May 15

Date:15 May, 2017

May 15

We Shine Daily News

jkpo;

மே 15

தேசிய செய்திகள் :

 • சீன எல்லை அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிக நீளமான பாலத்தை 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

 

 • நாட்டில் மாவேயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் சாலை இணைப்பு, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு திட்டத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.

 

 • ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.

 

 • அந்தமான் கடல் பகுதியில் வழக்கமாக கோடை காலம் முடிந்து மே மாதம் 17ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் கே.ஜி.ரமேஷ் கூறியுள்ளார்.

 

 • காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

 

 • காஷ்மீரில் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்த ராணுவ வீரர் உமர் பயஸ் குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் ராணுவப் பள்ளி ஒன்றுக்கு உமர் பயஸ் பெயர் சூட்டப்பட்டது.

 

 • முறைகேடுகளை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2000 நோட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 

 • உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தாய்மார்கள் அடங்கிய குழு கண்காணிக்கும் என மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

 • வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களின் வாழ்க்கையையும் சேர்க்கும் வகையில், பாடத்திட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்கியது.

 

 • ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகளுடன், அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

 

 • வடகொரியா தனது ஆயத குவிப்பை கைவிட்டு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி நடந்து கொள்ள வேண்டும என்று புதிய பிரஞ்சு அரசு கூறியுள்ளது.

 

 • அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 • கனடாவின் அல்பர்டா பகுதியில் 2011ம் ஆண்டு ஒரு டைனோசர் புதைப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் அந்த டைனோசரை வைத்து தொல்லுயிரியலாளர்கள் ஆராய்ச்சி செய்த பிறகு, தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைப் படிமங்களிலேயே இதுதான் ஓரளவு முழுமையானதாகும்.

 

 • தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ஆரம்பித்த டால்ஸ்டாய் பண்ணையை புனரமைக்கும் பணிகளுக்கு இந்திய நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து டால்ஸ்டாய் பண்ணை புத்துயிர் பெறுகிறது.

 

 • அமெரிக்க போலீஸ் துறையில் சீக்கியர்கள் உட்பட பல இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், சீக்கியர்கள் ஒருவரும் அதிகாரியாக இல்லை. இந்நிலையில், மிட்டன் கட்டோச் என்ற சீக்கியர் இண்டியானா போலீஸ் துறையில் அதிகாரி ஆகியுள்ளார்.

 

 • உலக வர்த்தகத்தை மையப்படுத்தி, பட்டுச்சாலை எனப்படும் ‘ஒரே பட்டை, ஒரே சாலை’ திட்ட முயற்சியை கடந்த 2013ம் ஆண்டு சீனா பரிந்துரைத்தது. இதன்படி, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளை இணைக்கும் வகையில் சாலை மற்றும் கடல் வழி பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

 • துர்க்மெனிஸ்தானை ஒட்டிய ஈரானின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 12.5கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9 வெற்றியைப் பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

 • 10வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களுரு அணி 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

 

 • மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் கிறிஸ்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் இந்த போட்டியில் தொடர்ந்து ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை சிமோனா ஹாலெப் பெற்றார்.

 

 • நியூசிலாந்து இந்தியா பெண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான முதலாவது ஹாக்கி போட்டி புகெகோக்கில் நேற்று நடந்தது. இதில இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

 

 • இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1மணி 35நிமிடம் 56.497 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

 

 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்தது. இதன் பிரீஸ்டைல் ஆண்கள் 125 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித், ஈரான் வீரர் யடோல்லா முகமத் கசிமை சந்தித்தார். இதில் இந்திய வீரர் சுமித் வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 5வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கம் வென்றுள்ளது.

 

 • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 28.7கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளில் தவறான விவரங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக சரிசெய்து கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைத்து கொள்ளும் வசதியையும் தொடங்கியுள்ளது.

 

 • ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பண இருப்பு வங்கிகளின் (கரன்ஸி செஸ்ட்) பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் பலப்படுத்தி வருகிறது.

 

 • மியூச்சுவல் பண்ட்களுக்கு வரும் முதலீடுகள் இந்தியாவின் பெரிய 15 நகரங்களில் இருந்தே வருகிறது. இந்த நகரங்களைத் தாண்டி, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்து ரூ.3.09 லட்சம் கோடியாக இருக்கிறது.

 

 • உலகின் சிறந்த 100 வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்தரிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் 11 இந்திய வம்சாவளிகள் இடம் பிடித்திருக்கின்றனர்.

 

 • இன்று வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 62.83 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165.90 புள்ளிகள் உயர்ந்து 30354.05 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.64.08 காசுகளாக உள்ளது.

 

 • மத்திய அரசு கடந்த 74ம் ஆண்டு, கைத்தறித் துறைக்கு தேவையான நூல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக சிட்டா நூல் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்படி ஸ்பின்னிங் மில்களில் 50 சதவீதம் சிட்டா நூல் கட்டாயம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

 

 • ஸ்டென்ட் விலை கட்டுப்பாட்டை தொடர்ந்து, 19 மருத்துவ கருவிகளின் விலைழய குறைக்க மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அவற்றின் விலை விவரங்களை கண்காணித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பட்டியலை சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 • ஒற்றை ஓடுபாதை கொண்ட மும்பை விமான நிலையத்தில் 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வகையில் தினமும் 837 விமானங்களை கையாண்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக லண்டன் கேட்விக் விமான நிலையம் பயணிகளைக் கையாளும் எண்ணிக்கையிலும் மும்பை விமான நிலையமே முதலிடத்தில் உள்ளது.

Call Now
Message us on Whatsapp