March 28

Date:28 Mar, 2017

March 28

We Shine Daily News

jkpo;

மார்ச் 28

தேசிய செய்திகள் :

28-3-17 india

 • தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான உகாதி பண்டிகை மார்ச் 29ல் கொண்டாடப்படுகிறது. மராத்தியர்களின் வருடப்பிறப்பான குடிபட்வா, காஷ்மீர் பண்டிட்டுகளின் வருடப் பிறப்பான நவ்ரே உள்ளிட்டவையும் மார்ச் 29ல் கொண்டாடப்படுகிறது

 

 •  இந்தியாவில் சென்னை உள்பட 9 நகரங்கள் வெப்பச் சீற்றத்தினால் அதிக துன்பங்களை சந்திக்க நேரிடும் என இங்கிலாந்து ஆய்வுக்குழு கூறியுள்ளது.

 

 •  நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், 22 நிறுவனங்களுக்கும் இடையே நேற்று மார்ச் 27 ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 •  கர்நாடக வனப்பகுதிகளை இயற்கை காட்சிகளுடன் கண்டுகளிப்பதற்கு ஏதுவாக ‘வன வருடம் 2017’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தை ‘வன வருடம்’ என்றும் அறிவித்துள்ளார்.

 

 •  மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா மார்ச் 27 பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதாவில் கடுமையான மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை விதிப்பதை இந்த சட்டம் தடுக்கிறது. மேலும் மனநலம் பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் தரமான சிகிச்சை கிடைக்கவும், எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்கிற உரிமையை நோயாளிகளுக்கு வழங்கிடவும் புதிய மசோதா வகை செய்கிறது.

 

 •  ராயலசீமா பகுதியில் வறட்சியைப் போக்க கொண்டுவரப்பட்ட ஆந்திராவின் கோதாவரியையும், கிருஷ்ணாவையும் இணைக்கும் நதி இணைப்புத் திட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

 •  சரக்கு சேவை வரிவிதிப்பு தொடர்பான 4 துணை மசோதாக்கள் மாநிலங்களவையில் மார்ச் 27ல் தாக்கல் செய்யப்பட்டது.

 

 •  உத்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகளை எடுத்து யோகி ஆதித்யநாத் சாதனை புரிந்துள்ளார்.

 

 •  சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பன்னாட்டு செய்திகள் :

28-3-17 worldd

 • பயங்கரவாதிகள் உடுருவலைத் தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லையில் 250 கிமீ தூரத்துக்கு பாகிஸ்தான் தடுப்புவேலி அமைக்கும் பணியை தொடங்கியது. 1893ல் ஆங்கிலேயர்களால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் வரையறுக்கப்பட்ட துராந் எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 •  சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. சிங்கப்பூரில் அரசு ஆதரவுடன் கடந்த 2000ம் ஆண்டில் ‘வளர் தமிழ் இயக்கம்’ தொடங்கப்பட்டது. கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்மொழி திருவிழா ஏப்ரல் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. சிங்கப்பூர் தொழில்துறை அமைச்சர் ஈஸ்வரன் விழாவைத் தொடங்கி வைக்கிறார். விழாவில் 52 கலைநிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. ஏப்ரல் 28 முதல் 30 வரை பொன்னியின் செல்வன் நாவல் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.

 

 •  பெர்லினில் உள்ள ஜெர்மன் தலைநகர் யுனெஸ்கோ பட்டியலில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட தங்க நாணயம் களவாடப்பட்டுள்ளது. இந்த தங்க நாணயத்தின் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாகும். இது 53 செமீ அகலமும் 3செமீ அடர்த்தியும் கொண்டது. இதில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ராணி படம் பொறிக்கப்பட்டுள்ளது. போட் மியூசியம் உலகின் மிகப்பெரிய நாணய சேகரிப்பு இடமாகும். இங்கு சுமார் பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த சுமார் 102000 நாணயங்களும், பழைய 50000 ரோமன் நாணயங்களும் உள்ளன.

 

 •  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரை நகரை (மார்ச் 28) இன்று ‘டெபி’ என்ற பயங்கர சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 300 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. ‘டெபி’ புயல் 4ம் எண் புயல்காற்று என வகைப்படுத்தப் பட்டுள்ளது. 2011 யாசி சூறாவளிக்கு பிறகு ஆஸ்திரேலியாவை தாக்கும் பயங்கரமான புயல் ‘டெபி’ புயலாகும்.

 

 •  ஊடல் ஊனமுற்றவர்கள் நடக்க உதவுகிற, உடலிலேயே அணிந்து கொள்ளும் படியான சீனத்தயாரிப்பு ரோபாட்டுகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. சீனாவை சேர்ந்த ‘போரியர் இன்டலிஜென்ஸ்’ நிறுவனம் இந்த ரோபாட்டுகளை தயாரிக்க உள்ளது. இந்த ரோபாட்டுக்கு ‘தி போரியர் ஒ1’ என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த ரோபாட்டானது 20 கிலோ எடையுடையது. பக்கவாதம் அல்லது முதுகுதண்ட பாதிப்பு உள்ளவர்களை நடப்பதற்கு உதவி செய்யும் எக்கோஸ்கிலிட்டன் ரோபாட் மாடலில், இண்டஸ்ட்ரியல் டிசைன் எனும் முறையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

 

 •  105 ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பகுதிகளை நேரில் சுற்றிப் பார்ப்பதற்கான வாய்ப்பை ‘புளு மார்பிள்’ என்ற தனியார் பிரிட்டன் நிறுவனம் வழங்கவுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் 4000மீ ஆழத்தில் தரை தட்டியிருக்கும் டைட்டானிக் கப்பலை தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் ‘புளு மார்பிள்’ நிறுவனம் சுற்றிக் காட்டவுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

28-3-17spor

 • தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

 •  2017 ஆடவர் உலக ஹாக்கி லீக் பைனல், 2018 ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஆகியவை ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறுகின்றன. உலக ஹாக்கி லீக் பைனல் போட்டி 2017 டிசம்பர் 1 முதல் 10 வரையும், உலக கோப்பை ஹாக்கி போட்டி 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரையும் நடைபெற உள்ளன.

 

 •  ஹிமாச்சல பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 •  17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபரில் 28ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நவிமும்பை மற்றும் குவாஹாட்டி நகரங்களில் நடைபெறுகின்றன.

 

 •  கனடாவின் வான்கோவர் நகரில் நடைபெற்று வரும் உலக மகளிர் ஹாக்கி லீக் 2வது சுற்று ஆட்டத்தில் கனடா அணி இந்திய அணியை தோற்கடித்தது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

28-3-17 economic

 • ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ காரை புதுதில்லி அருகே நொய்டாவில் திங்கள் கிழமை அறிமுகம் செய்தது.

 

 • கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கிக்கு சிறந்த சிறிய வங்கிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் ரூ 1 லட்சம் கோடிக்கும் குறைவான தொகையை நிர்வகிக்கும் சிறிய வங்கிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் ஸ்மார்ட் போன் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் வரிச்சலுகை கோரிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

 

 •  இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்படுவதும் குறைக்கப்படும்.

Call Now