March 23

Date:26 Mar, 2017

March 23

We Shine Daily News

jkpo;

மார்ச் 23

தேசிய செய்திகள் :

23-3-in

 • வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கு 11319 தன்னார்வ நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 •  வரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் அணுமின் உற்பத்தியை மும்மடங்காக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

 •  உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற 4 நாள்களில் கடமையில் கவனக்குறைவாக இருந்த 100 காவலர்கள் தற்காலிய பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 •  விவசாயக் கடன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நபார்டு வங்கியின் முதலீட்டை ரூ 30000 கோடியாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 •  தொழிலாளர் இழப்பீட்டு சட்ட திருத்த மசோதா(2016) படி பணியிடங்களில் நேரிடும் விபத்துக்களில் காயமடையும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

 

 •  பெண்கள் சாதனையாளர்களாக உருவெடுப்பதை மைய கருவாக கொண்ட ‘தங்கல்’ ஹிந்தி திரைப்படம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மார்ச் 23ல் திரையிடப்பட வுள்ளது.

 

 •  நாடு முழுவதும் சுமார் 1400 ஐஏஎஸ், சுமார் 900 ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

23-3-17 world

 • ஆசியாவிலேயே மிகவும் ஏழை நாடான கம்போடியாவில், தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதை அமெரிக்காவில் விற்பனை செய்து வரும் நிறுவனத்துக்கு யுனிசெஃப் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
  பிற உடலுறுப்புகள் மற்றும் ரத்த விற்பனையைப் போல, தாய்ப்பால் விற்பனையையும் சட்ட விரோதமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதனால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளதாகவும் கம்போடிய அரசு அறிவித்துள்ளது.

 

 • வரும் 2018ம் ஆண்டில் செயல்படுத்தப்படவிருக்கும் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டத்துக்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸாவுக்கு 1950 கோடி டாலர் (சுமார் ரூ 1.27லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இது 2033ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு நாசாவுக்கு அனுமதி வழங்கும் மசோதாவாகும்.

 

 • ரஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவையொட்டி ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் சிறிசேனா 3 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார்.

 

 • 2014- 15ம் நிதியாண்டில் உலகளவில் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு குறித்து ஐ.நா ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையானது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது. 188 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டதில் இந்தியா மிகவும் பின்தங்கி 131வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

23-3-17 sports

 • இந்தியா –கம்போடியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் கம்போடியாவை வீழ்த்தி வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது.

 

 •  ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ. 1 கோடியிலிருந்து ரூ 2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘பி’ கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ 1 கோடியாகவும், ‘சி’ கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

 • தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான 3வது அணியாக தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் நடத்தப்படவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டி அக்டோபர் 6 முதல் 28ம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஃபிஃபா ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

 

 •  பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

24-3-17 eco

 • ரூ6 லட்சம் முதல் ரூ18 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நடுத்தர குடும்பத்தினர் பெறும் வீட்டுக் கடனுக்கு வட்டிமானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 •  பெப்சிகோ இந்திய நிறுவனம் உடனடி டிபன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. மேலும் பிராபிகானா பழச்சாறு வரிசையில் புதிய பழச்சாற்றையும் அறிமுகம் செய்துள்ளது. கவார்க்கர் நியூட்ரிபுட்ஸ் மூலம் இந்திய காலை உணவில் பெப்சிகோ முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது.

 

 • சமூக வலைதளமான ட்விட்டர் 2015, ஆகஸ்ட் 1 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சம் பக்கங்களை முடக்கியது.

 

Call Now