பால் லாபமடையும் நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு அந்த பலனைக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்யாமல் அதீத லாபமீட்டும் நோக்கில் நிறுவனங்கள் செயல்பட்டால் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

 • புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு எகானமி வகுப்பு விமான கட்டணம் குறையும். மேலும் நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கி சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.5730.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Call Now
Message us on Whatsapp