May 18

Date:18 May, 2017

May 18

We Shine Daily News

jkpo;

மே 18

தேசிய செய்திகள் :

 • சத்தீஸ்கரில் உள்ள சுக்மா, பிஜப்பூர் மாவட்டங்களில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் வேட்டையில் 15க்கும்; மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 • மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகள் வணிக நோக்கில் பயன்படுத்திட அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ரஷ்ய அதிபர் புதினும், மோடியும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டாக அடிக்கல் நாட்டிய 3,4வது அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 

 • ‘நீட்’ தேர்வின் போது மாணவ – மாணவிகளிடம் கெடுபிடி செய்து துன்புறுத்தப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ -க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 • யமுனை நதி நீரில் தில்லிக்கான பங்கினை ஹரியானா மாநில அரசு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தலைநகரில் அடுத்த சில நாள்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசு ஒதுக்கிய இல்லங்களில் இருந்து வெளியேறாமல் குடியிருக்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை வெளியேற்ற உதவும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத், சாந்த்ராகாச்சி இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 • ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா, 82 வயதில் பிளஸ் 2 தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷ்யாவுக்கு அளித்ததாக அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 • வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் பேரழிவுக்கானதாகவே பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க கடற்படை தளபதி கூறியுள்ளார்.

 

 • கன மழையால் பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு கடின தன்மையுடன் மாறி உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

 

 • அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி செய்ததா எனும் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை அமெரிக்க சட்டத்துறை நியமித்துள்ளது.

 

 • இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக்கு அரும்பணி ஆற்றியவர்களை பாராட்டும் வகையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒயிட்லி நிதியம், ஒயிட்லி விருதுகளை (பசுமை ஆஸ்கார் விருது) ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது இந்தியாவை சேர்ந்த சஞ்சய் குப்பி, பூர்ணிமா பர்மன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

 

 • ஆஸ்திரேலியாவுக்கு வரும் விமானங்களில், மடிக் கணினிகளுக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

 

 • சீனாவை மையமாகக் கொண்டு புதிய பொருளாதார சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஓபிஓஆர்’ சாலை திட்டத்தில் பங்கு பெறும் இலங்கைக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஜூனியர் கால்பந்து அணி, ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

 

 • உலக லீக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

 

 • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்ட்ரஸ் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா காயம் காரணமாக 2வது சுற்றின் பாதியிலேயே வெளியேறினார்.

 

 • ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புனே அணி மும்பை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

 • நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்தியாவுடன் விளையாட லெபனான் அணி மறுத்துள்ள நிலையில் மாற்று அணியாக நேபாள அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 • இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

 

 • மகளிர் ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் இந்திய அணி தொடரை இழந்தது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 470.62 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222.21 புள்ளிகள் சரிந்து 30436.56 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.64.42 காசுகளாக உள்ளது.

 

 • மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்துகள் பல, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்து வருகிறது.

 

 • டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்கள் கடந்த நிதியாண்டில் சராசரியாக மாதத்துக்கு 1.2 லட்சம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டை விட இது 9 சதவீதம் அதிகம். ரேடியல் டயர் இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

 

 • நியூசிலாந்து நாட்டின் ‘ஃபேர்ஃபாக்ஸ் மீடியா’ என்ற அச்சுப் பத்திரிக்கையும் ‘நியூசிலாந்து மீடியா என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பத்திரிக்கையும் இணையக் கூடாது என்று அந்நாட்டு வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 • பேமெண்ட் வங்கி சேவை செயல்பாடுகளை மே மாதம் 23ம் தேதி முதல் பேடிஎம் நிறுவனம் தொடங்க இருக்கிறது. பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை பேடிஎம் நிறுவனம் தொடங்க இருக்கிறது.

 

 • உலக தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்டிவி 333 திட்டத்துக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

 

We Shine Daily News

English

May 18

 • Union cabinet approves Pan – India implementation of Maternity benefit program

          The total cost of the proposal period from Jan 2017 to 31 Mar 2020 including Union and State government share                            Rs.12661 Cr.

 

 • Social Justice Minister Inaugurated 15th National meet of State Commissioner for persons with Disabilities to discussion implementation of the person with disabilities act 1995.

 

 • The cabinet committee on Economic affairs (CCEA) chaired by the Prime Minister Modi approved a restructing plan for Hindustan organic chemicals Ltd.

 

 • The Union cabinet approved the Introduction of the Ancient Monuments and Archaeological sites Remains Bill ; 2017 in the Parliament.

 

 • The Union cabinet gave a green signal for the construction of units of India’s Indigenous pressurized Heavy water Reactors.

           The 10 PHWR project will result in significant augmentation of nuclear power generation capacity.

 

 • Renowned biologist Purnima Devi Barman nominated for Whitley awards.

           The awards are given annually by Whitley for Nature (WFN). Also known as Green Oscars.

 

 • May 17 : World Telecommunication and Information society day

          The theme for WTISO-17 is Big Data for Big Impact.

 

 • Indian scientist Shrinivas Kulkarni has won the prestigious Dan david Prize for his contribution in the field of astronomy.

 

 • India Ranks 24th in International Tourist Arrivals

 

 • Union Minister of State of Power piyush Goyal on Deen Dayal upadhyaya Gram Jyoti Yojana (DDUGJY) informed that out of 18,452 un electrified cencus villages in the country 13,469 villages have been electrified upto 15th

 

 • The English translation of writer Perumal Murugan novel ‘Mathorubhagan (one part of woman)’ has won the Sahitya Akademi award for translation in English.

           The translation was done by Aniruddhan Vasudevan and was published by penguin.

Call Now
Message us on Whatsapp