March 18

Date:18 Mar, 2017

March 18

We Shine Daily News

jkpo;

மார்ச் 18

தேசிய செய்திகள் :

18 in

 • உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜக மூத்த தலைவர் திரிவேந்தர் சிங் ராவத் பதவியேற்க உள்ளார்.

 

 • தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

 

 • ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பீம்’ செயலியை இதுவரை 1.8 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக ‘நிதி ஆயோக்’ என்றழைக்கப்படும் மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

 

 • பாராளுமன்றத்தில் ரூ 100 அல்லது அதற்கு குறைவாக வருமானவரி பாக்கி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 54ஆயிரம். அவைகளின் வருமான வரி பாக்கி தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்தார்.

 

 • விசைத்தறி, கைத்தறி மற்றும் கைவினைப்பொருள்கள் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையை மேம்படுத்துவதற்காக சிறப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. விசைத்தறியாளர்களின் நலன்களை பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கட்டடத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 • அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டுமென அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்வானந்த சேனோவால் அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவர், ஊழல் உள்ளிட்டவை இல்லாத அஸ்ஸாமை உருவாக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

 

பன்னாட்டு செய்திகள் :

18-3-17 world

 • இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து ஒரே நாடாக உள்ளது. இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் 2014ம் ஆண்டு கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற வேண்டாம் என 55.3 சதவீத மக்கள் கருத்து தெரிவித்தனர்.
  இந்நிலையில் இரண்டாவது கருத்தறியும் பொது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என தொரசா மே நிராகரித்துவிட்டார்.

 

 • பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட் நீண்டதொரு ஆலோசனை நடத்தியதில் மேலும் 2 ஆண்டு காலத்துக்கு ராணுவ கோர்ட்டு அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துவிட்டன.

 

 • பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிற கன்கசர்வேடிவ் வேட்பாளர் பிராங்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகவேண்டும் என 75 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 • வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்சும் சவுதி துணை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றி விவாதித்தனர்.

 

 • அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5000கிமீ தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கக் கூய அக்னி-5 ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளதற்குப் போட்டியாக தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுடன் இணைந்து நவீன ரக ஏவுகணைகளைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 

 • சீனா –சவூதி அரேபியா இடையே 6500 கோடி டாலர் (சுமார் ரூ 4.4லட்சம் கோடி) மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு உள்ளிட்ட 35 திட்டங்களில் 6500 கோ டாலர் முதலீடு செய்வதற்கான உடன்படிக்கையாகும்.

 

விளையாட்டுச் செய்திகள் :

18-3-17 sports

 • இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ரஷியாவின் எலினா லெஸ்னினாவிடம் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

 

 • இந்தியாவில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள 17 வயதுக்குள்பட்டோருக்கான (யு- 17) உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு பிரேசில், சாலி, பராகுவே அணிகள் தகுதி பெற்றன.

 

 • சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை வீவா அணி வெற்றிபெற்றது.

 

 • 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ல் தொடங்குகிறது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் கேமராவுடன் கூய ஹெல்மெட் அணிந்து விளையாடும் முறையை அறிமுகப்படுத்த ஐ.பி.எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 • பாகிஸ்தான் வீரர்கள் ‘ஸ்பாட் பிக்லங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஷாஜாய்ப் ஹசனை இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

18-3-17 econmic

 • ஆசியாவிலேயே முதல்முறையாக விமானிகள் பயிற்சி மையத்தை ஏர்பஸ் நிறுவனம் தேசிய தலைநகர் தில்லியில் அமைக்கவுள்ளது. விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் ஆசிய அளவில் தொடங்கும் முதல் பயிற்சிமையம் இதுவாகும். வரும் 2018ம் ஆண்டுக்குள் இந்த பயிற்சி மையம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
  அடுத்த 20 ஆண்டுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தை ஆண்டுக்கு 9.3% என்ற அளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 • கடந்த ஜனவரி 27ம் தேதி நடைபெற்ற ஐ.டி.சி நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் மருத்துவமனைகள் தொடங்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்கு பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்க பங்குதாரர்களின் ஒப்புதலை ஐடிசி நிறுவனம் பெற்றுள்ளது.

 

 • உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை நிறுவியுள்ள சீனா, இப்போது உலகின் மிகப்பெரிய காஸ்மிக் கதிர் கண்காணிப்பு மையம் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளன. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடல்மட்டத்திலிருந்து 4410மீ உயரத்திலுள்ள மலைப்பகுதியில் ‘லார்ஜ் ஹை ஆல்டிடியூட் ஏர் ஷவர் ஆப்சர்வேட்டரி’ என்ற பெயரில் இந்த மையம் கட்டப்பட்டு வருகிறது.

 

Call Now