March 31

Date:01 Apr, 2017

March 31

We Shine Daily News

jkpo;

மார்ச் 31

தேசிய செய்திகள் :

 • ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 15ம் தேதி வரை ஜியோ நிறுவனம் நீட்டித்துள்ளது.

 

 • ஏப்ரல் 1, 1937 (இன்று) துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 

 • கடந்த 2014 முதல் இதுவரை ரேபிஸ் நோய்க்கு 324 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்படும்.

 

 • அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஸ்ரீநகரில் வரும் மே மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் என அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

 

 • குஜராத் மாநிலத்தில் பசுவதை தடைசட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்நிலையில் சில மாற்றங்களுடன் புதிய சட்ட மசோதா சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

 

 • மதுரை அருகேயுள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. பூமிக்கடியில் இருந்த கட்டிட அமைப்புகளும் கண்டறியப்பட்டன.

 

 • சென்னை ஐகோட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் உள்பட 5 மாநில தலைமை நீதிபதிகள் கடந்த மாதம் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றனர்.சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் 2வது பெண்நீதிபதி என்ற பெருமையை இவர் அடைகிறார். 1992ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதி காந்தகுமாரி பட்னாகர் சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்தார்.

 

 • மகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

 

 • அஸ்ஸாம் மாநிலம், குலாஹாட்டியில் நமாமி பிரம்மபுத்திரா (பிரம்மபுத்திரா நதியை வணங்குதல்) விழாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மார்;ச் 31 தொடங்கி வைக்கிறார். “இந்தியாவின் மிகப்பெரிய நதித் திருவிழா” என்ற பெயரில் அஸ்ஸாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

 

 • உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மருத்துவ மாநாடு தில்லியில் ஏப்ரல் 6, 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. உலக சுகாதார நிறுவனம் யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.

 

 • நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 23லட்சம் மழைநீர் சேகரிப்பு மையங்களையும் நகர்ப்பகுதிகளில் 88லட்சம் மழைநீர் சேகரிப்பு மையங்களையும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய குடிநீர் வடிகால் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உதவியாளராக அவரது சொந்த மகள் இவாங்க டிரம்ப் பொறுப்பு ஏற்க உள்ளார்.

 

 •  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் கிறித்துவ கடவுளின ஏசுநாதரின் உண்மையான உருவம் பதியப்பட்ட புராணக் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரல்பெக்எல்லிஸ் டளை என்ற ஆய்வாளர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

 

 •  சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க நாட்டுக்கு ஏப்ரல் 6, 7 தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை புளோரிடா மாகாணத்திலுள்ள டிரம்பின் மார் எலாகோ உல்லாச விடுதியில் சந்தித்து பேசுகிறார். டீரம்ப் பதவியேற்ற பிறகு அவரை ஜின்பிங் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இதுவே முதல் முறை.

 

 •  இந்தியர்களுக்கு பாதகமான விசா நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பான எந்தவித கொள்கைகளையும் அமெரிக்க அரசு இதுவரை அமல்படுத்த வில்லை என மத்தியஅரசு விளக்கமளித்துள்ளது.

 

 •  சுற்றுச்சூழல் விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் கொள்கைத் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கொள்கைத் திட்டத்தை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கு புதிய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்;.

 

 •  உலகம் முழுமைக்குமான ஒரு நாடாளுமன்றமாக ஐ.நா பொதுச்சபை உருவாக்கப்பட்டது. எனவே அந்த சபைக்கு நடைபெறும் தேர்தலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தான் ஐ.நாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக அமையும் என ஐ.நாவுக்கான இந்திய தூதரக அதிகாரி அஞ்சனி குமார் கூறினார்.

 

 •  சிரியா அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைய விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

 

 •  மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 •  ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் கே.எல்.ராகுல் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும். இந்தியாவின் புஜாரா 4வது இடத்திலும், கேப்டன் கோலி 5வது இடத்திலும் உள்ளனர்.

 

 •  மான்ட்ரியால் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோஷல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 •  பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் டிவில்லியர்ஸ் கேப்டன் பதவியை கவனித்து கொள்வார் என பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

 

 •  ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி.சுநீலும், சிறந்து வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு ஹர்மாசன்பிரீத் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 •  22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூலை 6 முதல் 9 வரை ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறுகிறது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம், நாட்டிலேயே முதன் முறையாக இணையதளம் வழியாக ‘புரூக்ஸ்’ சைக்கிள் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது.

 

 •  வோடஃபோன் -ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்கு எந்தவொரு சிறப்பு சலுகையும் அளிக்கப்பட வில்லை என தொலைத் தொடர்புத் துறை அசை;சர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

 •  எச்.ஐ.வி. நோய்த் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘அபகாவிர் சல்ஃபேட்’ மற்றும் ‘லாமிவியூடின்’ மாத்திரைகளை 600மி.கி ஃ300மி.கி அளவுகளில் தயாரித்து விற்பனை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

 

Call Now