March 13

Date:15 Mar, 2017

March 13

We Shine Daily News

jkpo;

மார்ச் 13

தேசிய செய்திகள் :

13-3-17 india

 • கோவாவில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் முதல் மந்திரி ஆவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஒப்புதல் அளித்தது. கோவா முதல் மந்திரியாக மார்ச் 14ல் மனோகர் பாரிக்கர் பதவியேற்கிறார்.

 

 • வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுமையும் இன்று முதல் ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

 

 • பஞ்சாப் முதல் மந்திரியாக அமரிந்தர் சிங் மார்ச் 16ல் பதவியேற்கிறார்.

 

 • உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 403 இடங்களுக்கு 4 ஆயிரத்து 853 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 483 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 41 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். உத்திர பிரதேச சட்டசபை வரலாற்றில் இந்த அளவுக்கு பெண்கள் தேர்வானது இதுவே முதல்முறை.

 

 • பெங்களுரில் புறநகர் பாதையில் சட்டத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்ட இரண்டு விளம்பர பேனர்களை அகற்றி தோட்டகலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரிங் ரோடு பகுதியிலுள்ள 27 மரங்கள் ஆசிட் ஊற்றியும், வெட்டியும் அகற்றப்பட்டன.

 

 • தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை மார்ச் 13ல் கொண்டாடப்படுகிறது. நகர் முழுவதும் 25000 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 • உ.பிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற 403 எம்.எல்.ஏக்களில் 322 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார். மேலும் 143 பேர் மீது கொலை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

பன்னாட்டு செய்திகள் :

13-3-17 wold

 • மடகாஸ்கரில் வடகிழக்கு மாகாணங்களில் கடும்புயல் வீசியதால் 50 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஆண்டனநரிவோவில் மட்டும் 32000 பேர் இந்த புயலால் பாதிப்படைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டுக்கு பிறகு மடகாஸ்காரைத் தாக்கும் மிக மோசமான புயல் இதுவாகும்.

 

 • அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் பதவி விலகுமாறு பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த இந்திய வம்சாவளி அரசு வழக்குரைஞர் பிரீத் பராரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஓபாமா காலத்தில் நியமிக்கப்பட்ட 46 அரசு வழக்குரைஞர்களை பதவியிலிருந்து விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் உத்தரவிட்டார். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞர் பிரீத் பராராவும் ஒருவர்.

 

 • சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புனிதப் பயணிகளைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 74 பேர் பலியாகினர்.

 

 • சீன அதிபராக ஜூஜின்பாங் கடந்த 2013ல் பொறுப்பேற்றதை தொடர்ந்து சீனாவில் ஊழலுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் கடந்த ஆண்டில் 63000 அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஜமாதுத் தாவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் பயங்கரவாத இயக்க புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் ஆவார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

13-3-17 sports

 • 17வது அகில இந்திய போலிஸ் துப்பாக்கி சுடும் போட்டி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் மார்ச் 10ல் தொடங்கியது. இதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அஸ்வின் எம் கோட்னீஸ் வென்றார். இதன் மூலம் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 • தில்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

 • தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் தென்மண்டல அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டி மதுரை டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் மார்ச் 10ல் தொடங்கியது.

 

 • 71வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் கோவா, மேற்கு வங்கம் அணிகள் வெற்றி பெற்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

13-3-17 head

 • தங்க நகை கடனுக்கு அதிகபட்சம் ரூ.20000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் அதற்கு மேலான தொகை காசோலையாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது தற்போது 20000 ரூபாயாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

 

 • பணமதிப்பு நீக்கத்தால் பிஸ்கட் துறையில் ரூ700 கோடிக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிஸ்கட் தயாரிப்பாளர்கள் நலசங்கத்தின் துணைதலைவர் மயாங் ஷா கூறினார்.

 

 • வரும் 2017- 18ம்நிதியாண்டின் இறுதிக்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது. அதற்காக நாடு தழுவிய அளவில் 28000 புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவபட உள்ளதாகவும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம்; 8ஆம் கட்ட விரிவாக்க திட்டபடி அனைத்து 2ஜி செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு மாற்றாக நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய கோபுரங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.

 

 • 2016ம் ஆண்டு ஏப்ரல் -டிசம்பர் வரைவிலான கால கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுதுறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது இடத்திலுள்ளது.

 

Call Now