March 02

Date:02 Mar, 2017

March 02

We Shine Daily News

jkpo;

மார்ச் 02

தேசிய செய்திகள் :

2-3-17 india

 • போர் சமயங்களில் எதிரி நாடுகளின் குறிப்பிட்ட பகுதியை அழிக்க ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு எதிரி நாடுகள் செலுத்தும் ஏவுகணைகளை கண்டறிந்து நடுவானிலேயே அவற்றைத் தகர்க்கும் வகையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் அதிவேக இடைமறி ஏவுகணை “சூப்பர்சோனிக் இன்டர் செப்டர்”-யை தயாரித்துள்ளது.
  இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

 

 • தனியார் வங்கிகளில் மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தபட்சம் ரூ.150 ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சேமிப்புக் கணக்கு மற்றும் ஊதியக் கணக்குகளுக்கு இந்த கட்டண வசூலிப்பு பொருந்தும். சொந்த வங்கிக்குள்ளேயே பிறரது கணக்கு அனுப்பப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் அளவு சராசரியை விட அதிகாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1000 நோட்டுக்களை 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு அவர்கள் வைத்திருக்கும் நோட்டுக்களைப் போல 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்க வழிவகை செய்யும் இந்த மசோதாவுக்கு பிப்ரவரி -27ல் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி புதிய சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

 

 • மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மானியத்துடன் குடும்பத்துக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படுகின்றன.

 

 • கேரளத்தில் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பீட்டுத்திட்டம் நடப்பு நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கேரள மாநில கால்நடைத் துறையமைச்சர் கே.ராஜூ தெரிவித்தார். இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 40000 கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

 

 • மாநில சட்டமேலவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு உச்சவரம்பினை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  சட்டமேலவைகளுக்கு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவில் ஜம்முகாஷ்மீர், ஆந்திரம், பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே சட்டமேலவை செயல்பட்டு வருகிறது.

 

 • உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் 29வது சர்வதேச யோகா விழாவை உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கே.கே. பால் மார்ச் 1ல் தொடங்கி வைத்தார். உத்தரகாண்ட் மாநிலம் யோகக்கலை தோன்றிய தேவ பூமி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • கங்கை நதி மாசுபடுவதை தடுப்பதற்காக பிகார் மாநிலம், பாட்னாவில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இதர கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதற்காக ரூ.1050 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

2-3-17 world news

 • இஸ்ரோ வரலாற்றில் கடந்த 2008ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவர சாதனையாக இருந்தது. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் இந்தியா விண்ணில் செலுத்திய சாதனையை கேட்டு அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குநர் டோம் கோட்ஸ் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

 

 • விசா பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

 

 • தனது நாட்டின் சுரங்க ரயில் பாதைகளை ஆய்வு செய்வதற்கு ஆளில்லா வாகனங்களை பயன்படுத்த சிங்கப்பூர் பரிசீலிக்கிறது.

 

 • ஆஸ்திரேலியா தனது வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதற்காக உலக நாடுகளிலுள்ள தனது தூதர்களை தற்காலிகமாக திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது.

 

 • திருமணம் செய்துகொள்ள ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டுமென சட்டம் வங்கதேச நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறிப்பிட்ட சில சூழல்களில் 14 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அந்த சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறார் திருமணத்துக்கு அனுமதி வழங்கும் இந்த புதிய சட்டத்துக்கு மனித உரிம ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 • இரும்பு உருக்கு, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் பிற கனரக தொழில்துறையில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்களை இந்த ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்ய முடிவுசெய்திருப்பதாக சீனதொழிலாளர் நலத்துறை அமைச்சர் யின் வெய்மின் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்ற விதிமுறைகளில் கடுமையைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளார். தனது முதல் நாடாளுமன்ற உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் தகுதி அடிப்படையில் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கும் முறையை கடைபிடிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

 

 • ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமயான நிபந்தனைகளுடன் கூடுதல் கால அவகாசம் அளிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

2-3-17 sports

 • தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மார்ட்டின் கப்தில் அதிரடியால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

 

 • விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களிடம் இருந்து ராஜூவ்காந்தி கேல்ரத்னா விருது, அர்ஜூனா விருது, தயன்சந்த் விருது, துரோணாச்சார்யா விருது, ராஷ்ட்ரீய கேல் புரோத்ச ஹான் புரஸ்கார் விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

 • பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பாலிஉம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியும், திலீப் சர்தேசாய் விருதுக்கு அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆடவர் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிதுராய் உலக சாதனையோடு தங்கமும், அமன்பிரீத் சிங் வெள்ளியும் வென்றனர்.

 

 • சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை யுனைடெட் அணி இந்தியன் வங்கி அணியை தோற்கடித்தது.

 

 • இந்திய இளையோர் உலககோப்பை கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த லூயிஸ் நார்டன் டிமாடோஸ் நியமிக்கப்பட்டார்.

 

 • இத்தாலி தலைநகர் ரோமில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

2-3-17 economic

 • ‘நைட் பிராங் நிறுவனம்’ 2017ம் ஆண்டுக்கான உலக பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டதில் வளம் மிக்க நகரங்கள் குறியீட்டு அடிப்படையில் மும்பை 21வது இடத்தைப் பிடித்துள்ளது. டொரண்டோ, வாஷிங்டன் டிசி, மாஸ்கோ ஆகிய நகரங்கள் இதற்கு பின்னால் உள்ளது. டெல்லி 35வது இடத்தைப் பிடித்தது.

 

 • இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலவராக அஜய் தியாகி மார்ச் 1 ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நிதி அமைச்சகத்தில் பணியாற்றியவர். கமாடிட்டி வர்த்தகத்துக்கான ஒழுங்குமுறை ஆணையமான ஃபார்வர்டு மார்க்கெட் கமிஷன் ஆணையத்தை செபியுடன் கடந்த ஆண்டு இணைத்ததில் இவர் பங்கு அதிகம்.

 

 • ராணுவத்துக்கு தேவையான கருவிகள் தயாரிப்புக்கு தேவையான உயர் உருக்கு தகடுகளை தயாரிக்க ஜிண்டால் ஸ்டீல் ஹிலார் லிமிடெட் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

 

Call Now