March 25

Date:26 Mar, 2017

March 25

We Shine Daily News

jkpo;

மார்ச் 25

தேசிய செய்திகள் :

25-3- 17 world

 • சூரிய சக்தியை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எரிபொருள் செலவில் ரூ. 41000 கோ மிச்சப்படுத்த இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 

 •  இந்தியாவின் கால்நடை வளர்ப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாரதிய பசுபலன் நிகாம் லிமிடெட் நிறுவனம் 2017ம் ஆண்டிற்கான 7661 டீலர் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

 

 •  ஓடிஸா மாநிலத்தில் 1342 கிராம ஊராட்சிகளில் இன்னும் இரு ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4202 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 •  உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தை மதரீதியாக விமர்சனம் செய்து அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 •  2013 -14, 2014 -15, 2015 -16 மற்றும் நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரையில் 2534 தரப்பினரிடம் வருமான வரிதுறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத ரூ 45622 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதிதுறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் கங்குவார் எழுத்து மூலம் தெரிவித்தார்.

 

 •  இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ போர்க் கப்பலில் வான் எல்லையை தாக்கும் ஏவுகணை சோதனை முயற்சி முதன் முறையாக நடத்தப்பட்டது. இச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

பன்னாட்டு செய்திகள் :

25-3- 17 sports

 • சீனா தலைநகர் பெய்ஜிங்கில் ஓட்டுநரில்லா சுரங்க ரயில் நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 16.6 கிமீ யங்ஃபங் சுரங்கப் பாதையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சீனாவில் முதன்முதலாக ஓட்டுநரில்லா சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் தற்போது 574 கிமீ போக்குவரத்துக்கு 19 ரயில் பாதைகள் உள்ளன. 350 கிமீ போக்குவரத்துக்கு 20 சுரங்க ரயில் பாதைகள் நடப்பு ஆண்டில் கட்டமைக்கப்பட உள்ளன.

 

 •  பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தனது மிகப்பெரிய கூட்டாளி என அமெரிக்க அரசு 2016ல் அறிவித்தது. பின்னர் ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  தற்போது பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஒப்புக் கொண்டுள்ளன.

 

 •  பேஸ்புக்கில் கூடிய விரைவில் பேஸ்புக் பயனாளர்கள் தங்களது நட்புகளுக்கு கமெண்ட் இடும்போது அழகழகான அனிமேட்டட் படங்களை லைவ் ஆக அனுப்பும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது.  அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு கொண்டு இருக்கின்றன என டெக்கிரஞ்ச்.காம் இணையதளம் ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளது.

 

 •  உலகம் முழுவதும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை பூமி நேரம் (எர்த் ஹவர்) அனுசரிக்கப்படுகிறது. மார்ச் 25 அன்று 10வது பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 172 நாடுகளிலுள்ள சுமார் 7000 நகரங்கள் இதில் பங்கு பெற்றன. உலகம் முழுவதும் எர்த் ஹவர் தினத்தை முன்னிட்டு இரவு 8.30 முதல் 9.30 வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டடு. டெல்லி, ஜனாதிபரி மாளிகை, கேப்ளே ஆப் இந்தியா, இந்தியா கேட் ஆகிய இடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

 

 •  எகிப்து நாட்டின் சர்வாதிகாரியான முபாரக் சுமார் 29 ஆண்டுகள் எகிப்து நாட்டை ஆட்சி செய்தார். கடந்த 2011ம் ஆண்டில் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆதை ஒடுக்க முபாரக் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் 850 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 2012ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 6 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

 

 •  பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதலை நடத்திய காலித் மசூத் என்ற நபர் சவூதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். நவம்பர் 2005- 2006 வரையிலும் பிறகு ஏப்ரல் 2008 – 2009 வரையிலும் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார் என சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

25-3 spor

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சஷாங்க் மனோகர் அடுத்த சேர்மன் தேர்வு செய்யப்படும் வரையில் ராஜினாமா முடிவை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 •  பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் மார்ச் 24 நடைபெற்ற லீக் ஆட்டத்தின் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணியை தென்னக ரயில்வே அணி வீழ்த்தியது.

 

 •  2018 உலக கோப்பை கால்பந்து தகுதிப் போட்டியில் உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றது.

 

 •  துபையில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஃபாஸா சர்வதேச ஐபிசி தடகள கிராண்ட்ஃப்ரீ’ போட்டியில் இந்தியா 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றது. 3 தங்கப்பதக்கங்களை சுந்தர் சிங் குர்ஜர் பெற்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

25-3-17 eco

 • ஓப்போ நிறுவனம் புதிய எப் 3 ரக மொபைலை புதுடெல்லியில் அறிமுகம் செய்தது. இரு முன் பக்க கேமிராக்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல்போன் விலை 30990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ நிறுவன புதிய விளம்பர தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  சந்தை மதிப்பு அடிப்படையில் விமான போக்குவரத்து துறையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்நிறுவன சந்தை மதிப்பு ரூ 5646 கோடி.

 

 •  65 பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநர்களே இல்லை என்றும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனங்கள் பதிவு துறைக்கும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட 1355 தனியார் நிறுவனங்களிலும் பெண் இயக்குநர்கள் இல்லை என நிறுவனங்கள் பதிவு துறைக்கு கூறியுள்ளது.

 

 •  புதுதில்லியில் சாம்சங் நிறுவனம் சார்பில் -சாம்சங் பே- என்ற சாம்சங் செல்லிடப்பேசிகளுக்கான பணப்பரிவர்த்தனை செயலியை சாம்சங் இந்தியா நிறுவன மொபைல் தொழில் பிரிவின் துணை தலைவர் அசீம் வார்சி தெரிவித்தார்.

 

 •  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது.

 

Call Now