JULY 04

Date:04 Jul, 2017

JULY 04

                                          We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஜூலை 04

                                                                                                    தேசிய செய்திகள் :

 

 • 1931 ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் மகாத்மா காந்தி பங்கேற்றப்போது தரையில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருந்தார்.அதை அப்படியே ஓவியமாக ஜான் ஹென்றி என்ற ஓவியர் பென்சிலால் வரைந்தார். இவ்வோவியம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 • இந்திய இரயிலில் பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் தற்போது 120 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வசதி இருந்தது. இனிமேல் 360 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய இரயில்வே இந்த வாரத்தில் வெளியிடவுள்ளது.

 

 • சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து விவசாயிகளின் பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

 

 • மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கும் சரக்கு –சேவை வரி விதித்ததை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.

 

 • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் தமிழகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்று மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

 

 • ஓடிஸா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஏவுகணை சோதனை நடைப்பெற்றது. இச்சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கிய ஏவுகணை வெற்றியை தந்தது.

 

 • ஜிஎஸ்டி வரி விலக்கு அமலுக்கு வந்த பின் தமிழ்நாடு கேரளா மற்றும் டெல்லி போன்ற 22 மாநிலங்களில் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.

 

                                                                                                     பன்னாட்டு செய்திகள் :

 

 • ஜப்பான் கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனையை வீசி வடகொரியா சோதனையை மேற்கொண்டது. உலக நாடுகளின் எதிப்பை மீறி வடகொரியா செயல்படுகிறது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

 

 • தென் சீனக் கடல் எல்லைக்குள் அமெரிக்க போர் கப்பல் நுழைந்தது. அமெரிக்காவின் இத்தகைய செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பிரபல செய்தி ஊடகத்தை கிண்டல் செய்யும் விதத்தில் வீடியோ காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 • போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் கூட்டணி நாடுகளுடன் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • பிரதமர் மோடியின் பயணத்தின் போது இந்தியா – இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹ தெரிவித்துள்ளார்.

 

 • சீனாவில் உள்ள தொழிற்சாலையை மறுகட்டமைப்பு செய்வதை முன்னிட்டு கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்சங் நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

 

 • அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான தேசிய பேச்சு மற்றும் விவாதப் போட்டியில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட சீக்கிய மாணவரான ஜே.ஜே.கபூர் வெற்றி பெற்றுள்ளார்.                                                                                                                                                                                                                              விளையாட்டு செய்திகள் :

 

 • விம்பிடன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் இருவரும் மோதி கொண்டனர்.இப்போட்டியில் ஆன்டி முர்ரே வெற்றி பெற்றார்.

 

 • பரபரப்பான போட்டியில் சிலியை வீழ்த்தி கான்பெடரேஷன் கோப்பையை வென்று உலகின் சிறந்த கால்பந்து அணி என்று நிரூபித்து காட்டியது ஜெர்மனி அணி.

 

 • 189 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி தோல்வியுற்றது.

 

 • உலக குத்துச்சண்டை போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வீரரான மானி பக்வாயோவும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜெப் ஹார்னும் மோதினர். இதில் ஜெப் ஹார்ன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • ஐஎஸ்எல் சென்னை அணியின் பயிற்ச்சியாளராக ஜான் கிரேகரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீயன்சை 48 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா அணி.

 

 • சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கவுதமாலா வீரர் ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை தமிழக வீரரான கே. கரண்ராஜ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 64.79 ரூபாயாக உள்ளது.

 

 • மும்பை பங்கு சந்தையில் திங்கட்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது.

 

 • ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனாக டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனியின் இருசக்கர வாகனங்களின் விலை ரூ.4150 வரை குறைந்துள்ளது. என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                                                                              CURRENT AFFAIRS

 • Union minister for skill development  – Rajeev Pratap Rudi laid foundation stone for the India’s biggest skill park in Bhopal, Madya Pradesh

 

 • Madhya Pradesh sets record with plantation of 6cr sapling in day

 

 • WHO declares an end to Ebola outbreak in democratic republic of the Congo

 

 • Assam government has raised a new special Rhino Protection Force for the better protection of one – horned Rhinos

 

 • Novak Djokvic wins East bourne Aegon championship by defeating Gael Montils in men’s singles

 

 • Germany has won their first ever Football Confederation Cup title

 

 • Jehan Daruvala becomes 1st Indian to win FIA formula 3 European Championship  race

 

Call Now
Message us on Whatsapp