March 20

Date:21 Mar, 2017

March 20

We Shine Daily News

jkpo;

மார்ச் 20

தேசிய செய்திகள் :

20-3-17 india

 • சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்துவதற்கு தேவையான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி உள்பட 4 துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மூத்த குமக்களுக்கு காது கேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அடுத்த வாரம் அறிமுகப்படுத்த விருக்கிறது. ரூ 477 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு ‘ராஷ்ட்ரீய வயோ ஸ்ரீ யோஜனா’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

 • பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களையும் மீறி சரிவர செயல்படாத கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

 • அரசு தொடர்புடைய வழக்குகளை விரைந்து முக்க வேண்டுமென மத்திய அமைச்சகர்களிடமும் மாநில முதல்வர்களிடமும் சட்டத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 • கேரள உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நவநீதி பிரசாத்சிங் பதவியேற்றார். இவர் பட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார்.

 

 • சுதந்திர போராட்டவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ம் ஆண்டில் துவங்கிய கட்சியான அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவராக நரேன் சாட்டார்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும் நிறுவனத்தின் 45.1% பங்குகளை வோடபோன் வைத்திருக்கும். ஐடியா பிரமோட்டார்ஸ் 26% பங்குகளை தன்வசம் வைத்திருக்கும் என ஒப்பந்தத்தில் முடிவாகியுள்ளது.

 

 • உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றார். அவருடன் 46 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

20-3-17 world

 • சமூக சேவைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த 11 இந்திய பெண்கள் உள்பட 25 ஆசிய பெண்களுக்கு ‘தலைசிறந்த மகளிர் விருது’ சிங்கப்பூரில் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் வர்த்தக மேம்பாடு ஆராய்ச்சி குழுமம் இணைந்து இந்த விருதினை வழங்கின.

 

 • அமெரிக்காவின் ஹ_ஸ்டன் நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் துறையின் புதிய இயக்குநராக இந்திய பொறியாளர் கருண்ஸ்ரீராமா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்று ஸ்காட்லாந்தை தனிநபராக அறிவிப்பது தொடர்பாக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்காட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் வலியுறுத்தியுள்ளார்.

 

 • 1930ம் ஆண்டு புளுட்டோ சூரியகுடும்பத்தில் ஒன்பதாவது கிரகமாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் புளுட்டோவை விட 27 சதவீத அளவு பெரிய கோளான எரிஸ், சூரிய குடும்பத்தையடுத்துள்ள பகுதியில் இருப்பதை 1992ல் விஞ்ஞானிகள் கண்டறிந்தது. புளுட்டோ முழு அளவிலான கிரகம் அல்ல என 2006ல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
  தற்போது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புளுட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 • ஈரானியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக சவூதி அரேபியா அரசு அறிவித்தது.

 

 • பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இந்து திருமணசட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி மம்கைன் உசேன் ஒப்புதல் பெற்று இந்து திருமண மசோதா சட்டம் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணம் முறைப்படுத்தப் பட்டுள்ளது. திருமணத்தின் போது இந்துக்கள் தங்கள் மதச்சடங்குகளை முறைப்படி செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது.

 

விளையாட்டுச் செய்திகள் :

20-3-17 sports

 • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில் இந்திய வீரர் கே.டி.இர்ஃபான் வெண்கலப் பதக்கம் வென்றார். இர்பான் இந்தப் போட்டியில் பந்தய தூரமான 20 கி.மீட்டரை 1மணி 20நிமிடம் 59 நொடிகளில் கடந்து 3வது இடம் பிடித்தார். கொரியாவை சேர்ந்த கிம்ஹியூசன் சப் 1 மணி 19 நிமிடம் 50 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய சட்டத்தின் படி மும்பை கிரிக்கெட் சங்கம் தனது நிரந்தர வாக்குரிமையை இழந்தது. மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்தும் வாக்குரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

 

 • இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சியாளராக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பயிற்சியாளர் குழுதுணைத் தலைவரும், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவருமான சான்டியாகோ நீலா பொறுப்பேற்க உள்ளார்.

 

 • இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்டான் வாவ்ரிங்காவை ரோஜர் பெடரர் வீழ்த்தி பட்டம் வென்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

20-3-17 eco

 • தகுதிக்கு அதிகமாக ஊதியம் பெறும் தலைமைச் செயலதிகாரிகள் (சிஇஓ) பட்டியலில் இந்தோ அமெரிக்காவைச் சேர்ந்த சந்திப் மாத்ரானி 4வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 • நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியோடு பாரதிய மகிளா வங்கியை இணைப்பதற்கு 3 மாதத்தில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • வேதாந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தில் 240 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறார். தென்னாப்ரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆங்லோ அமெரிக்கன். இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. உலகின் 5 முக்கிய சுரங்க நிறுவனங்களில் இதுவும் ஒன்று. டி பீர்ஸ் எனும் பெயரில் இந்நிறுவனத்தின் வைரங்கள் விற்கப்படுகின்றன.

 

 • அடுத்த நிதியாண்டு முதல் பிஎப் தொகையில் 15 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

 

Call Now