March 06

Date:09 Mar, 2017

March 06

We Shine Daily News

jkpo;

மார்ச் 06

தேசிய செய்திகள் :

6-3-17 india

 • இந்திய ராணுவத்தில் ‘இன்சாஸ்’ என்றழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கி 1988ல் அறிமுகமானது. இந்த துப்பாக்கிகளை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இச்சாப்பூர் ஆயுத தொழிற்சாலை தயாரித்து வந்தது. தற்போது இன்சாஸ் துப்பாக்கி ராணுவத்திலிருந்து விடைபெறுகிறது.இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக வெளிநாட்டு துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

 • பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாடாளுமன்றத்தில் மார்ச் -9ல் கூடுகிறது.

 

 • 1960ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்துநதிநீர் பகிர்வு ஒப்பந்தம் லாகூரில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மார்ச் 20, 21ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2015ம் ஆண்டு மே மாதம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் 2 முதல் 4% உயர்த்தப்பட உள்ளது.

 

 • பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அதிகம் வளரும் இடங்களில் செல்லிடப்பேசியும் ஒன்றாகி விட்டது என மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள மத்திய அரசின் தேசிய நுண்ணுயிர் அறிவியல் மைய விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

6-3-17 world

 • ராணுவத்துக்கான செலவினத்தை முதல்முறையாக 152 பில்லியன் டாலராக சீனா உயர்த்தியுள்ளது. பாதுகாப்புக்காக செலவிடப்படும் இந்த செலவினங்கள் தொடர்பான அறிக்கையை சீன பிரதமர் லி கெகியாங் வெளியிட்டார்.

 

 • பெய்ஜிங்கில் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 2900 உறுப்பினர் இந்த குழுக் கூட்டத்தில் உள்ளனர்.

 

 • உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஐபோன் எக்ஸ் எனும் பெயருடன் ‘ஐபோன்-8’ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. ஐபோன் 8 வகை போன்கள் 5.8இன்ச் அளவு திரையுடன் ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகி உள்ளது.

 

 • பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் உள்ள தகவல் பரிமாற்ற சேவையான பேஸ்புக் மெசேஞ்சரில் ‘டிஸ்லைக்’ எனப்படும் ‘தம்ப்ஸ் டவுன்’ பட்டன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரச்சாரத்தில் இருந்தபோது தனது டெலிபோன் உரையாடல்களை டேப் செய்து ஒட்டு கேட்டு உளவு பார்த்ததாக ஒபாமா மீது டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 • வடகொரியா மீண்டும் 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி சோதனை நடத்தியது. அதற்கு கொரிய தீப கற்பத்திலுள்ள தென்கொரியா, ஜப்பான், வியட்நாம், சீனா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

6-3-17 sports

 • டேவிஸ் கோப்பை டென்னிஸில் ஆசிய ஓசியானியா பிரிவில் 2வது சுற்றில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.

 

 • 17 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மார்ச் 7ல் தொடங்குகிறது.

 

 • துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே பட்டம் வென்றார். ஏடிபி தொடரில் இவர் வென்ற 45வது பட்டம் இதுவாகும்.

 

 • சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய பெருந்துறைமுகங்கள் இடையிலான செஸ் போட்டியில் சென்னை துறைமுக அணியும், கேரம் போட்டியில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

 

 • மெக்சிகோ அகாபுல்கோ நகரில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் சாம் கியூரி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

6-3-17 eco

 • இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 சதவீதம் முதல் 30 சதவீதம் ஊழியர்களை பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது.

 

 • மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் 4 போயிங் விமானங்களை வாங்குவதற்காக ரூ 3100 கோடியை குறுகிய கால கடனாக திரட்டும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

 

 • ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி மார்ச் 9ல் தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய ஸ்போர்ட்ஸ் ரக காரை காட்சிபடுத்த தயாராக உள்ளது.

 

Call Now