March 16

Date:17 Mar, 2017

March 16

We Shine Daily News

jkpo;

மார்ச் 16

தேசிய செய்திகள் :

16-3-17 india

 • ஐ.நாவின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தில்லியில் ‘ஆசிய கண்டத்தில் ரயில்வே இணைப்பு’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடந்தது. இதில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தி கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட விருக்கிறது.

 

 • கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த தேசிய சுகாதாரக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை மார்ச் 15ல் ஒப்புதல் அளித்தது. மாவட்ட மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துவது தொடர்பான பல்வேறு புதிய கொள்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

 

 • 2014 -15ம் நிதியாண்டில் ஐ.நாவுக்கு இந்தியாவின் பங்களிப்பு ரூ 157 கோடியாக இருந்தது. 2015 -16ம் நிதியாண்டில் 55% அதிகரித்து ரூ 244 கோடியாக உயர்ந்தது.

 

 • நாடு முழுவதும் 50 புதிய கேந்த்ர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மேக்லால் புதிய ரூ500, ரூ2000 நோட்டை அச்சிடுவதற்கு ரூ2.87 முதல் ரூ3.77 வரையிலும் செலவாவதாக இத்தகவலை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

 

 • தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500மீ தொலைவுக்கு உள்ளதாக இருக்கும் மதுபானகடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தில்லி அரசு நெடுஞ்சாலைகளில் 46 மதுபானக்கடைகளை மூடியது.

 

 • மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன்சிங் பதவியேற்றார். அவருடன் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

16-3-17 world

 • 2018ம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத்துறை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம்தேதி பெறப்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு அமர்த்துவதற்கு இந்த விசா வழிவகை செய்கிறது.

 

 • அணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) இந்தியா விரைவில் உறுப்பினர் ஆவதற்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்க அரசின் சுகாதாரக் காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது இந்திய வம்சாவளிப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள கில்-ஜித்-பால் பிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் நாட்டின் 5வது மாகாணமாக அறிவிக்க வெளியுறவு விவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜூஸ் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

 • தென்கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பாக்கியூன்- ஹைக்குப் பதிலாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே மாதம் 9ம்தேதி நடைபெற உள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

16-3-17 sports

 • ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • ராஞ்சியில் மார்ச் 15ல் தொடங்கிய இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதமடித்தார். இந்த இன்னிங்சின் போது 5000 டெஸ்ட் ரன்களை கடந்தார். இவர் குறைந்த இன்னிங்சில் 500 ரன்கள் எடுத்த வீரர்களில் 7வது இடத்திலும், வேகமாக 500 ரன்கள் எடுத்த 3வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையும் ஸ்மித் பெற்றுள்ளார்.

 

 • விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் பெங்கால், ஜார்கண்ட் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

 

 • சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ், வீவா சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

16-3-17 economi

 • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) உறுப்பினர்களாக உள்ள 4 கோடி பேரும் பயனடையும் வகையில் புதிய விதிமுறைகளை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • ரிலையன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் இணைப்புக்கு பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளன.

 

 • மோட்டரோலா நிறுவனம் 5வது தலைமுறை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜிபி ராம், 16 ஜிபி நினைவகம் மற்றும் 4ஜிபி ராம், 32ஜிபி நினைவகம் ஆகிய இரண்டு மாடல்களை மோட்டரோலா மொபிலிட்டி பிரிவின் துணைதலைவர் சுதின் மாதுர் மற்றும் நிறுவன துணைதலைவர் திலோன் இ ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

 

 • ரஸ்னா நிறுவனம் ‘ரஸ்னா இன்ஸ்டா’ எனும் பழரச பவுடரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. அதே போல ரஸ்னோ விட்டோஸ் எனும் இணைப்பு தின்பண்டத்தையும் அறிமுகம் செய்தது.

 

Call Now