March 09

Date:09 Mar, 2017

March 09

We Shine Daily News

jkpo;

மார்ச் 09

தேசிய செய்திகள் :

9-3-17 india

 • நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் சிறு மீனவர்கள் அதிநவீனப் படகுகள் வாங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். யூனியன் பிரதேசமான டையூ மற்றும் டாமனில் உள்ள டையூ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

 • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாய மாக்கியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ள காரீஃப் பருவம் முதல் இந்த புதிய விதிமுறை அமலாகிறது.

 

 • சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன் மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

 

 • ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச்செயலருமான நாராலோகேஷின் சொத்து மதிப்பு ரூ.330 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் 23 மடங்கு உயர்ந்துள்ளது.

 

 • வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆதார் விண்ணப்ப நகலை இணைக்க வேண்டுமென மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

 • மூத்த பத்திரிக்கையாளர் அரவிந்த் பத்மநாபன் (49) திடீர் உடல்நலக் குறைவால் புதுதில்லியில் காலமானார். இவர் ஐ.ஏ.என்.எஸ்.செய்தா நிறுவனத்தில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். நாட்டின் சிறந்த வர்த்தக செய்தி ஆசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டவர். பிடிஐ செய்தி நிறுவனம், டைம்ஸ் ஆப் இந்தியா, டிவி 18 ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.

 

 • இந்திய – வங்கதேசம் எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலி அமைக்கும் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • நாடு முழுவதும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாக்கி விட்டன என பிரதமர் மோடி கூறினார். திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறையை வரும் 2019ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ல் தொடக்கி வைத்தார்.

 

 • கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் பெப்சி நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குளிர்பான உற்பத்திக்கு தேவையான நீரை எடுப்பதற்காக 7 ஆழ்துளைக் கிணறுகளை பெப்சி நிறுவனம் அமைத்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதால் பெப்சி நிறுவனம் நிலத்தடி நீரைப் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 9 (இன்று) தொடங்குகிறது. இந்த அமர்வில் சரக்கு –சேவை வரியை அமல்படுத்த வழிவகுக்கும் 3 சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவோர் 15 நாள்களில் பணத்தைப் பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

 

பன்னாட்டு செய்திகள் :

9-3-17 world

 • சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான ‘ஸ்மார்ட் டிவி’ க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம் அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

 

 • ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

 

 • அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா பெற்று பணியுரியும் வெளிநாட்டினருடன் அவருடன் மனைவி அல்லது கணவரும் பணிபுரிய அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்ப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் பதிலளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள்கள் அவகாசம் கோரியுள்ளது.

 

 • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இருநாட்டு மீனவர்களையும் பரஸ்பரம் விடுவிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

 

 • அமெரிக்காவில் ஹெச் 1பி விசா ரத்தை தொடர்ந்து ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களின் வேலைக்கான அதிகாரத்தை 60 நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு அமெரிக்க நீதித்துறை வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

9-3-17 sports

 • இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.

 

 • மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரின் 5வது ஆட்டத்தில் இந்திய அணி பெலாரஸ் அணியைத் தோற்கடித்தது.

 

 • இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு ஹாக்கி போட்டி மார்ச் 11 முதல் 16 வரை சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்குகிறது.

 

 • ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

 

 • சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வருமான வரி அணி வெற்றி பெற்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

9-3- 17 economic

 • ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றது. இதன் மதிப்பு ரூ 275 கோடி ஆகும்.

 

 • உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் 2020ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என தெரிவித்துள்ளது.

 

 • ‘மில்க் டு மணி’ என்ற திட்டத்தின் கீழ் எச்.டி.எஃப்.சி.வங்கி நாடு முழுதும் சுமார் 1200 பால் கூட்டுறவு நிலையங்களை டிஜிட்டல் மயப்படுத்தியுள்ளது.

 

 • இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இருக்கும் பண்ட் மேலாளர்களி பெண்களின் பங்கு 7% மட்டுமே உள்ளது. சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு

Call Now