March 11

Date:14 Mar, 2017

March 11

We Shine Daily News

jkpo;

மார்ச் 11

தேசிய செய்திகள் :

11-3-17 india

 • மனித கழிவுகளை அகற்றுவோர் தேசிய ஆணைய தலைவராக மன்ஹர் வால்ஜிபாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் குஜராத் பா.ஜ.க சட்டப் பேரவை உறுப்பினராவார்.

 

 • ஏழை குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சை பெறும் வகையில் “ஹார்ட் டூ ஹார்ட்” எனும் திட்டத்தை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார். காவேரி மருத்துவமனையும், மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் -100 அமைப்பும் இணைந்து இத்திட்டத்தை தொடங்குகிறார்.

 

 • ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி கமெண்ட் பதிவு செய்தார்.

 

 • ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் கோவாவில் தான் அதிகம் பேர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். கோவாவில் 1.2 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

 

 • காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய பாகிஸ்தான் அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஐ.நா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் முடிவு செய்துள்ளார்.

 

 • முனைவர் பட்டம் பெற்றவர்களின் விவரங்களை 2 மாதங்களுக்குள் தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

 

 • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நடைமுறைகளில் ரொக்க பரிவர்த்தனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜூம் ஜைதி தெரிவித்துள்ளார்.

 

 • பிரதமர் மோடியின் புகைப்படத்தை உரிய அனுமதியின்றி தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸ் ஜியோ, பேடிஎம் ஆகிய இரு நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

 

பன்னாட்டு செய்திகள் :

11-3-17 world

 • ஹிந்துக்கள் திருமணம் தொடர்பான திருத்தப்பட்ட மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர், பத்துன்குவா ஆகிய மாகாணங்களில் ஹிந்து திருமண சட்டம் நடைமுறைக்கு வரும். சிந்து மாகாண அரசு ஹிந்து திருமண சட்டத்;தை தனியாக இயற்றியது.

 

 • சீன ராணுவத்தில் தற்போது 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஷெங் பின் கூறினார். இதன் முதல் கட்டமாக காத்திருப்பு பட்டியலில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.
  ராணுவத்தில் 3 லட்சம் வீரர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீனஅரசு நாளேடான குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது.

 

 • ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தென்கொரிய அதிபர் பார்க்-கியூன்-ஹையை பதவி நீக்கம் செய்த நாடாளுமன்ற நடவடிக்கையை தென்கொரிய அரசியல் சாசன சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.

 

விளையாட்டுச் செய்திகள் :

11-3-17 sports

 • ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3வது இடத்திலுள்ளார்.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சென்னைலீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை விவா, சென்னை சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

 

 • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

11-3-17 eco

 • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன தயாரிப்புக்காக வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களுடன் நீண்ட கால அடிப்படையிலயான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த 3 நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் வாகனம் 2019ம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 • அனில் அம்பானியின் ரிலையன்ஸ் -கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனம் அதன் புதிய 4ஜி வாடிக்கையாளாகளுக்கு ரூ 49க்கு 1 ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

 

 • அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேபிடலின் பேடிஎம் பங்குகள் ரூ275 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன.

 

Call Now