May 17

Date:18 May, 2017

May 17

We Shine Daily News

jkpo;

மே 17

தேசிய செய்திகள் :

 • குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றத்தை ரத்து செய்வது குறித்து 18ம் தேதி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது.

 

 • முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் பயனடையும் வகையில் சிறப்பு மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒரு கர்ப்பிணிக்கு ரூ.6000 நிதியதவி வழங்கப்படும்.அதில் ரூ.5 ஆயிரத்தை மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அளிக்கும் என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

 

 • பிரதமர் நரேந்திர மோடி வரும் 5 நாள் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 29ம் தேதி புறப்படுகிறார்.

 

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதி அழுத்த கனநீர் அணு உலைகளைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு அணு உலையும் 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும். இது சுத்தமான எரிசக்தியை உற்பத்தி செய்ய உதவும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • ஜம்மு-காஷ்மீரில் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

 

 • வறுமை என்பது அடிமைத்தனம், உரிமை மறுப்பு, கண்ணிய மறுப்பு இதனை மாற்ற குழந்தைகளுக்கான சிறார் நலத்திட்டங்களுக்கு அரசு அதிகமாக செலவிட வேண்டும என்று நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ளார்.

 

 • அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் 25 சாதனையாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2வது வருடாந்திர பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.

 

 • பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் லட்சத்தீவு பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • உலகம் முழுவதும் சண்டையை தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான இலக்கை எட்டுவதற்காக இந்தியா பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவுக்கான நிரந்தர துணை பிரதிநிதி தன்மயா லால் தெரிவித்துள்ளார்.

 

 • பூமியில் எங்கும் இல்லாத அளவுக்கு நியூலாந்து சிலி இடையே தெற்கு பசிபிக் கடலில் உள்ள தனித் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • வட கொரியா ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது என்று தென் கொரியா அச்சம் தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ரஷ்யாவிடம் எந்த ரகசிய தகவலையும் கூறவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

 

 • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையை கடித்ததற்காக நாய்க்கு மரண தண்டனை விதித்து வித்தியாசமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 • சீனாவின் பட்டு சாலை திட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளை போக்குவரத்து வசதி மூலம் இணைத்து சீனாவின் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 • வடகொரியா மிகப்பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரிப்பதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர் உயிரிழப்பதற்கு சாலை விபத்து தான் முதல் காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • அந்தமான் தீவுகளில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

 

 • ரேன்சம்வேர் கணினி வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருப்பதை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பொறியாளர் நீல் மேத்தா கண்டுபிடித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து 5ம் நிலை வீரரான 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விலகி உள்ளார்.

 

 • இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களுர் சசிஹித்லு கடற்கரையில் வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 • முதலாவது அனைத்து இந்திய ஓபன் ரேட்டிங் செஸ் போட்டி கொடைக்கானலில் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

 • கடந்த ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு உதவி கலெக்டர் பதவியை வழங்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 • 11வது பெண்கள் உலக கோப்பை (50ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 2முறை சாம்பியனான இங்கிலாந்து, 2000ம் ஆண்டு சாம்பியனான நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பரிக்கா, இலங்கை , வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

 

 • சர்வதேச அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவிக்க விரும்புகிறேன் என இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரும் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படாது என்று மத்திய அரசுக்கு ஐடி நிறுவனங்கள் உத்திரவாதம் அளித்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
 • தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், தனது பங்குகளை திரும்ப வாங்கும் முடிவினை பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி முதலீட்டாளர்களிடம் உள்ள ரூ.16000கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க உள்ளது.

 

 • நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசிகளை வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்கான உரிமத்தை எச்.எம்.டி குளோபல் பெற்றுள்ளது. மேலும், நோக்கியா கார்ப்பரேஷன் மேம்படுத்திய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

 

 • மாம்பழம் விலை குறைந்துள்ளதால் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மல்கோவா, அல்போன்சா பழங்கள் இன்னும் 10 நாட்களுக்கும், குதாதத், செந்தூரா மாம்பழங்கள் 1மாதம் வரையும் சீசன் இருக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

 

 • நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது.

 

 • இந்தியர்களிடையே தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கவும், நகை முதலீட்டை குறைத்து பத்திரத்தில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு வரவும் தங்க பத்திரம் திட்டத்தை 2015ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆனால் தங்க பத்திர திட்டம் தங்க மோகத்தை குறைக்க உதவவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

We Shine Daily News

English News

May 17

 • Venkaiah Naidu announces separate do channel for Jharkhand

 

 • Trump to make his maiden trip as the president of USA to the worlds’ most spiritually and politically conflicted countries Saudi Arabia the Vatican and Jerusalem

 

 • Union government launches operation clean money portal

                   It will enable Transparent the Administration by sharing status reports and the analysis reports

 

 • International crickets council hikes prize money for Champions Trophy

                   The winner of the eight team tournament will take hone a cheque of  $ 2.2 million

 

 • Up Assembly passes goods and services Tax (GST)        bill, 2017

 

 • India imposes anti- dumping duty an glasses and Chinese radiators

 

 • India and Palestine sign five agreements for Co- operative in different sectors

                   These five agreements were linked during the state visit of Palestinian president Mahmud Abash to India

 

 • Panel formed to implement ban on manual scavenging

                   The TN govt has constitutes a state monitoring committee to oversee the implementation of the prohibition of                        Employment as manual scavengers and the Rehabilitation Act and Rules, 2013 in the state.

 

 • Pay tm to start payments Bank operation from May 23.

                   The company will transfer its wallet business which has over 218 million mobile wallet user, to the newly                                  incorporated PPBL.

 

 • ‘National Employment policy this year’

                    The centre will frame a new sector wise National Employment policy in its financial year even as it grapples with low            employment generation Union and Labour Employment Minister Bandaru Dattatreya said.

 

 • The board of Rane (Madras) Ltd. Elevated Harish lakshman as Vice Chairman of the company.

 

 • Lendi Institute of Engineering and Technology has bagged the International Institute award 2017 which was given by QAI (Qualification Assessments International).

 

 • Climate change Antarctica is Turning Green.

                     According to a new study conducted by a team of scientists from the University of Exeter in the UK, plant life on                 Antarctica is growing rapidly due to climate change

 

 • China, ASEAN countries Agree on framework for south china sea code of conduct

 

 • Air Marshal PN Pradhan appointed as Deputy chief of Integrated Defense staff

 

 • O.Chidambaranar Port Trust and TANGEDCO sign MOV to upgrade coal Jetties.

                       The MOV was signed by S.Anantha Chandra Bose, chairman of VO Chidambarnar port trust and M.Sai Kumar,                 Chairman cum managing Director of TANGEDCO

 

 • The union cabinet has put a ban on the use of red beacons atop cars of VIPs with effect from 1st may 2017

                       The three categories – the president Vice president, Chief Justice of India were exempted from ban

 

 • India to become TB free by 2025 : Nadda

                      while representing India in the 29th board meeting of ‘STOP TB’ programme co-ordination committee in Berlin,                  union Health Minister of Health and Family welfare J.P. Nadda declared that the government would eradicate TB                          by 2025

Call Now
Message us on Whatsapp