March 05

Date:09 Mar, 2017

March 05

We Shine Daily News

jkpo;

மார்ச் 05

தேசிய செய்திகள் :

5-3-17 india

 • ராஜஸ்தானின் ஹனுமான்கர் மாவட்டத்தை சேர்ந்த காஷிஷ் என்ற 12 வயது சிறுமி புகையிலை எதிர்ப்பு பிரச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • தேசிய புதுமை கண்டுபிடிப்புகள் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள விளையாட்டு அரங்கில் புதுமையான கண்டுபிடிப்புகள் பற்றிய கண்காட்சி பிப்ரவரி 4ல் தொடங்கியது. இக்கண்காட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

 

 • பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும், சமையலர்களும் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி சையது சஹாபுதீன் காலமானார். 1958ல் இந்திய வெளியுறவு பிரிவு அதிகாரியாகவும் 1959 முதல் 1961 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதராகவும், துணைத் தூதராகவும் பதவி வகித்துள்ளார்.

 

 • தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 11வது கூட்டம் மார்ச் 4ல் நடைபெற்றது. இதில் சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவுசெய்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

 

 • கனகாம்பரம், சவுக்கு மரம் சாகுபடியில் புதிய ரகங்களையும், நவீன தொழில்நுட்ப உத்திகளையும் உருவாக்கிய புதுச்சேரியை சேர்ந்த விவசாயி டி. வெங்கடபதி ரெட்டியாருக்கு தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். ‘9வது புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுக்கான தேசிய விருது 2017’ விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

பன்னாட்டு செய்திகள் :

5-3-17 world

 • சீன பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு 7% அதிகரிக்கப்படும் என சீன நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 

 • வடகொரியா மீது ஐ.நா சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை மலேசியா மீறி விட்டதாக சிலதினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை மலேசியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

 • இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து ரஷிய உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மாஸ்கோ செல்ல உள்ளார்.

 

 • அமெரிக்காவில் விற்பனை செய்த 3.54லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகமான சூடேறுதல் பிரச்சினையை சரி செய்து தருவதற்காக இந்த நடவடிக்கையை மெர்சிடிஸ் மேற்கொண்டுள்ளது.

 

 • இலங்கையில் கிழக்கு துறைமுக மாவட்டமான திரிகோண மலையிலுள்ள சாம்பூர் நகரில் ‘மறு சீரமைக்கப்பட்ட ஐக்கிய விடுதலைப்புலிகள் முன்னணி’ எனும் புதிய கட்சி தொடங்கப்பட்டது.

 

 • இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் 2018ம் ஆண்டுக்குள் மின்சார வசதியை செய்து கொடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் தாமேந்திர பிரதான் தெரிவித்தார்.

 

 • அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த விரும்புவதாக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய் சங்கர் தெரிவித்தார்.

 

 • அமெரிக்காவுக்கு பணிநிமித்தம் செல்வோருக்கு வழங்கப்படும் பிரீமியம் ஹெச்.1.பி விசாவை வழங்கும் நடைமுறைக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

 • ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தென்மேற்கு வளைகுடா பகுதியில் வறட்சி காரணமாக 2 நாட்களில் மட்டும் 110 பேர் பட்டினியால் இறந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சோமாலியாவின் வறட்சி பாதித்த பேரழிவு நாடாக சோமாலியா அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அறிவித்துள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

5-3-17 sports

 • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) லோதா கமிட்டியின் பரிந்துரைகள் அனைத்தும் அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விடும் என பிசிசிஐ நிர்வாக குழு தலைவரும், முன்னாள் சிஏஜி தலைவருமான வினோத் ராய் தெரிவித்தார்.

 

 • மிஸோரம் தலைநகர் ஐஸால் நகரில் நடைபெற்ற ஐலீக் கால்பந்து போட்டியில் ஐஸால் எப்.சி அணி மும்பை எப்.சி அணியைத் தோற்கடித்தது.

 

 • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி கண்டது.

 

 • மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெக்சிகோ ஓபன் போட்டியில் நடால் 14 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

5-3-17 econo 

 • புதிதாக உருவான தெலங்கானா மாநிலத்தில் டிஜிட்டல் மயமாக்கப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுடன் கூகுள் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • டாக்ஸி சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம் ஏராளமான தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் மத்திய பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் 25000 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 

 • மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் ரூ. 33000 கோடி அளவுக்கு முதலீட்டை எதிர்பார்ப்பதாக மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

Call Now