May 11

Date:11 May, 2017

May 11

We Shine Daily News

jkpo;

மே 11

தேசிய செய்திகள் :

 • கேரளாவைச் சேர்ந்த ஆன்மீக தலைவர் மாதா அமிர்தானந்தமயிக்கு மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம் யோகா குரு பாபா ராம்தேவுக்கு அடுத்தபடியாக இவ்வகை பாதுகாப்பு பெற்ற 2-வது ஆன்மீக தலைவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

 

 • உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பான தகவல்களை ‘ஆன்லைனில்’ அறியும் வசதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

 

 • இந்தியாவில் பருவமழை குறித்த முதல்கட்ட அறிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு 99 சதவீதம் பருவ மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 7ம் தேதி ‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்காக சி.பிஎஸ்.இ இந்த தேர்வை நடத்தியது. இதற்கிடையே, ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் 4 தவறான கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக பாட நிபுணர்களும், தேர்வு எழுதிய மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

 

 • புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வெசாக்’ (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.

 

 • தென்கொரியாவின் முன்னாள் பெண் அதிபர் பார்க் குன் ஹை, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜேயின்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணான எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமதுக்கு சமீபத்தில் மும்பையில் காஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் சுமார் 500 கிலோவாக இருந்த அவரது உடல் எடை 177 கிலோவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 • ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி நாளில் புத்தர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இலங்கையில் 2 நாட்களுக்கு தேசிய விடுமுறை விடப்படுகிறது. இந்த ஆண்டின் புத்தர் பிறந்த தினம் நேற்றும் இன்றும் கொண்டாடப்படுகிறது.

 

 • அதிக கொலைகள் ஏற்படும் நாடுகள் குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ஐஐஎஸ்எஸ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிரியா முதலிடத்தையும் மெக்சிகோ இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 

 • மேற்கு மொசூலில் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அபு அயோப் அல் ஷமி கொல்லப்பட்டார்.

 

 • தெற்கு சூடான் நாட்டில் வலிமை வாய்ந்த ராணுவ தளபதி பால் மாலோங்கை அதிபர் சல்வா கீர் திடீரென பதவியை விட்டு நீக்கி விட்டார். புதிய தளபதியாக ஜேம்ஸ் அஜங்கோ மாவுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • இந்தியா – ரஷ்யா இடையே அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்;துப் பேசினார். அதன் பின்னர் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

 • சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் குர்து படையினருக்கு ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் வழங்கி உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 • மேற்கு சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் தெரிவித்தார்.

 

 • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்து 5வது வெற்றியை பெற்றது.

 

 • 11 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து அணி, உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள ஜூனியர் கிளப் அணிகளுடன் விளையாடி வருகிறது. லிஸ்பானில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய ஜூனியர் அணி, போர்ச்சுகல் கிளப் அணியிடம் தோல்வி கண்டது.

 

 • ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் யுவென்டஸ் அணி, மொனாக்கோ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

 • கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே அணியும், டெல்லி ஓஎன்ஜிசி அணியும் மோதின. இதில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தன.

 

 • ஏடிபி கர்ஷி சாலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி தொடரில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி கால் இறுதிக்கு முன்னேறினார்.

 

 • மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 5வது இடத்தில் இருக்கும் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியில் ஷஷாங்க் மனோகர் 2018 ஜூன் வரை நீடிப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உச்சத்தில் இருக்கின்றன. முதல்முறையாக நிப்டி 9400 புள்ளிகளுக்கு மேலே உயர்ந்து முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 9414 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 90 புள்ளிகள் உயர்ந்து 9407 புள்ளிகளில் நிப்டி முடிவடைந்தது.

 

 • பணமதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

 • மத்திய அரசின் மலிவு வீடு வழங்கும் திட்டத்தால் திறன்மிகு ஊழியர்களின் தேவை கட்டுமானத் துறையில் 7 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறையில் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது என்று டைம்ஸ் ஜாப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

 • ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க், இந்திய ஸ்டார்அப் நிறுவனங்களான ஓலா, ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.

 

 • வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வீடியோகான் டிடீஹெச் நிறுவனத்தை ஜீ குழுமத்தைச் சேர்ந்த டிஷ் டிவி உடன் இணைப்பதற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் (சிசிஐ) வழங்கி இருக்கிறது.

 

 • மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயர்ந்து 30324 என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிப்ஃடி 29 புள்ளிகள் உயர்ந்து 9437 என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.

 

 • வறட்சியால் தென்னை சாகுபடியும், கொப்பரை உற்பத்தியும் பாதிக்கப்பட்டதால் தேங்காய் எண்ணெய் வரத்து குறைந்து டின்னுக்கு (15கிலோ) 300 அதிகரித்துள்ளது.

Call Now
Message us on Whatsapp