June 9

Date:09 Jun, 2017

June 9

We Shine Daily News

jkpo;

 ஜூன் 9

தேசிய செய்திகள் :

 • சர்வதேச அளவில் நிலவி வருகிற கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

 

 • நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு, சேவை வரி அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இதில் மொத்தம் உள்ள 1200க்கும் மேற்பட்ட பொருட்களில் 7 சதவீத பொருட்கள் வரி விலக்கு பெற்றுள்ளன. 14 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பின்கீழும், 17 சதவீத பொருட்கள் 12 சதவீத வரி விதிப்பின்கீழும், 43 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பின்கீழும், 19 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பின்கீழும் வரும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா கூறியுள்ளார்.

 

 • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை 9 பேர் கொண்ட குழு ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்கிறது.

 

 • காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நுகம் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

 

 • மாவோயிஸ்ட்களை ஒடுக்க சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இருந்து 242 பெண்கள் உட்பட 743 பழங்குடியினர் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

 

 • வீடு, பால்ஸ் சீலிங் மறைவு, பதுங்கு குழி ஆகியவற்றில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டறிய சுவற்றை ஊடுருவி பார்க்கும் ரேடாரை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

 

 • வரும் நான்கு மாதங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பான், ஆதார் அடையாள அட்டை அவசியமாக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

 

 • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒத்துழைத்தால் மாநில அரசு தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 

 • தில்லி சமூக நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாகவும், விரைவாகவே கிளம்பிச் சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதால் சமூக நலத்துறை ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பயன்படுத்த துறைத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

 • தில்லி பல்கலைக்கழகத்தில் புவியியல் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ள தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மித்தல் நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

பன்னாட்டு செய்திகள் :

 • வடகொரியா நேற்று ஒன்றுக்கும் மேற்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஒன்சன் நகருக்கு அருகே கிழக்கு கடலோரப் பகுதியில் ஏவி சோதித்துள்ளது.

 

 • கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்காவில் உள்ள மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் போட்டியில் பெங்களுரை சேர்ந்த மாணவி சாஹிதிக்கு நீர்நிலைகளின் சுத்தத்தைக் கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷன் குறித்த ஒரு புதுமையான அணுகுமுறைக்காக தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாஹிதி பிங்கலியின் பெயர் புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று செசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது.

 

 • ஐஎஸ் தீவிரவாதிகளின் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் இத்தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

 

 • நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்தும் 2017ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்பில் பங்குபெற தகுதிபெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரி என்ற இளைஞரின் பெயருடன் சேர்த்து 12 புதிய விண்வெணி வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க விமானப் படை அகாடமியில் பட்டம் பெற்ற ராஜா, கல்பனா சாவ்லாவுக்கு பின் இந்தப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி விண்வெணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்திகள் :

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணியைச் சேர்ந்த ஷிகர் தவான் 125 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

 

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிடம் 19ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

 

 • பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா ஜோடி கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ சுவிட்சர்லாந்தின் பாக்சின்ஸ்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

 • 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 1000 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

 

 • வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தடகள போட்டியில் உசேன் போல்ட்டை வெல்ல தனக்கு வாய்ப்புகள் இருப்பதாக பிரபல தடகள வீரர் ஆன்ட்ரே டி கிராஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 • அர்ஜூனா விருதுக்கு டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவின் பெயரை அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • டாடா குழுமத்தின் அங்கமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் தங்களிடம் உள்ள உபரி நிதியின் மூலம் சந்தையில் ரூ.10278 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது.

 

 • உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஓசூர், சேலம், நெய்வேலியில் விமான சேவையைத் தொடங்குவதற்காக மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

 

 • வங்கி கடன் அளிப்பதில் ரீடெய்ல் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐடிபிஐ வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ரபிநாராயண் பாண்டா தெரிவித்துள்ளார்.

 

 • வர்த்தக முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்ந்து 31262 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 9668 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் சரிந்து 31123 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 27 புள்ளிகள் சரிந்து 9619 புள்ளிகளாக உள்ளது.

 

 • பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில், இந்தியா மற்றும் 67 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

 

 • தனிஷ்க் நிறுவனம் ரிவாஹ் என்ற அதன் துணை பிராண்ட் மூலம் மணப்பெண்களுக்காக அழகிய கைவேலைப்பாடு கொண்ட திருமண நகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை தனிஷ்க் நிறுவனத்தின் ஜூவல்லரி பிரிவு முதன்மை செயல் அதிகாரி சி.கே.வெங்கடராமன் அறிமுகம் செய்துள்ளார்.

 

 • தமிழகத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழையால் பசுந்தேயிலை உற்பத்தி 50சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு லஷ்மி விலாஸ் வங்கியின் பகுதி நேர தலைவராக பி.கே.மஞ்சுநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததையடுத்து சென்ற ஏப்ரல் மாதத்தில் டாலர் மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 11.51% அதிகரித்துள்ளது.

 

English News

 • The Centre clears prevention of cruelty to Animals (Karnataka Amendment Bill) 2017 has cleared by – the Union Ministry of Law and Justice P.P.Choudhary.

 

 • National Human milk Bank opens at Lady Hardinge Medical College in Delhi for new born babies.

          A Nation human milk ban and lactation counseling Centre known ‘Vatsalya – Maatri Amrit Kosh’ has opened lady Hardinge.

 

 • Tamil Nadu government signs MoU with Aviation Ministry for implementation of UDAN Scheme.

 

 • BRICS media forum held in Beijing and one million dollar fund established for BRICS media.

 

 • World Health Organisation revises antibiotics protocol under category.
 1. Access Category, 2. Watch Category, 3. Reserve Category.

 

 • Indian Institute of Technology Delhi replaces IISC Bangalore as highest – ranked Indian Institute in QS World Institute University Ranking.

 

 • SBI organized farmers meet on June 8 to understand their credit need and also to provide finance help.

 

 • HDFC Bank to charge for UPI transactions from 10 July.

 

 • US, China, India to be top prospective destination for foreign direct investment (FDC) – United Nations Conference on Trade and development (UNCTAD).

 

 • Elon Musk’s electric car startup Tesla along with other 19 companies has featured in Fortune Magazine’s annual list of America’s top 500 companies for the First time.

 

 • Indian – American Raja Chari has appointed B.K.Manjunath as a part-time chairman for three years on June 8, 2017.

 

 • Digital India takes hit as India ranks 74 in internet data speed, below Pakistan, Srilanka.

 

 • Virat Kohli only Indian in Forbes top 100 paid athletes, Serena Williams alone female athlete.

 

 • The World highest paid athletes. The list topped by soccer star Cristiano Ronaldo.

 

 • World Oceans Day – June 8 2017.

           2017 theme : “Our oceans, Our Future”

 

 • According to BMI research : India among top 5 consumer Markets in Asia.

Call Now
Message us on Whatsapp