March 21

Date:24 Mar, 2017

March 21

We Shine Daily News

jkpo;

மார்ச் 21

தேசிய செய்திகள் :

21-3-17 india

 • காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கர்நாடகத்துக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 • உலகிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்காத குடிமக்கள் அதிகமுள்ள நாடாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளதாக வாட்டர் எய்ட்-டின் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஊரக பகுதிகளில் வசிக்கும் சுமார் 6.3 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

 • அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி அயோத்தி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 • ஓமனில் ஆட்சி செய்யும் சுல்தான் காபூஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது உறவினரான சயீத் அசாத் பின்தாரிக் அல்சயித்தை துணை பிரதமராக நியமித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் செல்ல உள்ளார்.

 

 • கடந்த இரு ஆண்டுகளில் (2015-2016)ல் வனப்பகுதிகளில் விலங்குகள் தாக்கியதில் 450 பேர் உயிரிழந்ததாகவும், வனப்பகுதிகளில் 59 யானைகளும், 121 புலிகளும் உயிரிழந்துள்ளன எனவும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாததேவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.

 

 • வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • மனிதர்களுக்கு சமமாக கங்கை, யமுனை ஆறுகள் நடத்தப்பட வேண்டும். அந்த ஆறுகளை யாராவது மாசுப்படுத்தினாலோ அல்லது அவற்றுக்கு தீங்கு விளைவித்தாலோ அது மனிதர்களுக்கு செய்யும் தீங்காக எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

21-3-17 world

 • ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைவழி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உத்தரவுப்படி மார்ச் 21 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

 

 • போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2017ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து 4வது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 86 பில்லியன் அமெரிக்க டாலராகும். வாரன் பஃபெட் 2வது இடம் வகிக்கிறார். அமேசான் இணைய வர்த்தக நிறுவன அதிபர் ஜெப்பிளோஸ் 3வது இடமும், முகநூல் (பேஸ்புக்) அதிபர் மார்க் ஸீக்சர்பெர்க் 5வது இடமும், ஆரக்கிள் இணை நிறுவனர் லார்ரி எல்லிசன் 7வது இடமும் பிடித்துள்ளார்.

 

 • பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக தெஹ்மினா ஜன்ஜூவா பொறுப்பேற்றார். பாகிஸ்தானில் வெளியுறவுத் துறைச் செயலர் பதவி வகிக்கும் முதல் பெண் தெஹ்மினா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெனீவாவில் ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர்.

 

 • பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்(75) வெர்ஜின் நிறுவனத்தின் கலெக்டிக் விண்கலம் மூலம் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார்.

 

 • ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை மார்ச் 29ந்தேதி நடைபெற உள்ளது.

 

 • கடந்த 1960ல் முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் முன்னிலையில் கராச்சியில் சிந்துநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் ஒரு முறை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த வருட சிந்துநதி நீர் ஒப்பந்த பேச்சுவார்த்;தை மார்ச் 20ல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் தொடங்கியது. இந்திய தரப்பில் சிந்துநதி நீர் ஆணையர் பி.கே.சக்சேனாவும், பாகிஸ்தான் தரப்பில் மிர்சா ஆசிப்பெய்க்கும் பங்கேற்றுள்ளனர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

21-3-17 sports

 • டெலாய்ட் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த தணிக்கை தொடர்பான அறிக்கைக்கு 10 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிர்வாக குழு அறிவுறுத்தியுள்ளது.

 

 • விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • கோவையில் 31வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் மார்ச் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது. இப்போட்டி தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகும், கோவையில் 25 ஆண்டுகளுக்கு பிறகும் நடைபெறுகிறது. இதில் குஜராத், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட ரயில்வே அணிகள் பங்கேற்கின்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

21-3-17 eco

 • சுற்றுலாத் துறையில் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமான ஏர்பிஎன்பி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயலர் பிரையன் செஸ்கி. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இப்பொறுப்பு வகிக்கிறார். 2005 ஜீன் -2007 ஜீன் வரை 3டிஐடி நிறுவன தொழில் துறை வடிவமைப்பாளராக இருந்தவர்.

 

 • தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான காக்னி ஸெண்ட் டெக்னாலஜி சொல்யூஸஷன்ஸ் 6000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. காக்னி ஸெண்டில் 2016 டிசம்பர் 31ம் தேதி வரையில் 2.6 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.

 

 • உத்திர பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது விவசாய கடன் தள்ளுபடியாகும். விவசாய கடன் தள்ளுபடி நடவடிக்கையை எடுத்தால் வங்கிகளுக்கு ரூ 27420 கோடி பாதிப்பு ஏற்படும் என எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Call Now