March 15

Date:15 Mar, 2017

March 15

We Shine Daily News

jkpo;

மார்ச் 15

தேசிய செய்திகள் :

15-3-17india

 • நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட போர்களின் போது பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்றவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாத வகையில் சில கூடுதல் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் எதிரி சொத்து சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிரி சொத்துக்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் கடந்த 1968ல் எதிரிசொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

 

 • சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகளில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 12வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுய ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

 

 • இதயம் மற்றும் சிறுநீரக நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் ரத்தகுழாய்களில் பொருத்தப்படும் ‘ஸ்டென்ட்’ எனப்படும் குழாய் வடிவிலான மருத்துவ சாதனத்துக்கு சந்தையில் தட்டுபாடு நிலவவில்லை என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

 

 • மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வுகாண ஒரே நிரந்தர நடுவர் மன்றம் அமைப்பதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

 • பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜிநாமா செய்தததையடுத்து அந்தப்பதவி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

15-3-17 world

 • வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ம்தேதி அரசுமுறை சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ளார். ஏப்ரல் 10ம்தேதி வரையிலும் இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்தார். அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்து வருகை தரவுள்ளார்.

 

 • இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

 

 • அமெரிக்காவில் சுகாதாரத்துறையில் உயர் பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த சீமாவர்மாவை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்தார். இதற்கான ஒப்புதலை அமெரிக்க பாராளுமன்ற செனட்சபை வழங்கியது. ‘ஒபாமா கேர்’ சுகாதார காப்பீடு திட்டத்துக்கு பதிலாக புதியதிட்டத்தை அமல்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகிப்பார்.

 

 • தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிவருவதால் தைவானிலிருந்து சீனாவுக்கு அழகுசாதனப் பொருள்கள், உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்வது பாதித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியான வாஷிங்டன் முதல் நியூஇங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 7600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 • இரவில் ஒளிரும் புளோரசென்ட் தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பகல் பொழுதுகளில் அந்த தவளையின் வண்ணம் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தெரிகிறது. இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலிலுள்ள புள்ளிகளும் அடர்நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன.

 

 • சோமாலியா கடற்பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். 2012க்கு பிறகு சோமாலியா கடல் வழிபாதையிலிருந்து பெரிய அளவிலான பணிக்கப்பல் கடத்தப்படுவது இதுவே முதல்முறை.

 

 • பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த பிஎன்எஸ் நாசர், பிஎன்எஸ் சயீஃப் ஆகிய இரு போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டன.

 

விளையாட்டுச் செய்திகள் :

15-3-17sports

 • பிஎஸ்எல் டி20 தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் ‘திடீர்’ ராஜிநாமா செய்துள்ளார். நவம்பர் 2015 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

 

 • இண்டியன் வெல்ஸ் மாஸ்;டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் லாவ்ரிங்கா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 • உலககோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் சிறப்பாக செயல்படும் வகையில் சீனியர் மற்றும் ஜீனியர் அணிகளுக்கென 4 அறிவியல் பூர்வ ஆலோசகர்களை ஹாக்கி இந்தியா அமைப்பு நியமித்துள்ளது.

 

 • 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருந்த தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரிடமிருந்து அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

15-3-17eco

 • சர்வதேச அளவில் நெறிமுறை சார்ந்து இயக்கும் நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. 2017ம் ஆண்டு 19 நாடுகளை சேர்ந்த 124 நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 • ஐஎல்எப்எஸ் செக்யூரிட்டி சர்வீஸஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை இண்டஸ் இண்ட் வங்கி வாங்குகிறது.

 

 • ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் 18 மாணவர்களுக்கு அமேசான் வேலை வழங்கி இருக்கிறது. வளாகத் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதியவை ஆகும்.

 

 • ஏர்டெல் பேமண்ட் வங்கியில் தமிழ்நாட்டில் ஒருலட்சம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.

 

 • கடந்த ஆண்டு இந்தியாவில் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதாகவும் மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.

 

 • சுயவேலை விளம்பர விற்பனையாளர்கள் என்ற திட்டத்தை 9 மாதங்களுக்கு முன் ஸ்நாப்டீல் அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை 10000 விற்பனையாளர்கள் 200 பிராண்டுகள் மற்றும் முகமை அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்நாப்டீல் நிறுவனம் விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 • சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப துறை பாதுகாப்புக்கு ரூ.9 ஆயிரம் கோடி டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கார்ட்னர் ஆய்வுநிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Call Now