March 26

Date:26 Mar, 2017

March 26

We Shine Daily News

jkpo;

மார்ச் 26

தேசிய செய்திகள் :

26-3-17 india

 • ராயலசீமா மாவட்டங்களில் வறட்சியைப் போக்க கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமி அணைக்கட்டு மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட அணையாக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

 •  2016 -17ம் ஆண்டிற்காக நிதி ஆண்டுக்கணக்கு நிறைவையொட்டி வருமானவரி செலுத்துவதற்கு வசதியாக மார்ச் 26 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 •  ஒரு நாளைக்கு 1400 பேர் காசநோய் காரணமாக இந்தியாவில் இறப்பதாக அரசின் தேசிய காசநோய் செயலாக்க திட்ட (2017 -2025) அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய காசநோய் செயலாக்க திட்டம் ஒரு மாதத்திற்குள் இறுதி வடிவம் பெற உள்ளது. உதவிகளை செய்வதற்கென ‘நிக்ஷய்’ எனப்படும் சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் நோயறிதல், சிகிச்சை, குணப்படுத்துதல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும்.

 

 •  ராமர் கோவில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற லட்சியத்தை வலியுறுத்தி ‘ராம் மந்திர் நிர்மாண் சங்கல்ப்’ என்னும் புதிய இயக்கத்தை ஏப்ரல் 3ம் தேதி விசுவ இந்து பரிஷத் தொடங்குகிறது.

 

 •  நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு மார்ச் 27ல் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. இதில் தமிழகத்தின் 31 இடங்கள் இடம் பெற்றுள்ளன.

 

 •  செல்லிடப்பேசி இணைப்பு வைத்திருக்கும் சந்தாதாரர்களிடமிருந்து ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 •  எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 51 ஆண்டு கால வரலாற்றில் தாக்குதல் பிரிவின் முதல் பெண் அதிகாரியாக தனு ஸ்ரீ பாரீக் மார்ச் 25ல் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2014ம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையின் முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரை சேர்ந்தவர். எல்லை பாதுகாப்பு படை கடந்த 1965ல் உருவாக்கப்பட்டது. அதுமுதல் கடந்த 51 ஆண்டுகளாக இந்த படையின் தாக்குதல் பிரிவில் பெண்கள் யாரும் அதிகாரியாக தேர்வு செய்யப்பட வில்லை.

 

பன்னாட்டு செய்திகள் :

26-3-17 world

 • கடல்நீர் மட்டம் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக் கரைந்துள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

 

 •  அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான காரியாசின் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பாகிஸ்தான் பகுதியிலுள்ள பலூசிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். செப்டம்பர் 20, 2008 இஸ்லமாபாத்தில் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆவார்.

 

 •  அமெரிக்காவில் அமலிலுள்ள ‘ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு மாற்றாக டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டு வந்த மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இதற்குப் பதிலாக சிறப்பானதொரு புதிய சுகாதாரத்திட்டம் வகுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 •  இராக்கின் மொசூல் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 •  ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் தெற்காசிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என ஐ.நா.அமைதிப் படைத் தலைவர் ஹெர்வ் லாட்ஸஸ் பாராட்டு தெரிவித்தார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

26-3 sports'

 • மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2வது சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

 •  இந்தியா ‘ஏ’ (புளு), இந்தியா ‘பி’ (ரெட்) விஜய் ஹசாரே கோப்பை சாம்பியன் தமிழ்நாடு ஆகிய 3 அணிகள் இடையிலான தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் தொடங்கியது. இதில் இந்தியா ‘பி’ அணி வெற்றி பெற்றது.

 

 •  பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், ஓஎன்ஜிசி அணியும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

26-3 india

 • எஸ்பிஐ லைப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்தை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

 

 •  பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிரா வங்கி, விருப்புரிமைப் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் ரூ 300 கோடி மூலதனம் திரட்டுகிறது.

 

 •  ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் பத்தாண்டுகளாக கொண்டிருந்த வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்தது.

 

 •  பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு போட்டி ஒழுங்கு முறை ஆணையம் ரூ 591 கோடி அபராதம் விதித்திருக்கிறது.

 

 •  ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து ‘தி இந்து’ நடத்தும் ஆட்டோ மொபைல் வாகன கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. ஹீரோ கிளாமர் 125சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

Call Now