May 10

Date:10 May, 2017

May 10

We Shine Daily News

jkpo;

மே 10

தேசிய செய்திகள் :

 • குழந்தை பருவ உடல் பருமன் மற்றும் அது சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பள்ளி கேன்டீன்களில் நொறுக்கு தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் செம்மொழி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுக்கான செம்மொழி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

 

 • ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் மேவார் மன்னர் ராணா பிரதாப் சிலையை ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தான் இந்தியா வலுவான நாடாக உருவாகியுள்ளது என்று கூறினார்.

 

 • முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தன் மனைவியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரை விவகாரத்து செய்ய முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

 • கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு ஜூன் 18ம் தேதிக்குள் புதிய செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • ஏல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதால் நிகழாண்டில் 100 சதவீத பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • கேரளாவில் ஒரு வருட இடைவெளியில் மாவோயிஸ்ட்கள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழக, கேரள மாநில எல்லை பகுதியான அடர்ந்த காட்டில் புதிதாக ரகசிய தளம் ஒன்றை அமைத்துள்ளனர்.

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மின்வசதி இல்லாத 13 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • இரண்டாம் உலகப்போரின் 72வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர் நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. இதைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 • இலங்கையில் கடந்த 2009 ல் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.

 

 • அமெரிக்க அதிபராக டெனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறின குர்முக் சிங்கை அமெரிக்காவை விட்டு வெளியேற்றுமாறு உள்ளுர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • ஜப்பானின் தென் பகுதியிலுள்ள தீவுப் பகுதியான மியாகோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

 

 • இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு தடை விதித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் சட்டர்ஜியை ஜனாதிபதி ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

 

 • குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஊடகத் தலைவராக இருந்த வேணு ராஜாமணி நெதர்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • உலக குத்துச்சண்டை சாம்பியம்ஷிப் போட்டியில் விளையாட இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா அதிர்ச்தி தோல்வியடைந்தார்.

 

 • இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளில் ஆடவுள்ளது. இப்போட்டிகள் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனைகள் நேற்று நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

 • தமிழக மீனவ இளைஞர்கள் 100 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து, சர்வதேச அளவிலான சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் தொடங்கியுள்ளது.

 

 • தென் ஆப்பரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகள் மோதின. இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சாதனைப் படைத்துள்ளார்.

 

 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன.

 

 • அமெரிக்காவில் மிகவும் பிரபலமான தேசிய கூடைப்பந்து சங்கம் சார்பில் டெல்லியை அடுத்த நொய்டாவில் கூடைப்பந்து அகாடமி தொடங்கப்பட்டு இருக்கிறது. தேசிய கூடைப்பந்து சங்கம் சார்பில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் முதல் அகாடமி இதுவாகும்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

 • நுகர்பொருள் தயாரிப்பில் மிகப் பெரிய குழுமமாக விளங்கும் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவராக நிசாபா பதவியேற்றார்.

 

 • சேமநல நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டதை தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான வட்டியும் 8.5 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நான்காவது காலாண்டில் ரூ.108.22 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • பயணிகள் கார் விற்பனை உள்நாட்டு சந்தையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் 14.68 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 74.45 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.62 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

Call Now
Message us on Whatsapp