March 27

Date:27 Mar, 2017

March 27

We Shine Daily News

jkpo;

மார்ச் 27

தேசிய செய்திகள் :

27-3-17 india

 • இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை, மிகவும் பாதுகாப்பானவை என தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலமாகவே தேர்தல் நடைபெற்று வருகின்றன. உலகளவில் இந்தியா, ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15க்கும் குறைவான நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையத்துடனோ, கணினிகளுடனோ இணைக்கப்படுவதில்லை.

 

 •  தற்போது செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் தேசிய நல ஆணையத்தைக் கலைத்துவிட்டு அரசியல் சாசன அந்தஸ்து கொண்ட புதிய ஆணையத்தை சமூகம் மற்றும் கல்விரீதியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையம் என்ற பெயரில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சிவில் நீதிமன்ற அந்தஸ்து கொண்ட இந்த அமைப்பு சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும்.

 

 •  நாட்டில் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்கள் இணையதளம் வாயிலாக அரசின் சேவைகள் உள்பட பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதற்காக 500 ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி மையங்களை ரயில்வே துறை அமைக்கவுள்ளது. ‘ரயில் வயர் ஸாத்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

 •  அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “டைம்” பத்திரிக்கை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டுக்கான பட்டியலிலும் மீண்டும் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களில் ஒருவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், கடந்த ஆண்டுக்கான “டைம்” பத்திரிக்கையின் வாக்கெடுப்பிலும் பிரதமர் மோடியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வாக்கெடுப்பில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயலதிகாரி சத்யா நாதௌ;ளா, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

 

 •  கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

 •  காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கு மத்திய அரசு திட்மிட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா ஆகிய 6 நாடுகளில் கடந்த 2015ம் ஆண்டில் காசநோய்க்கு 18லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் காசநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடும்போது 60 சதவீதம் ஆகும்.

 

 •  மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள் :

27-3-17 world

 • லண்டன் நகரில் இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு வெளியே கடந்த மார்ச் 22ந் தேதி பயங்கரவாதி காலீத் மசூத் தனியாக வந்து தாக்குதல் நடத்தி உள்ளதாக ஸ்காட்லாந்து போலீஸ் நேற்று உறுதி செய்தது.

 

 •  அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஸ்ரீநகரில் குச்சிபோட்லா சுடப்பட்ட போது அவரைக் காப்பாற்ற முயன்ற இயன் கிரில்லாட்டிற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 65.38 லட்சம்) இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா பரிசளித்தார்.

 

 •  ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், கேரிலாம் (59) என்ற பெண் வெற்றி பெற்றார். ஹாங்காங்கின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அதிவேக விமானம் ‘பேபி பூம்’ தயாரிக்கப்படுகிறது. அந்த விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார். அதற்காக இதுவரை ரூ 21 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மணிக்கு 2335 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்து செல்ல கூடியது. இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது.

 

 •  ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டில் கசாய் மாகாணத்தில் ‘காம்வினா நசபு’ என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இக்குழுவின் தலைவர் ஜூன் பியர்ரே பண்டியை பாதுகாப்ப படைகள் கொன்விட்டன. எனவே பாதுகாப்புப் படையினர் 40 பேரின் தலையை கிளர்ச்சியாளர்கள் துண்டித்துவிட்டனர்.

 

 •  வாட்ஸ் அப்பில் தங்களது பயனாளிகள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க அவற்றை குறியீடுகளாக முழுமையாக மாற்றி அனுப்புகின்றன. இதனால் அத்தகவல்களை யாரும் இடைமறித்து படித்துப் பார்க்க முடியாது. இந்த ரகசிய முறை பயனாளிகளுக்கு அவர்களது தகவல் கசியாது என்னும் பாதுகாப்புணர்வைத் தருகிறது. இம்முறையை எண்ட் டு எண்ட் எனகிரிப்ஷன் என்கின்றனர். இங்கிலாந்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆம்பெர் ரூட், வாட்ஸ் அப் போன்ற தகவல் பரிமாற்றங்களை தீவிரவாதிகள் ரகசியமாக செய்து கொள்கின்றனர் இது ஆபத்தாக மாறிவிட்டது என கூறினார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

27-3-17 sports

 • அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

 

 •  சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது பார்முலா 1 வகை கார் பந்தயம். இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த சீசனின் முதல் பந்தயம் ஆஸ்திரேலியன் கிராண்ட்ப்ரீ மெல்போர்ன் நகரில் அரங்கேறியது. இதில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 24 நிமிடம் 11.672 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.

 

 •  பெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் ஓ.என்.ஜி.சி அணியும் மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் பட்டம் வென்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

27-3-17 econo

 • விண்வெளி தொழில்நுட்பத்தைக் கட்டமைக்கவும் அதன் பயன்பாட்டை நாட்டின் பல்வேறு தேவைகளுக்கு உபயோகிக்கவும் 1969, ஆகஸ்ட் 15ல் இஸ்ரோ தொடங்கப்பட்டது. இஸ்ரோ 87 விண்கலங்களை உருவாக்கி விண்ணில் செலுத்தியது. உலகின் 23 நாடுகளிலிருந்து 180 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளது.

 

 •  அமுல் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகளை நுகர்வோர்கள் வாங்க வேண்டாம். ஆவை வெம் தாவர சமையல் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவை உடலுக்கு நல்லதல்ல என கூறும் வகையில் புதிய விளம்பரம் வெளியானது. ஆதற்கு எதிராக ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

 •  இந்திய நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டுவதில் திட்டமிட்டுள்ளது.

 

 •  உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளது.

 

 •  பொதுத்துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்கும் திட்டத்தை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

 

Call Now