March 30

Date:30 Mar, 2017

March 30

We Shine Daily News

jkpo;

மார்ச் 30

தேசிய செய்திகள் :

 • இந்திய கடற்படையில் போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய கடற்படையில் தலைமைத் தளபதி சுனில் லன்பா தெரிவித்தார். வேலூர் மாவட்டம் ராஜாளி கடற்படை விமானதளத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.

 

 •  தமிழகத்தின் தேனி மாவட்டம் மேற்குபோடி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது என பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து அதன் கருத்து அடிப்படையில் முடிவெடுப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காத்துள்ளது.

 

 •  அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

 •  வறட்சி நிவாரண உதவி அளிக்கும்படி இலங்கை அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கைக்கு 100 டன் அரிசியும், 8 தண்ணீர் டேங்கர் லாரிகளும் அளிப்பது என்ற முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது.

 

 •  பாரத் ஸ்டேஜ் என்றழைக்கப்படும் பி.எஸ்-III புகை மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்தியாவிலுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பி.எஸ்-III புகை மாசு விதிகளின் கீழ் தயாரித்த 8.24லட்சம் வாகனங்களை இன்னும் விற்பனை செய்யாமல் வைத்துள்ளன.

 

 •  மாதச்சம்பளம் பெறும் தனிநபர்கள் ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என இலாகா வற்புறுத்தி வருகிறது. இந்நிலையில் 2017, 18ம் ஆண்டுக்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்வது தொடர்பான படிவம் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.

 

 •  நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1 ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை 15%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 •  பாஜகவின் தேசிய இளைஞரணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  ‘கோடை காலப் புகலிடம்’ மற்றும் ‘மலைகளின் ராணி’ என அழைக்கப்படும் சிம்லா இமாசலபிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202மீ உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972ல் உருவாக்கப்பட்டது. காளிதேவியின் மற்றொரு பெயரான ‘சியாமளா’ என்ற பெயரிலிருந்து சிம்லா என்ற பெயர் உருவானது. சிம்லாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

 

 •  மராட்டிய மாநிலம் பிஹிரா என்ற இடத்தில் 46.5டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. உலகில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • மலேசிய பிரதமர் நஜூப் ரசாக் 5 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். 31ம் தேதி தில்லி செல்கிறார். ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்தும் பல்வேறு உலக நடப்புகள் குறித்தும் பேச உள்ளார்.

 

 •  வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிலத்தில் புதையுண்ட 2100 முதல் 2300 வரையிலான ஆண்டுகளுக்கு முந்தைய அரண்மனைக் கட்டடம் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. 2790 சதுர மீட்டர் பரப்பளவுடையது.

 

 •  சுற்றுச்சூழல் விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் கொள்கைத் திட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்து பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கொள்கை திட்டத்தை வகுக்குமாறு சம்பந்தம்பட்ட அனைத்து துறைகளுக்கும் புதிய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 •  வரும் 2022ம் ஆண்;டு ஒரு ராட்சத சிறுகோள் பூமியின் மீது மோதும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சிறுகோள் டைனோசர்கள் இனத்தை அழித்த சிறுகோள் போன்று பயங்கர சக்தியுடையதாக இருக்கும் நாசா என தெரிவித்துள்ளது. இது பூமியின் மீது மோதினால் உலகில் உயிரினங்கள் அழிவது உண்மையாகி விடும் என நாசா எச்சரித்துள்ளது. எனினும் அச்சிறுகோளை திசை திருப்பி பூமியை பாதுகாக்க நாசா ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.

 

 •  ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான அறிவிக்கையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டார். ஐரோப்பிய யூனியனில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்காக லிஸ்பன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன் படி வரும் 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி பிரிட்டன் முறைப்படி வெளியேறும்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • சென்னை போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவ பல்கலை கழகத்தில் “விளையாட்டு மற்றும் அறிவியலுக்கான மையம்” என்ற பெயரில் புதிய விளையாட்டு அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.

 

 •  பாகிஸ்தான் சூப்பர்லீக் டி20 போட்டியில் விளையாடிய போது ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபடுமாறு சூதாட்டக்காரர்கள் அணுகியது குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் தெரிவிக்காததன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 •  இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

 

 •  ரஷியாவில் 2018ல் நடைபெறவுள்ள உலககோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க முதல் அணியாக பிரேசில் தகுதி பெற்றுள்ளது.

 

 •  ஹார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக செஸ் வீரர் ஸ்ரீநாத் நாராயணன் இந்தியாவின் 46வது கிராண்ட் மாஸ்டர் ஆவது உறுதியாகியுள்ளது. இவர் 2005ல் பிரான்சில் நடைபெற்ற 12 வயதுக்குள்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • அஜினமோட்டோ குறித்து தவறான தகவல்களைப் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அஜினமோட்டோ இந்திய சந்தையாக்கல் துறை மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் தெரிவித்தார்.

 

 •  டாடா நிறுவனம் முதன் முதலாக செடான் பிரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வகைகளில் டிகோர் என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த காரின் விற்பனையக விலை 4.7லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

 

 •  செயில் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான துர்காபூரில் உள்ள அலாய் எஃகு உருக்கு சாலை, சேலம் மற்றும் பத்ரவரி எஃகு உருக்கு சாலைகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு கார்ப்பரேட் முகவர்கள், பணியாளர்கள் ஆகியோர்களை விதிகளுக்கு மீறி வெளிநாடு சுற்றுலா அழைத்து சென்றதற்காக ரூ 15 லட்சமும், சில மார்க்கெட்டிங் விதிமீறலுக்கு ரூ 5 லட்சமும் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் 20 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

 

 •  வெளிநாடுகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதை விட ஏற்றுமதி செய்வது அதாவது பிற நாடுகளுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள் நிறுவனம் புதிய ஆன்லைன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. ‘புரூக்ஸ்’ என்கிற பெயரிலான இந்த சைக்கிள்களை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என நிறுவன நிர்வாகி இயக்குநர் எல்.ராம்குமார் தெரிவித்தார்.

 

Call Now