March 14

Date:15 Mar, 2017

March 14

We Shine Daily News

jkpo;

மார்ச் 14

தேசிய செய்திகள் :

14-3-17india

 • திருமலையில் 100 ஏக்கர்பரப்பளவில் சந்தனமரங்கள் பயிரிடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தேவஸ்தான செயலதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

 

 • விமானங்களின் பெரியளவு கைப்பைகளை பயணிகள் எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்குமாறு விமானநிலைய நிர்வாகங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.

 

 • தகவலறியும் உரிமைச்சட்டப்படி பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரத்தில் 1978ல் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இல்லை என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

 • பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் பாதுகாப்பு படைஅதி உயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

14-3-17 world

 • அமரிக்க அதிபர் டிரம்பின் ஓராண்டு சம்பளம் ரூ2.65 கோடி அறப்பணி அமைப்புக்கு தானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் அதிநவீன ஓரியன் ராக்கெட் என்ஜின்களின் சோதனை தற்போது அமெரிக்காவில் மிசிசிபி நகரிலுள்ள ஸ்டென்னிஸ் விண்வெளி ஆய்வுமையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

 

 • 2015ம் ஆண்டு கணக்கின்படி சுமார் 1கோடியே 60லட்சம் இந்தியர்கள் மற்ற நாடுகளில் குடியேறியுள்ளனர். உலகளவில் அதிகம் புலம் பெயர்ந்தவர்கள் இந்தியர்கள் என ஐ.நா சர்வதேச புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது.

 

 • உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சீனபொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்தால் அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது.

 

 • பாகிஸ்தான் நாட்டில் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மார்ச்-15 முதல் தொடங்கும். இது பாகிஸ்தானில் நடைபெறும் 6வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். பாகிஸ்தானில் 19 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 • ஐ.நாவால் தடை செய்யப்பட்ட ‘கிளஸ்டர்’ வகை கொத்து வெடிகுண்டுகள் யேமனில் சவூதிஅரேபியா தலைமையிலான கூட்டுபடை வீசியதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியது.

 

 • இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படை சிறப்பு அதிரடி வீரர்களின் எண்ணிக்கையை 20000லிருந்து ஒரு லட்சமாக உயர்த்த சீனா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விளையாட்டுச் செய்திகள் :

14-3-17 sports

 • நியூசிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அனைத்து காலத்திலும் சிறந்த கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆவார்.

 

 • 71வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் 2வது நாளில் பஞ்சாப், மிஸோரம் அணிகள் வெற்றி பெற்றன.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான அழைப்பு ஹாக்கிப் போட்டியின் 3வது நாளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

14-3-17 econo

 • நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் 4ஜி சேவையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.

 

 • இரு சக்கர வாகன விற்பனை நடப்பு 2016-17 நிதியாண்டில் 7 முதல் 8% அளவுக்கே வளர்ச்சி காணும் என நிதிஆய்வு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.

 

 • நுகர்பொருள் துறையின் முன்னணி நிறுவனமான கெவின் கேர் நிறுவனத்திலிருந்து பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான சைரஸ் கேபிடல் வெளியேறியுள்ளது. கெவின்கேர் நிறுவனத்தில் சைரஸ் கேபிடல் ரூ250 கோடி முதலீடு செய்திருந்தது.

 

Call Now