March 19

Date:21 Mar, 2017

March 19

We Shine Daily News

jkpo;

மார்ச் 19

தேசிய செய்திகள் :

19-3-17 india

 • நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மதரசாக்களில் மதிய உணவு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் 3டி பார்முலாவின் படி (டீச்சர்கள், டிபன், டாய்லெட்) மதரசாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் டிபன் என்பது மதிய உணவு திட்டமாகும். மதரசாக்களை நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி மதக்கல்வியுடன் அறிவியல் தொழில் நுட்பக்கல்வியையும் மதரசாக்களில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 • உத்தரகாண்ட் மாநிலத்தின் பௌரி மாவட்டம் கடந்த 2 நாள்களில் இரு மாநில முதல்வர்களை நாட்டுக்கு அளித்துள்ளது. உத்திரப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத்தும், உத்தரகாண்ட் புதிய முதல்வர் திரிவேந்திர சிங்ராவத்தும் பௌரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

 

 • வரும் 2022ம் ஆண்டின் போது, இந்தியாவிலுள்ள விவசாயிகளின் வருமானம் இருமடங்கு உயர்ந்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஸ்நாத்சிங் ஹரியானா மாநில விவசாயிகள் நிகழ்ச்சியில் உறுதிபட தெரிவித்தார்.

 

 • மத்திய அரசின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையில் விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என கூறியுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வரைமுறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

 

 • நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அதனைக் குறைக்க வேண்டிய வழிமுறைகளை தொடர்புடைய தேர்வாணையங்கள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் காணப்படும் மென்பொருள், வன்பொருள் மற்றும் இதரவசதிகள் சர்வதேச அளவில் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

 • காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. மொத்தம் 9.2கிமீ நீளத்துக்கு இருவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 1200மீ உயரத்தில் அமைந்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

19-3-17 world

 • வடகொரியா உருவாக்கிய புதிய ரக ராக்கெட் என்ஜினின் சோதனை வெற்றிகரமாக சோஹே விண்வெளி ஆய்வுமையத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை பார்வையிட்ட வடகொரிய அதிபர் இந்நிகழ்ச்சியை ‘மார்ச் 18 புரட்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 • அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5000கிமீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்க கூடிய அக்னி 5 ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளதற்கு போட்டியாக தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுடன் இணைந்து நவீன ரக ஏவுகணைகளை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 

 • தென் அமெரிக்க நாடான பெருவில் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு 67 பேர் உயிரிழந்தனர்.

 

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சௌம்யா சுவாமிநாதன் ஐ.நாவால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியை கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வு குழுவில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் சௌம்யா சுவாமிநாதனை நியமித்தார்.

 

 • தலீபான்கள் ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருகிற நிலையில் அவற்றை ஆப்கானிஸ்தான் அரசு ஒடுக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

19-3-17 sports

 • ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா இரட்டைசதம் அடித்தார்.

 

 • முன்னாள் தேசிய கார் பந்தய சாம்பியனான அஸ்வின் சுந்தர் மரணமடைந்தார்.

 

 • நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி கண்டது.

 

 • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் ரஷியாவின் குஸ்னெட்சோலா வெஸ்னினா இறுதிப் போட்க்கு முன்னேறியுள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

19-3-eco

 • வெளிநாட்டு வாழ் இந்தியர்களான ஹிந்துஜா சகோதரர்கள் இங்கிலாந்தில் இருக்கும் பணக்கார ஆசிரியர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இவரது சொத்த மதிப்பு 1900 கோடி பவுண்ட். 2வது இடத்தில் லஷ்மி மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1260 கோடி பவுண்ட்.

 

 • நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ 3425 கோடி மூலதனத்தைப் பெற்றது. ஐசிஐசிஐ வங்கியின் கடன் பத்திரங்களுக்கான வட்டிவிகிதம் ஆண்டுக்கு 9.20 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘கேர்’ மற்றும் ஐ.சி.ஆர்.ஏ தரக் குறியீட்டு நிறுவனங்கள் இக்கடன்பத்திரங்களுக்கு ‘ஏஏ ூ ‘ஸ்திரமானது’ என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளன.

 

 • மத்திய அரசுக்கு சொந்தமான பயணிகள் விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ்கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

 • பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்துவதற்கு போதிய நிதி ஆதாரம் இருந்தும் அதை செலுத்தாமல் உள்ள தொழிலதிபர்கள் பட்டியலைத் தயாரிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

 

Call Now