March 29

Date:30 Mar, 2017

March 29

We Shine Daily News

jkpo;

மார்ச் 29

தேசிய செய்திகள் :

 • தற்போது நடைமுறையிலுள்ள ஐந்தாண்டு திட்டத்துக்குப் பதிலாக ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்றாண்டு செயல்திட்டத்தை அமல்படுத்த நீதி ஆயோக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போதைய 12வது ஐந்தாண்டுத் திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

 

 • மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ‘பி.சி.ராய் தேசியவிருது’, ‘ஹரி ஓம் ஆஷ்ரம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. 2014, 2015, 2016ம் ஆண்டுகளுக்கான விருது நிகழ்வுகள் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவர்கள் 6 பேருக்கு தேசிய விருது கிடைத்தது.

 

 • துவரம்பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோதுமை, துவரம்பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரிவிதிப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை மார்ச் 17ம் தேதி வெளியிடப்பட்டது. உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

 • கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை ஜன் தன் சேமிப்புக் கணக்குகளை பராமரிப்பதற்காக ரூ. 775 கோடி செலவழித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • போலியான எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய ஜாதிச் சான்றிதழ்களின் அடிப்படையில் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்து தகவல் சேகரிக்க மத்திய அரசு 2010ல் முயற்சியெடுத்தது. அதன்படி சேகரித்த தகவலின் பேரில் மொத்தம் 1832 நியமனங்கள் போலியான ஜாதி சான்றிதழ்கள் அடிப்படையில் அரசுத் துறையில் நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

 • மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984ம் ஆண்டு விஷவாயு கசிவு விபத்து ஏற்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவன தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 336 டன் நச்சுக்கழிவுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவற்றை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அங்கிருந்து அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • முன்னாள் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று (மார்ச் 29) புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

 

 •  தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் அதிக ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் அகமது கத்ராடா மார்ச் 28ல் உயிரிழந்தார். தென் ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக அதிபராக 1994ல் நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்நாட்டின் கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் அகமது கத்ராடா. இவருக்கு இந்தியா சார்பில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது கடந்த 2005ல் வழங்கப்பட்டது. இவர் நிறவெறிக்கு எதிராக போராடி 26 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

 

 •  ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கிமீ வேகத்தில் கடுமையான ‘டெப்பி’ என்ற சூறாவளி தாக்கியது.

 

 •  டிரோன்கள் எனப்படும் சிறிய ரக பறக்கும் கருவிகளை ரேடியோ சிக்னல் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கம் செய்யும் அதிநவீன துப்பாக்கிகளை சீனா கண்டுபிடித்துள்ளது. இதன் விலை ரூ 25லட்சம் என கூறப்படுகிறது.

 

 •  ஜோர்டன் மற்றும் சவுதிஅரேபியா நாடுகளுக்கிடையில் 15 பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சவுதி மன்னர் சல்மான் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகின.

 

 •  ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது.

 

 •  ஜப்பானின் ஃபுகுயி மாவட்டத்தில் அமைந்துள்ளது தகஹிமா அணுமின் நிலையம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே 350கிமீ தொலைவிலுள்ள தகஹிமா மின் நிலையத்தில் இரு அணு உலைகளின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ‘பார்டர்- கவஸ்கர் டிராபி’க்கான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

 •  போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் அவர் பிறந்த மாடெரியா தீவின் ஃபன்சால் நகரத்திலுள்ள விமான நிலையத்துக்கு சூட்டப்படவுள்ளது.

 

 •  5வது ஆசிய பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, ஏப்ரல் 2ல் போபாலில் தொடங்குகிறது.

 

 •  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய- ஓசியானியா குரூப்-1 2வது சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார்.

 

 •  ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.

 

 •  உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் சிலிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உதவி நடுவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடையும், ரூ 6½ லட்சம் அபராதமும் விதித்தது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பேட்டரி வெடிப்பு புகாரினால் திரும்பப் பெறப்பட்ட தனது நோட்-7 மாடல் அலைபேசிகளை மறுஉருவாக்கம் செய்து விற்க சாம்சங் தயாராகி வருகிறது.

 

 •  ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட 43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மக்களவையில் தெரிவித்தார்.

 

 •  ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறவனம், புதிய இலகுரக வர்த்தக வாகனங்களை உருவாக்கும் பணிகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.400 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

 

 •  பாரத ரிசர்வ் வங்கி மெய் நிகர் பணம் (விர்ச் சுவல் கரன்சி) எனப்படும் பிட்காயின் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வில்லை எனவே பிட்காயின் உபயோகம் சட்ட விரோதமானது என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம்மேக்தங்களாக மூடப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது.

 

 •  ஜப்பானின் ஃபுகுயி மாவட்டத்தில் அமைந்துள்ளது தகஹிமா அணுமின் நிலையம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே 350கிமீ தொலைவிலுள்ள தகஹிமா மின் நிலையத்தில் இரு அணு உலைகளின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வால் தெரிவித்தார்.

 

Call Now