May 1

Date:01 May, 2017

May 1

We Shine Daily News

jkpo;

Nk 1

தேசிய செய்திகள் :

 • குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி பல குழந்தைகளில் இருந்து ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாது. தாங்கள் அளிக்கும் குழந்தையை பெற்றோர்களால் ஏற்கவோ, மறுக்கவோ மட்டுமே முடியும் என்று தேசிய தத்தெடுப்பு வள ஆணையம் (சிஆர்ஏ) தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

 • தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குவதாக, சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

 • வீடு மற்றும் மனைகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக இயற்றப்பட்ட மனை வணிகச் சட்டம், இன்று (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.

 

 • வாகனங்களின் காலாவதித் தேதியை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வு (சி.டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்பட்டு வரும் இந்தத் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த சிபிஎஸ்இ அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சிபிஎஸ்இ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 • ரியல் எஸ்டேட் துறையில் வீடுகள் வாங்குவோரின் நலன்களைப் பாதுகாக்கவும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் ஏற்ற வகையில் மத்திய அரசு, ‘ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பன்னாட்டு செய்திகள் :

 • பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அவர் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதிபட கூறினார்.

 

 • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தெரிவித்துள்ளார்.

 

 • துருக்கியில் 4000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான அரசு ஆணை அந்நாட்டு அரசு இதழில் வெளியாகியது. ஆதில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரது பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய அதிகாரிகளின் பெயர்களும், கல்வித் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

 

 • பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது. அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா பங்களிப்பு ஒன்றுமேயில்லை என்று அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் சாடியுள்ளார்.

 

 • 2016-17 நிதியாண்டின் இறுதி அறிக்கை பட்டியல் ஒன்றை என்டிஎம்சி தயாரித்துள்ளது. இதில் தாஜ்பேலஸ், தில்லி கோல்ஃப் கிளப் உள்ளிட்ட தில்லியின் பல்வேறு 11 நட்சத்திச உணவகங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வரி செலுத்தாமல் இருப்பதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • 26வது அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் கடைசி முடிவில் 5 முறை சாம்பியனான இந்திய அணி 30 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய நட்சத்திர வீரர் 27 வயதான எஸ்.வி.சுனிலுக்கு இது 200வது சர்வதேச போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. 4 சுற்று முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 86 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 73 புள்ளிகளுடம் 2வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 63 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளனர். 5வது சுற்று போட்டி வருகிற 14ம் தேதி ஸ்பெயினில் நடக்கிறது.

 

 • 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பாவை வீழ்த்தி மகுடம் சூடி புதிய சரித்திரம் படைத்தார்.

 

 •  டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • புதுச்சேரியில் நடைபெற்ற தென் மண்டல சீனியர் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகமும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் சாம்பியன் பட்டம் வென்றன.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • வரி ஏய்ப்பு செய்த 2 லட்சம் நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

 • பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உண்மையான நோக்கமாக இருந்தால். வங்கி வாடிக்கையாளர்கள் மீது இத்தகைய சேவைக் கட்டணங்கள் என்ற தண்டனை – அபராதங்களை சுமத்துவதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

 

 • அமெரிக்காவின் முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கென்ஸி இந்திய தகவல் தொழில்நுட்ப துறை குறித்து ஆய்வு நடத்தியது. அதில், அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
 • மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 1.70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போன்று ஓராண்டில் 16.90 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் 32.20 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

 

 • கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ஓலா நிறுவனத்தின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி என தெரியவந்துள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டில் மொத்தம் ரூ.2311 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஓலா நிறுவனம் சந்தித்திருக்கிறது. அதிக விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பணியாளர்கள் கட்டணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

 • இந்திய தொலைபேசி சந்தாரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மொபைல் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு 118 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் 117 கோடியாக இருந்ததாக தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்திருக்கிறது.

 

 • சர்வதேச அளவில் இந்திய சாக்லேட் சந்தை வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. லண்டனைச் சேர்ந்த மின்டெல் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. மேலும் 2016ம் ஆண்டில் சாக்லேட் சந்தை 13 சதவீதம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Call Now
Message us on Whatsapp