March 03

Date:03 Mar, 2017

March 03

We Shine Daily News

jkpo;

மார்ச் 03

தேசிய செய்திகள் :

3-3-17 india

 • இந்திய அணு சக்தி துறையும், தேசிய பத்திரிக்கையாளர் சங்கமும் இணைந்து நடத்தும் ஒருவாரப் பயிலரங்கு மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் தொடங்கியது. இதில் அணு உலைக்கு எதிராகப் போராடுவோர் அணு கதிரியக்க மருந்து தயாரிப்பையும் முடக்கும் வகையில் நடத்தும் போராட்டங்களை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர். கே.எஸ்.பிரதீப் குமார் திட்டவட்டமாக கூறினார்.

 

 • சர்வதேச தரத்திலான மெட்ரோ ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதில் தில்லி மெட்ரோவிற்கு புதிய சிறப்பு கிடைத்துள்ளது.  ஒரு மாதத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின் போது நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இடையே சுமார் 200 தூண்களுக்கு இடையே நிறுத்தப்படும் ரயில் ஓடுபாதைகளை அமைத்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

 

 • ரயில்வே இணையதளம் வாயிலாக முதன் முறையாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது ஆதார்எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

 

 • ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கியுள்ள வரைவு ஜிஎஸ்டி மசோதாவில் தற்போது 14 சதவீதமாக உள்ள உச்ச வரிவிகிதத்தை 20 சதவீதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்காலத்தில் 40 சதவீதமாக அரசு உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது.

 

 • சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக அதிகபட்ச வயதுவரம்பை இந்தியா பார் கவுன்சில் உயர்த்தியுள்ளது. ஐந்தாண்டு பட்டப்படிப்புகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 20லிருந்து 22 ஆகவும், மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 30லிருந்து 45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க நிறுவனங்களால் தயாரித்து அளிக்கப்படுகிற பெப்சி, கோக் குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் வணிகர் அமைப்புகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • ஸ்கார்பியன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ள கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி தகர்க்கும் ஏவுகணை பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

 

 • உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ப்ரமார்த் நிகேதனில் ‘சர்வதேச யோகா திருவிழா’ மார்ச் 1ல் தொடங்கியது. இதில் காணொலி மூலம் உரையாற்றிய மோடி பயங்கரவாத சவால்களுடன் உலகம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நிரந்தர அமைதிக்கான வழியை யோகாசனம் காட்டுகிறது என கூறினார்.

 

 • 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி ஆகஸ்ட் 22, 2016ல் தொடங்கப்பட்டது. புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி நவம்பர் 23, 2016ல் தொடங்கப்பட்டது.

 

 • ஆந்திரப் பிரதேசத்துக்கான புதிய தலைநகர் வெலகபூடி பகுதியில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தை ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

3-3-17 world

 • கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் தினம் தொடங்குவதற்கு முந்தைய செவ்வாய் கிழமையை ‘பேன் கேக் செவ்வாய்’ தினமாக கொண்டாடுகின்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 12716 பேருக்கு ‘பேன் கேக்குகள்’ விநியோகம் செய்தனர். உலகிலேயே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோருக்கு பேன்கேக் தயாரித்து வழங்கியதற்காக இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.

 

 • பாண்டாக்களை பாதுகாப்பதற்காக 27000 சதுர கிமீ அளவிலான தேசிய வனப்பகுதியை ஒதுக்கியுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. 3 வகையான வன பாண்டாக்களை பாதுகாக்க ஷான்ஷி, சச்சுவான் மற்றும் கேன்சூ ஆகிய மாகாணங்களில் அந்த பூங்கா அமையவுள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என பாராளுமன்ற செனட் சபை நிதிக்குழுவை ஜனநாயக கட்சி எம்பிக்கள் செனட்சபை வலியுறுத்தியுள்ளனர்.

 

 • அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய முதல் ஏவுகணை தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் பலியாகினர்.

 

 • சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்திலுள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கீழே இறங்குவதற்கு தங்கத்தினாலான எஸ்கலேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 • சிரியாவில் அலெப்போ நகரில் கடந்த ஆண்டு நடந்த சண்டையின் போது அனைத்து தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை கமிஷன் அறிக்கை கூறுகிறது.

 

விளையாட்டுச் செய்திகள் :

3-3-17 sports

 • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி அட்டக்காரரும் ஆல்ரவுண்டருமான வெய்ன் சுமித் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 • 2வது பாகிஸ்தான் சூப்பர்லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இறுதி போட்டி மார்ச் 5ல் நடக்கிறது.

 

 • ஐதராபாத்தில் நடந்த தேசிய மூத்தோர் தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன்; பட்டத்தை கைப்பற்றியது. இதில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நம்பிசேஷன் 800மீ, 1500மீ, 5ஆயிரம் மீ ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • இந்தியப் பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டி சென்னையில் மார்ச்-2ல் தொடங்கியது.

 

 • பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி கண்டது.

 

 • சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் விவா சென்னை அணி ஐசிஎப் அணியை தோற்கடித்தது.

 

 • ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

3-3-17 econo

 • விலை நிறுவனத்தின் மின்விசிறிகள் அறிமுக விழா சென்னையில் மார்ச் 2ல் நடைபெற்றது. இதில் வாட்டர்ஹ_ட்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ள வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மின்விசிறி சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ளது.

 

 • தற்போது உலக ஒயின் சந்தையில் சீனா 4ம் இடம் வகித்து வருகிறது.

 

 • டிவிஎஸ் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவான டிவிஎஸ் ரிகோ சம்ளை செயின் சர்வீஸஸ், இங்கிலாந்தை சேர்ந்த எஸ்பிசி இண்டர்நேஷனல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

 

 • தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்து வரும் சூழ்நிலையில் ஏரோவாய்ஸ் என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட இருக்கிறது. மொபைல் பேமண்ட் நிறுவனமான ஆட்பே நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஏரோவாய்ஸ் செயல்படும்.

 

Call Now