March 10

Date:14 Mar, 2017

March 10

We Shine Daily News

jkpo;

மார்ச் 10

தேசிய செய்திகள் :

10-3-17 india

 • கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த விருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • ஆரோவில் ரெட்எர்த் குதிரையேற்ற பள்ளி சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச அளவிலான குதிரையேற்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நிகழாண்டில் புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச குதிரையேற்ற போட்டிகள் மார்ச் 9ல் தொடங்கின.

 

 • தில்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 1000 மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்கள் அமைக்க டாடா தில்லி மின்சாரம் விநியோக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 • தாய்மை அடைந்த பெண்களுக்காக ஆறு மாதம் பேறுகால விடுமுறை அளிக்க வகை செய்யும் பேறுகாலப் பலன்கள் மசோதா மக்களவையில் மார்ச் 9ல் நிறைவேற்றப்பட்டது.

 

பன்னாட்டு செய்திகள் :

10-3-17 head

 • கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘ஹோமுஸ் -2’ ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ஹோமுஸ் -2’ என்ற இந்த ஏவுகணை சுமார் 250 கிமீ தூரத்தில் வானில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் நாட்டு விமான படை தளபதி ஜெனரல் அமிர்அலி ஹாஜி ஸாதே குறிப்பிட்டுள்ளார்.

 

 • மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இருந்து 25கிமீ தென்மேற்கில் அமைந்துள்ள சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் கவுதமாலா நாட்டில் 3 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது

 

 • இந்திய விண்வெளித்துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திராயன்-1. நிலாவை ஆராய்வதற்கு சந்திராயன்-1 விண்கலம் 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் 2009ல் ஆகஸ்ட் 29ம் தேதி சந்திராயன்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இழந்துவிட்டது.
  தற்போது சந்திராயன்-1 சந்திர மேற்பரப்புக்கு 200கிமீ தொலைவில் சுற்றி கொண்டிருக்கிறது என அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • 2020ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என உலகத் தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2017ல் தங்கத்திற்கான தேவை முன்னேற்றத்தை காணும் என்றாலும் வாடிக்கையாளர்கள் 650 டன்கள் முதல் 750 டன்கள் வரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

 • ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையில் 3 நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 • சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது. தற்போது பேஸ்புக்கில் மெஜஞ்சர்டே எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 • திபெத்தில் நடப்பு ஆண்டில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சீனா ரூ 28,380 கோடியை (430 கோடி டாலர்) ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

10-3-17 sports

 • 71வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி கோவாவில் மார்ச் 12ல் தொடங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றனர். அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 

 • 7 மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய வீராங்கனை ரீதுராணி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

 

 • ஜூஹாய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 • செயிண்ட் ஜோசப் குழுமம் – தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் நடைபெற்ற சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.

 

 • பாகிஸ்தானின் 42 வயதான கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல்ஹக் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

10-3-17 econo

 • தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக 3 புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தியது. ஃபாஸ்டேக், யுனிஃபைடு பேமண்ட் இன்டர்ஃபேஸ், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் ஆகிய மூன்று தொழில் நுட்ப சேவைகளாகும்.

 

 • தென்கொரியாவை சேர்ந்த ஹ_ண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் பிரபல மாடலான ஐ10 உற்பத்தியை நிறுத்தியது.

 

 • கோடக் மஹிந்திரா வங்கியின் ரூ 2255 கோடி மதிப்பிலான 1.5மூ பங்குகளை உதய் கோடக் விற்பனை செய்தார்.

 

 • இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடததில் நீடிக்கிறார். ஷீரன் ரிப்போர்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 • வெறும் 1ரூ விலையில் மிட்டாய்களை விற்று ரூ300 கோடி வருமானம் பார்த்து பல்ஸ் நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது.

 

Call Now