March 17

Date:17 Mar, 2017

March 17

We Shine Daily News

jkpo;

மார்ச் 17

தேசிய செய்திகள் :

17-3-17 india

 • ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்திடமிருந்து நிதி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆறு பேரை தேடி வருவதாக தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • ஆடம்பர பொருள்கள் மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி வரி மீதான கூடுதல் வரி உச்சவரம்பை 15 சதவீதமாக ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

 

 • பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதால் விற்கவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தைப் ‘பீட்டா’ அமைப்பு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

 

 • மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு இளைஞர்களை தூதர்கள் ஆக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

 

 • இந்தியாவில் 890க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போது புதிதாக 112 சேனல்கள் தொடங்குவதற்கான மனுக்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 

 • ஓடிஸா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்பித்தல் போட்டியில் 5 வயது முஸ்லிம் சிறுமி ஃபிர்தௌஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • மிஸோரம் மாநிலத்தில் 2017- 18ம் நிதியாண்டுக்காக வரி இல்லாத உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரூ 8803.10 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் உபரி வருவாய் ரூ 331 கோடியாகும்.

 

 • பஞ்சாப் மாநில புதிய முதல்வராக அமரீந்தர் சிங் மார்ச் 16ல் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் 2 பெண்கள் உள்பட 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 

 • பல்வேறு வெளி நாடுகளில் போர், உள்நாட்டுச் சண்டை, இயற்கைப் பேரிடர் ஆகிய காரணங்களில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 95 ஆயிரம் பேர் கடந்த 2 ஆண்களில் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

 

பன்னாட்டு செய்திகள் :

17-3-17 world

 • இங்கிலாந்து நாட்டில் 2014ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலிலும், 2015ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் தேர்தல் செலவின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டினால் கன்சர்வேடிவ் கட்சிக்கு 70ஆயிரம் டாலர் (சுமார் ரூ 56 லட்சம்) அபராதம் விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 

 • கொலம்பியா நாட்டின் துணை அதிபர் ஜெர்மன் வர்காஸ் பதவி விலகியதை அடுத்து புதிய துணை அதிபராக தேசிய போலீஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆஸ்கர் நரஞ்சோவை கொலம்பியா அதிபர் ஜூவான் மனுவேல் சாண்டோஸ் நியமித்துள்ளார்.

 

 • இந்தியா வம்சாவளி மாணவி இந்திராணி தாஸ் மூளையில் காயம் ஏற்படுகிற போது அல்லது நரம்பு சிதைவு நோய் ஏற்படுகிற போது நரம்பு செல்களான நியூரான்கள் செத்து விடாமல் தடுக்கும் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார். இவர் அமெரிக்க நாட்டில் நியூஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.
  இந்த சாதனைக்காக இந்திராணி தாசுக்கு ரீஜெனரான் அறிவியல் திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது 2½ லட்சம் டாலர் (சுமார் ரூ 1கோடியே 67லட்சத்து 50 ஆயிரம்) ரொக்க பரிசை கொண்டது ஆகும்.

 

 • உலக புகழ் பெற்ற மோனாலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது சோகமல்ல, மகிழ்ச்சியே என ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஃப்ரீபெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
  பிரான்ஸ் ஓவியர் லியோனார்டோ டாவின்ஸி 1500வது ஆண்டுகளில் வரைந்த மோனலிசா ஓவியத்தில் இடம் பெற்றுள்ள லிசா கெரார்தினியின் இதழ்களில் தவழும் சோகமா, மகிழ்ச்சியா என்பதை இனம் காண முடியாத புன்முறுவல் தான் மோனலிசா உலகப் புகழ் பெற்றதன் காரணம் என கூறப்படுகிறது.

 

 • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கான மசோதாவில் பிரிட்டன் நாட்டின் அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

 • தரையிலிருந்து கடலிலுள்ள கப்பல் முதலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூய ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் தொலைதூர இலக்குகளை அழிக்கும் திறனுடையது.

 

 • முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்க் அமெரிக்கா வருவதற்கு தடை செய்யும் அதிபர் டிரம்பின் திருத்தியமைக்கப்பட்டு உத்தரவுக்கு அமெரிக்க நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

 

விளையாட்டுச் செய்திகள் :

17-3-17 sports

 • இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலோ கட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், நடாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 • சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு ஹாக்கிப் போட்டியில் இந்தியன் வங்கி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

 

 • சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் வெற்றி பெற்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

17-3-17 econo

 • இந்திய –ரஷ்ய இரு நாட்டு வர்த்தகத்தை ரூ2 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

 • நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ரூ 4லட்சம் கோடியை எட்டும் என வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ‘டபிள்யூ ர் வி’ என்ற புதிய சொகுசு காரை புதுதில்லியில் மார்ச் 16ல் அறிமுகம் செய்தது. இப்புதிய தயாரிப்பு ஹோண்டாவின் ஜாஸ் காரை அடிப்படையாக கொண்டது. ‘டபிள்யூ.ஆர்.வி’ கார் இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 • டியூப் இண்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக வெள்ளையன் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

 

 • முருகப்பா குழுமத்தை சேர்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் ரூ பைனாhன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக என்.ஸ்ரீநிவாசன் மற்றும் செயல் இயக்குநராக அருண்.அழகப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Call Now