March 22

Date:24 Mar, 2017

March 22

We Shine Daily News

jkpo;

மார்ச் 22

தேசிய செய்திகள் :

22-3-17 india

 • ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தாக்கல் செய்தார்.

 

 • ஐ.எஃப்.எஸ் (வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பல்லவி சாக்சார் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 • ஆந்திர மாநிலம் திருப்பதி விமான நிலையத்தின் பெயரை ஏழுமலையானை குறிப்பிடும் வகையில் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம், திருப்பதி’ என்றும் ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தின் பெயரை முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமாராவ் பெயரில் ‘நந்தமூரி தாரக ராமாராவ் விமானநிலையம், அமராவதி’ என்றும் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானமும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

 

 • ரயிலில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் விலை பட்டியலை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

 • ஜம்மு காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 88 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

22-3-17 india

 • சர்வதேச அளவில் செலவினம் குறைவாக உள்ள 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சென்னைக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. லண்டனைச் சேர்ந்த இக்கனாமிஸ்ட் இன்டெலிஜன்ஸ் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு இத்தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கஜகஸ்தான் தலைநகர் அல்மாட்டி நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களுரு 3வது இடமும், மும்பை 7வது இடமும், டெல்லி 10வது இடமும் பிடித்துள்ளது.

 

 • அமெரிக்காவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமூல் காப்பரை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். இவர் தற்போது கென்டக்கி மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக பணிபுரிகிறார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் இவரை நியமித்தார். கென்டக்கி மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

 

 • முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 8 நாடுகளை சேர்ந்த 10 விமான நிலையங்களிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு ஐபேட், டேப்லெட், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பெரிய மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

 

 • சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 155 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் நார்வே முதல் மகிழ்ச்சி நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா 122வது இடம் பெற்றுள்ளது.

 

 • பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ தூங்கும் வேலைக்கு சம்பளம் ரூ 9லட்சம் என்ற அறிய வாய்ப்பை வழங்குகிறது. இதனால் சீன இணையவாசிகளால் உலகின் மிக சொகுசான வேலை என்ற பாராட்டை இது பெற்றுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

22-3-17 sports

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் புஜாரா 2வது இடம் பிடித்துள்ளார்.

 

 • அர்செனல் கால்பந்து அணி வீரரான பீட்டர்செக்(34) 2016ம் ஆண்டுக்கான செக் குடியரசின் சிறந்த விளையாட்டு வீரராக 9வது முறையாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

 

 • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. இந்த ஊதிய உயர்வின்படி, சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஊதியம் ரூ 7.32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போட்டி ஊதியம், செயல்பாட்டு ஊக்கத்தொகை, பிக் பாஷ்லீக் போட்டிக்கான தொகை என அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

 

 • தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்ச் 25 முதல் 29 வரை நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய புளு அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • தேசிய கிரிக்கெட் அகாதமி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பிசிசிஐ பயிற்சியாளர்களுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி வரையில் தேசிய கிரிக்கெட் அகாதமியில் நடைபெறுகிறது. 25 பெண் பயிற்சியாளர்களும், 25 ஆண் பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்பார்கள்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

22-3-17 eco

 • கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஜப்பானின் ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய ரக டபிள்யூ.ஆர்.வி மாடல் காரை சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியது. 6 வண்ணங்களில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

 • அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் பங்கு மார்ச்-21ல் தன்னுடைய முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கியது. 299 ரூபாய்க்கு பங்குகள் வெளியிடப்பட்டன.

 

 • தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான குவால்கோம் டெக்னாலஜீஸ் நம்பர் பேட் வசதி கொண்ட மலிவு விலை 4ஜி செல்லிடப்பேசிகளுக்கான ‘குவால்காம் 205’ என்ற சிப்செட்டை அறிகப்படுத்தியது.

 

 • நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான ‘மேரா ஐமொபைல்’ என்ற புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 135 சேவை மையங்கள் மூலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளால் ஒருங்கிணைந்த வங்கிசேவையை வழங்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 • பி.என்.பி.பரிபா அஸட் மேனேஸ்மெண்ட் இந்தியா நிறுவனம் ‘பி.என்.பி.பரிபா பேலன்ஸ்டு’ என்ற புதிய பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்ய கூடிய அல்லது முதலீட்டை திரும்ப பெறக் கூடிய ‘ஓப்பன் என்டட் ஃபண்ட்’ வகையை சேர்ந்தது.

 

Call Now