May 20

Date:20 May, 2017

May 20

We Shine Daily News

jkpo;

மே 20

தேசிய செய்திகள் :

 • நாடு முழுவதும் சரக்கு, சேவை வரியில் இருந்து கல்வி, சுகாதாரத்துக்கு விலக்கு அளிக்கவும், சிகரெட், கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன் படி அரசு நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்களை இணைப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

 

 • உத்ரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் யாத்திரை பாதையில் இடைவிடாத மழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

 

 • சென்னையை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன், ‘இந்திய பசுமைப் புரட்சியின் 50 ஆண்டுகள்’ என்ற 2 பகுதி நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

 

 • நாடு முழுவதும் முதன்முறையாக சூரிய ஒளி – இயற்கை வாயு – காற்று ஆகியவற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்திலான 10 அணு உலைகள் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.

 

 • இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

 

 • பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வரும் வகையில் வசதிகளை அளிப்பதுடன் இது குறித்த தணிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • அமைதி நோக்கங்களுக்காக மற்ற நாடுகளிடம் இருந்து பெறப்படும் அணுசக்திக்கான மூலக்கூறுகளை அணு ஆயுதம் தயாரிக்க இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

 

 • ஈரானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

 

 • அமைச்சரவையில் புதியதாக அறிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 • சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஜோர்டானையொட்டிய எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின.

 

 • ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சி, ஏவுகணை ஆராய்ச்சி திட்டங்களின் மறு ஆய்வையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது.

 

 • தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா, சிங்கப்பூர் கடற்படை கூட்டாக இணைந்து 7 நாள் நடத்தவுள்ள போர் பயிற்சி மே.18ம் தேதி தொடங்கியது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

 • இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக்கில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

 • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அணி இத்தாலியின் சாரா எர்ரானி – மார்ட்டினா டிரெவிசான் இணையை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

 

 • நியூசிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.

 

 • உலகக் கோப்பை வில்வித்தை போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

 • எஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி கமென்ஸ்ஸ்கி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்தியாவைச் சேர்ந்த ரவி குமார் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • பிரான்ஸில் உள்ள போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பூரவ் ராஜா – திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • காதி துறை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் டிவிஆர் ஆகியவை பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஜூன் 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • முருகப்பா குழுமத்தின் சந்தை மதிப்பு 43 சதவீதம் உயர்ந்து 800 கோடி டாலராக உயர்ந்திருப்பதாக குழுமத் தலைவர் ஏ.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

 

 • ஜிஎஸ்டி வரி விதிப்பில் கார்களுக்கு ஒரே சீரான வரி விதிக்கப்படும் நிலையில் சிறிய ரக காரின் விலை உயர்வதற்கும், எஸ்யுவி விலை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.

 

 • தொழிலாளர், மூலப்பொருள் பற்றாக்குறையால் வார்ப்படங்கள் உற்பத்தி 3 மடங்கு சரிந்துள்ளது.

 

 • 2016-17ம் நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கிராஸிம் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1055.26 கோடியிலிருந்து ரூ.1063.62 கோடியாக அதிகரித்துள்ளது.

We Shine Daily News

English

May 20

 • Number of migrant children travelling alone hits record high : UNICEF

          At least 300000 unaccompanied and separated children were recorded in around 80 countries in the combined years of  2015 x 2016.

 

 • IIT Delhi Scientist develop cheapest respiratory fitter

          The product will soon he available in Indian and global markets under the brand name Nasofilters by Nano clean global Pvt Ltd a company formed by the Innovators.

 

 • Reaearchers discover first Human Antibodies to fight Ebola Viruses

          The research was published online in Journal cell as Antibodies from a human survivor define sites of vulnerability for  board protection against Ebola Viruses.

 

 • RR Laxman wins All India open Rapid FIDE Rating Chess Meet

          International master Somak Palit scored 7.5 points to secure the fifth place while another international master Prantik Roy was placed eighth in the tournament.

 

 • David letterman wins Mark Twain Prinze 2017 for American honour.

          He is also a past recipient of Kennedy centre Honours for his influence on American culture

 

 • Indian mountaineer Anshu Jamsenpa from Arunachal Pradesh became the first Indian woman to scale mount Everest for the fourth time

 

 • The National Green Tribunal announced that any vehicle found over speeding inside the kaziranga  National park would have to pay an environment compensation of Rs. 5000 under motor vehicles Act

 

 • The world meteorological organization (WMO) and the Helmholtz centre for polar and marine Research (AWI) officially announced the start of the year of polar prediction

 

 • Indian Institute of Engineering and Science and Technology has successfully created country’s first smart grid project that will generate power from renewal ate sources of energy. It will be inaugurated by President pranali Mukherjee

 

 • Forested area in Chhattisgarh named after Anil Dave

          Chhattisgarh Chief Minister Dr .Raman Singh has announced that a  41 hectare forest  area  land in the Durg region of  state would be named after late Union Minister Anil Madhav Dave.

 

 • DM Narendra modi to inaugurate India’s longest  river bridge in Assam on May 26

         He will inaugurate India longest river bridge ‘Dhola-Sadiya bridge’ in Assam on May 26. It is 3.55 km longer than the Bandra –Worli sea link in Mumbai, Making it the longest Bridge in India.

 

 • Twitter India  get new Head

          Twitter Inc. has elevated Taranjeet Singh as its Director for India, Singh was earlier leading the charge for sales and  marketing support for advertisers Twitter in India

 

 • Next Generation Launch vehicle ‘GSLV Mark III- D1

        The India Space Research organisation will launch GSLV Mark III –D1 with a payload of four tonnes on June 5

 

 • President Pranab Mukherjee receives first copy of book Metaphysics, Moral and Politics. The book is authored by professor Amar Kumar Mukhopadhyay

 

 • Indian American student pranay varada Wins 2017 National Geographic Bee competition

 

 • Anant Geete inaugurate Test Track facility developed by Global Automotive Research centre

          The Global Automatic Research centre is a body working under the National Automatic Testing and R&D Infra project

 

 • National Green Tribunal Bans open Defecation and waste Dumping on Yamuna food plains.

 

 • Prime Minister releases Book series written by MS.Swaminathan.

          The series titled – M.S.Swaminathan : The Quest for a world without hunger.

 

 • Madhav Chitale Committee Recommends measures for De-sitting Ganga.

          The Union Ministry of water Resources, River Development and Ganga Rejuvenation had constituted a committee to prepare guidelines for desilation of Ganga River last year.

Call Now
Message us on Whatsapp