March 08

Date:09 Mar, 2017

March 08

We Shine Daily News

jkpo;

மார்ச் 08

தேசிய செய்திகள் :

8-3-17 india

 • 2017ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது. இதில் பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடீயூட் 8ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் இப்பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதன்முறை.

 

 • மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘நீட்’ மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதால் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் முயற்சியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர்.

 

 • நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் சக்திவர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக தற்போது உள்ளார்.

 

 • ஆசிய பசிபிக் நாடுகளில் அதிகளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. ஜெர்மனியை மையமாக கொண்ட சர்வதேச ஊழல் எதிர்ப்பு குழுக்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தியது.

 

 • நாட்டின் தலைசிறந்த எம்.பி.யாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மதிப்பீட்டு அமைப்பு என்ற குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

 • ஸ்டேட் வங்கி கூடுதல் பணப்பரிவர்த்தiனே செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் குறைந்த பட்ச பணம் இருப்புக்கும் ஸ்டேட் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிடுங்கள் என ஸ்டேட் பாங்குக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • திருப்பதியிலிருந்து காஷ்மீரில் உள்ள ஜம்முதாவிற்கு புதிய அதிவேக விரைவு ரயில் தொடங்கப்பட உள்ளதாக திருப்பதி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • மார்ச் – 8 இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

 • ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

 • நாட்டிலுள்ள 91 முக்கிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம், மொத்த கொள்ளளவில் சுமார் 41சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

8-3-17 world

 • சவுதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்து விட்டதாக மலேசிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • இராக்கின் மொசூல் நகரில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுத் தலைமைச் செயலக கட்டடத்தை ராணுவத்தினர் மீட்டனர்.

 

 • இராக், சிரியா உள்ளிட்ட இடங்களில் உள்ள புனித இடங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட சென்ற ஈரானை சேர்நத 2100 போராளிகள் பலியாகினர். சுpரியா மற்றும் இராக்கில் ஷியா பிரிவினரின் புனிதமான மற்றும் பழமையான தலங்களைப் பாதுகாக்க ஏராளமான வீரர்களை ஈரான் அனுப்பி வருகிறது.

 

 • கொரியா ஜனநாயக மக்கள் குடியரசில் (வடகொரியா) வசித்து வரும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

8-3-17 sports

 • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களுக்கு இடையிலான 37வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் மார்ச் 12 வரை நடக்கிறது.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த ஸ்டார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஸ்பான்சராக ‘ஒப்போ’ என்ற செல்போன் நிறுவனம் தேர்வாகி உள்ளது. இது 5 ஆண்டுகாலம் அமலில் இருக்கும்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

 

 • கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் ஒழுங்கீன செயல்படும் வீரர்களை போட்டியிலிருந்து விலக்கும் அதிகாரத்தை நடுவருக்கும் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.

 

 • இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி மார்ச் 11ல் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்குகிறது.

 

 • பெங்களுர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை 25 முறை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

8-3-17 economic

 • ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றது. இதன் மதிப்பு ரூ 275 கோடி ஆகும்.

 

 • உள்நாட்டு இரும்பு பயன்பாட்டை அதிகரிக்க விரைவில் புதிய உருக்கு கொள்கைகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

 

 • பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹட்சன் அக்ரோ புராடெக்ட் லிமிடெட் நிறுவனம் காற்றாலை மற்றும் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் ரூ. 180 கோடி முதலீடு செய்துள்ளது.

 

 • பதிப்பக துறையில் இருக்கும் நிறுவனமான எஸ்.சந்த் பொதுப்பங்கு வெளியிடுவதற்கு ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

 

 • பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.295 கோடி மதிப்பிலான வாராக்கடன்கள் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளது.

 

 • டாடா மோட்டார்ஸின் ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் விற்பனை சென்ற பிப்ரவரியில் 9.3சதவீதம் அதிகரித்தது.

 

 • நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1சதவீதம் ஆக இருக்கும் என அமெரிக்காவை சேர்ந்த பிட்ச் தரக்குறியீட்டு நிறுவனம் கணித்துள்ளது.

 

Call Now