March 24

Date:26 Mar, 2017

March 24

We Shine Daily News

jkpo;

மார்ச் 24

தேசிய செய்திகள் :

24-3 ind

 • இந்தியாவுடன் நல்லுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து அண்டை நாடுகள் உடனான உறவுகள் சிறப்பாக இருப்பதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. எனவே ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் படி தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறினார்.

 

 •  தெலுங்கானாவின் நிசமாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்;ட மக்களின் நீண்டநாள் எதிர் பார்ப்பான பெத்தபள்ளி –நிசாமாபாத் ரயில்வே பாதையில் போக்குவரத்து துவக்கி வைக்கப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி மூலம் செகந்திராபாத்திலிருந்து இதனை துவக்கி வைக்க உள்ளார். 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இத்திட்டத்தை துவக்கினார். 23 ஆண்டுகள் கடந்து 180 கிமீ தூரம் கொண்ட இத்திட்டம் ரூ 180 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 •  பாகிஸ்தானில் லாகூர் நகரின் தியாகிகளின் 86வது நினைவு தினமாக மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது. பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரை ‘நியாயமற்ற வகையில்’ தூக்கிலிட்டதற்கு பிரிட்டிஷ் அரசி அவர்களது ஷட்மான் சவுக்கிற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பகத்சிங் நினைவு அறக்கட்டளை கோரிக்கையை முன்வைத்துள்ளது.

 

 •  ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த ஆய்வு கவுன்சிலினில் நடத்தப்பட உள்ளது. இந்திய தொல்பொருள் துறையின் முன்னாள் இயக்குநர் அலோக் திரிபாதி தலைமையில் அக்டோபர் மாதம் இந்த ஆய்வு தொடங்க உள்ளது.

 

 •  கடந்த 1992ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆணையத்தை கலைத்துவிட்டு புதிய வடிவில் மற்றொரு ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

 

 •  உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் சந்திர அகர்வால் மார்ச் 23ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 •  கோதுமை மீதான இறக்குமதி வரிவிதிப்பை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

 • சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்கான புதிய தேசிய ஆணையமொன்றை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 

 • உச்ச நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்பட உள்ளதால் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் காகிதப் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.

 

 •  நாட்டில் 30 சதவீத நெசவாளர்களின் குடும்பத்தினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்ய வில்லை, ஒரு சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி முடித்துள்ளனர் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரான் தெரிவித்துள்ளார்.

 

 •  தமிழகத்தில் 1.5 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள், நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்து வருகின்றனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

24-3 wor

 • உக்ரைனுக்கு கிழக்கே ரஷிய எல்லையை ஒட்டிய கார்கில் பகுதியில் பலகிளியா நகரில் ராணுவ ஆயுதக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் மார்ச் 23ல் வெடித்துச் சிதறியதில் அப்பகுதியைச் சுற்றியிருந்த 20000 பேர் பாதுகாப்பு கருதி உடனடியான வெளியேற்றப்பட்டனர்.

 

 •  ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் ஓட்டெடுப்பு எதுவும் இன்றி நிறைவேறியது. மொத்தம் 40 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

 •  குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் வழியாக நியூயார்க் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமான நிலையம் பறவை மோதி விபத்துக்குள்ளானதில் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

 •  லண்டனைச் சேர்ந்த பொருளாதார சேவை நிறுவனம் ஐ.ஹெச்.எஸ்.மார்க்கிட் கடந்த 2016ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நிறுவனங்கள் பற்றிய தகவலை வெளியிட்டது. இதில் ஆப்பிளின் ஐபோன் 6 கடந்த ஆண்டு சந்தையில் அதிகளவு விற்பனையான ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. ஐபோன் 6ூ அடுத்த இடத்தை பிடித்தது.

 

 •  சிரியாவில் பொதுமக்கள் நிவாரண முகாமாகப் பயன்படுத்தப்பட்ட வடக்குப்பகுதி மாகாணமான ராக்காலில் அமைந்துள்ள பள்ளிக் கூடத்தில் அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

24-3-17 sports

 • பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் பெங்களுரு ராணுவ அணி வெற்றி பெற்றது.

 

 •  பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒடிஸாவில் மே 7 முதல் மே 21 வரை நடைபெற உள்ளது.

 

 •  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன்லீக் கால்பந்து போட்டியில் சென்னை எப்.சி அணி மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியனை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது.

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி மெக்சிகோ நாட்டிலுள்ள அகாபுல்கோவில் நடந்து வருகிறது. இதில் தகுதி சுற்றில் ஜெர்மனி வீரர் லோ ஆண்ட்ரியாஸ் முதலிடத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

24-3 ec

 • சென்னையில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.1100 கோடி கூடுதல் மூலதனம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  நாடு முழுவதும் எல்.ஐ.சியின் மொத்த வணிகம் ரூ.33000 கோடி என தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் கூறினார்.

 

 •  முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்பரண்டம் யுனிவர்சல் நிறுவனம் கேரள மாநிலம், கொச்சியில் எலக்டோரோ- மினரல் வளாகத்தில் 3 புதிய ஆலைகளை தொடங்கியது. ரூ.80 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலைகள் 25000 டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். இதன் விற்பனை மூலமாக கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.200 கோடி

 

 •  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ‘மாஸ்டர்கார்டு’ நிறுவனத்துடன் இணைந்து 2 கிரெடிட் கார்டுகள், 3 டெபிட் கார்டுகள் மற்றும் ஒரு மல்டி கரன்சி பயண கார்டு என 6 வகையான கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. 1. டைட்டானியம் கிரடிட் கார்டு
  2. பிளாட்டினம் கிரெடிட் கார்டு
  3. டைட்டானியம் டெபிட் கார்டு
  4. பிசினஸ் டெபிட் கார்டு
  5. டைட்டானியம் கான்டாக்ட் லெஸ் டெபிட் கார்டு
  6. மல்டி கரன்சி டிராவல் கார்டு

Call Now