March 07

Date:09 Mar, 2017

March 07

We Shine Daily News

jkpo;

மார்ச் 07

தேசிய செய்திகள் :

7-3-17 india

 • ஐ.என்.எஸ் விராட் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எனும் பெருமையை பெற்றது. 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணிகளுக்கு பயன்பட்டுள்ளது. இக்கப்பல் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே 27 ஆண்டுகள் கடற்படையில் பயன்படுத்தப்பட்டது. 1987ல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பல் 1943ல் இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. 226.5மீ நீளமும் 49மீ அகலமும் உடையது. இந்த விமானத்திலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களை செலுத்த முடியும். மார்ச் 6 இன்று முதல் கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

 

 • 2008ம் ஆண்டு மும்பை நகரில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழு தான் என பாகிஸ்தான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

 

 • தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை மார்ச் 28ல் கொண்டாட வேண்டும் என காஞ்சி மடத்தின் ஆஸ்தான பஞ்சாங்கப் பண்டிதர் சுப்ரமணிய சித்தாந்தி சீனிவாச கர்கேயா திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களின் படி இதை தெரிவித்தார்.

 

 • இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் ஊதியம் 25% குறைவாக இருப்பதாக வேலைவாய்ப்பு இணையதளமான ‘மான்ஸ்டர்.காம்’ 2000 பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 • நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகளை புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரூ.4500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

 • உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கும் வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா மகளிர் சபையுடன் மேற்கொள்ளப்பட்டது.

 

 • உலகளவில் பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம், பயிற்சி, புகலிடம் உள்ளிட்ட ஆதரவளிப்பது ஆகியவற்றை சட்டவிரோதமாக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை ஐ.நா உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் மகோகர் பாரிக்கர் வலியுறுத்தியுள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள் :

7-3-17 world

 • பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது எல்லை தாண்டிவந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது புதிய உத்தரவில் சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான பப்புவா நியூகினியாவில் மார்ச் 6ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவானது.

 

 • இங்கிலாந்தில் உள்ள சவுத்லேக் சபாரி உயிரியல் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்ததால் காப்பகத்தை மூட இங்கிலாந்து நாட்டு விலங்குகள் நலவாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

 • ஹிமாசல பிரதேசத்தில் இந்தியா – ஓமன் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி மார்ச்- 6ல் தொடங்கியது. இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்த பயிற்சி 14 நாள்கள் நடைபெற உள்ளது. 2015ல் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருநாட்டு ராணுவ வீரர்கள் முதல் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.

 

 • வடகொரியாவின் வடக்கு பியோங்கன் மாகாணத்திலுள்ள டோங்சாங்ரி பகுதியிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இவை தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளாகும். அந்த ஏவுகணைகள் சுமார் 1000 கிமீ தூரம் பறந்து சென்று கிழக்கு கடலுக்குள் பாய்ந்தன என தென்கொரிய முப்படைகளின் தலைவரான தளபதி லீ சூன்-ஜின் தெரிவித்தார்.

 

 • சீன பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ 1.04லட்சம் கோடி யுவான் (சுமார் ரூ 10.18 லட்சம் கோடி) என சீன அரசு செய்தி நிறுவனம் ஜின்ஹீவா தெரிவித்தது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 7.6% அதிகமாகும். சீனாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு 1 லட்சம் கோடி யுவானைத் தொடுவது இதுவே முதன்முறை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.3% ஆகும். நேட்டோ நாடுகளின் சராசரி ஒதுக்கீடு 2% ஆகும்.

 

விளையாட்டுச் செய்திகள் :

7-3-17 sports images

 • சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் வருமான வரித்துறை, ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

 

 • இந்தியன் சூப்பர்லிக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி பதவி விலகினார்.

 

 • விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

 

 • பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி மிஸ்பா உல்ஹாக் தலைமையில் களமிறங்குகிறது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

7-3-17 eco

 • சாம்சங் கேலக்ஸி ஏ7 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ5 என்ற இரு புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மும்பையில் நேற்று அறிமுகம் செய்தது.

 

 • செப்டம்பர் மாதத்திலிருந்து ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

 • டாடா மோட்டார்ஸ் ‘டியாகோ ஏ.எம்.டி’ என்ற புதியரக காரை புதுதில்லியில் அறிமுகம் செய்தது.

 

 • ‘சஸ்பென்ஷன் பிவிசி பிசின்’ தயாரிப்பில் முன்னணியிலுள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் குளோரினேட் செய்யப்பட்ட பிவிசி உற்பத்தி திட்டம் உள்பட விரிவாக திட்டங்களுக்காக ரூ 1050 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

 

Call Now