March 12

Date:14 Mar, 2017

March 12

We Shine Daily News

jkpo;

மார்ச் 12

தேசிய செய்திகள் :

12-3-17 world

 • 300 கிலோ எடை கொண்ட போர் தளவாடங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் படத்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநில கடற்கரையோரத்தில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பாலாசோர் அருகே சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து நடமாடும் லாஞ்சர் வாகனம் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. இதற்கு முன் 2014, ஜூன் மற்றும் 2015, பிப்ரவரியில் இருமுறை பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 • உ.பிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

 

 • ஆந்திர மாநிலம் அமராவதியில் உருவாகி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன என எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தலைவர் பி.சத்ய நாராயணன் கூறினார். அமராவதியில் கட்டபட்டு வரும் இப்பல்கலைக்கழக மாதிரி கட்ட வடிவமைப்பை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்து பார்வையிட்டார்.

 

 • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தமிழகத்தின் கன்னியா குமரி வரை கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தெரிவித்துள்ளார்.

 

 • ஹரித்துவாரில் ஹெலிகாப்டரில் மத்திய நிதிமந்திரி அருண்ஜேட்லி ஏறும் போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

 

 • பஞ்சாப் மாநில புதிய முதல்வராக மார்ச் 16ல் கேப்டன் அமரிந்தர் சிங் பதவியேற்க உள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள் :

12-3-17 indaa

 • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை பாகிஸ்தான் தொடுத்திருக்கிறது என ஐ.நாவுக்கான ஆப்கன் தூதர் மகமூத் சைகல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 • யேமனில் கிளர்ச்சியாளர்கள் நிலைகளுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

 

 • மணிலா பிலிப்பைன்ஸில் 48 ஆண்டு கால கம்யூனிச எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் போராளிகள் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

 

 • சீனா தனது அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருணே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தென்சீனக் கடல் பிரதேசத்தின் கட்டுப்பாடு யாருடையது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள நிலையில், தென்சீனக் கடல் பிரதேசத்தை சீனாவின் உச்ச நீதிமன்றம் தங்களது நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் அடங்குபவை என கருத்து தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

12-3-17 sports

 • இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 • ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் மார்ச் 15முதல் மார்ச் 26 வரை வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், நேபாளம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான பாபா அபராஜாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நெவால் தோல்வி கண்டார்.

 

 • 44வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கேரள போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 • காலே நகரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

12-3-17 eco

 • வீட்டுக்கடன் நிறுவனமான கேன்பின் ஹோம் நிறுவனத்தில் 13.45 சதவீத பங்குகளை கனரா வங்கி விற்றுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஜிஐசி நிறுவனத்துக்கு ரூ 753 கோடிக்கு விற்றுள்ளது.

 

 • வருமான வரிதுறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கெய்ர்ன் இந்திய நிறுவனம் ரூ 10247 கோடி வரி பாக்கியை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை குறிப்பிட்டிருந்த ரூ 18800 கோடி வரிக்கான வட்டித் தொகையை செலுத்த தேவையில்லை என தீர்ப்பளித்தது.

 

 • ர்pலையன்ஸ் கேபிடல் நிறுவன தலைமை செயலதிகாரி சாம் கோஷ் மார்ச் 31ல் பதவி விலகுகிறார். இவர் 2008ம் ஆண்டிலிருந்து இப்பதவி வகிக்கிறார். இவர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிதி சேவைகள் பிரிவை கடந்த 9 ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார்.

 

 • காப்பீடு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கு தயாராக இல்லாததால் அதனை கட்டாயப்படுத்த வில்லை என காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.

 

 • காஃபி டே எண்டர்பிரைசஸ் பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ 305 கோடி மூலதனத்தை பெற முடிவெடுத்துள்ளது.

 

 • நாடு முழுவதிலும் உள்ள தனது சொத்துக்களை நிர்வாகிக்க பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ சன்ஃப்ரா மேனேஜ்மெண்ட் சொல்யூஷன்ஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

 

Call Now