March 01

Date:01 Mar, 2017

March 01

We Shine Daily News

jkpo;

மார்ச் 01

தேசிய செய்திகள் :

1-3-17 india

 • ஜூலை 1ம்தேதி முதல் சரக்கு –சேவை வரி அமலுக்கு வரும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

 

 • சென்னை – கொல்லம் இடையே ஏப்ரல் 13ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 • உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்திலுள்ள தீன்தயாள் வளாகத்தில் ‘கிராமோதயா மேளா’வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பகுதி உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநில எல்லையில் உள்ளது. இங்கு நடந்த உழவர் சந்தையில் ரூ 9.25கோடி மதிப்புள்ள எருது அனைவரையும் கவர்ந்தது. இந்த யுவராஜ் என்ற எருதின் வயது 9, எடை 150 கிலோ, 11.5 அடி நீளமும் 5.8 அடி உயரமும் உடையது.

 

 • மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணிண் புத்தி மற்றும் உடல்வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய 26 வாரக்கருவைக் கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

 

 • கன்னியாகுமரி மாவட்டத்தின் ‘இனயம்’ வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. பதினொரு கடல்மைல் தூரத்துக்குள் மீன்பிடிக்கக் கூடிய வகையிலும், பிடித்த மீன்களை பதப்படுத்தி வைக்க வகைசெய்யும் துறைமுகமாகவும் இனயம் விளங்கும். இனயம் துறைமுகத்தில் இருந்து பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான முழுவசதிகளைச் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக அரசும் இதற்கும் ஒத்துழைப்பு தர வேண்டுமென மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

 • சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்க வகைசெய்யும் மசோதாவை மக்களவையில் பா.ஜ.க எம்.பியும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி கொண்டு வந்துள்ளார்.

 

 • தேசிய மீனவர் பேரவையின் செயற்குழு கூட்டம் வரும் மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது.

 

 • இந்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) தலைமை இயக்குநர் பதவியிலிருந்து துர்கா பிரசாத் ஓய்வு பெற்றார். ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கியதில் பெரும்பங்காற்றியவர் இவர்.

 

பன்னாட்டு செய்திகள் :

1-3-17 world

 • 2018ம் ஆண்டு புளோரிடா மாகாணம் கென்னடி ஏவுதளத்திலிருந்து டிராகன் விண்கலத்தில் 2 பயணிகளை நிலவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்க அமெரிக்காவின் ஸ்பேக் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 • லண்டனில் பக்கிங்காம் அரண்மனையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டுவிழா நடந்தது. இதில் 90வயது இங்கிலாந்து ராணி எலிசபெத் பரதநாட்டியத்துக்கு அபநயம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 • அமெரிக்கா பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5400கோடி டாலர் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதில் சிறந்த நாடாக அமெரிக்காவை உருவாக்க அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார்.

 

 • இத்தாலி நாட்டில் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை நேற்று முதல் வெடிக்கத் தொடங்கிஉள்ளது. எரிமலையின் முகப்பிலிருந்து லாவா எனும் நெருப்பு குழம்பு வெளிப்பட்டு வழிந்து வருகிறது.

 

விளையாட்டுச் செய்திகள் :

1-3-17 sports

 • ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஒல்கா கோர்பட் பெலாரஸ் நாட்டில் பிறந்தவர். 1972ல் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனது 17 வயதில் 3 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றார். 1976ல் மான்ட்ரியல் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றார். தற்போது பொருளாதார நெருக்கடியால் ஒலிம்பிக்கில் வென்ற 2 தங்கம் ஒரு வெள்ளி உள்ளிட்ட அவரது உடமைகளை ரூ 2¼ கோடிக்கு ஏலத்தில் விற்றார்.

 

 • இந்தியா –ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புனே ஆடுகளம் மோசமானது என போட்டி நடுவர் அறிக்கை அளித்துள்ளார். அது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிதுராய், 50மீ பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

 

 • இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஐ.சி.எப், சென்னை சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

 

 • விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் ஹிமாசலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

1-3-17 eco

 • ஜப்பானை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான என்.டி.டி. டோகோமோவுடன் ஏற்பட்ட விரிசலை சமரசமாக தீர்த்துக் கொள்ள 118 கோடி டாலர் அளிக்க டாடா சன்ஸ் ஒப்புக் கொண்டது.

 

 • மின்னணு பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் எல்.ஐ.சி காப்பீடு பிரிமியத்தை வசூலிக்க ஏஜெண்டுகளுக்கு பி.ஓ.எஸ் இயந்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

 

 • தமிழகத்திலிருந்து மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டில் சிறப்புக் கண்காட்சிக்கு இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

 

 • ரிலையன்ஸ் ஜியோ நிர்ணயம் செய்திருக்கும் கட்டணங்களை நீண்ட நாளைக்கு தொடர முடியாது என பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

 

Call Now