June 8

Date:08 Jun, 2017

June 8

We Shine Daily News

jkpo;

 ஜூன் 8

தேசிய செய்திகள் :

 • மேற்கு வங்காளத்தை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறுகிறது.

 

 • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அரிசியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

 

 • நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரி, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பல்வேறு கூடுதல் வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

 

 • கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

 • இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்கும் உடன்படிக்கையில் இந்தியா இணைந்துள்ளது.

 

 • ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டதால், நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சார விநியோகமும் பிரிக்கப்பட்;டது. இந்நிலையில் ரூ.3500 கோடி மின் கட்டண பாக்கி இருப்பதாகக் கூறி தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • விமானப் பயணத்தின் போது ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • பூமிக்கு வேற்றுகிரக வாசிகளின் வருகை அதிகரித்துள்ளது என்று கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • தெக்ரானில் உள்ள ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 • அமீரகத்தில் வசிப்பவர்கள் கத்தார் நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டால் 15 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் திர்ஹாம் (871ஃ2 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று அமீரக மத்திய பொது நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 • உள்நாட்டு புலனாய்வு நிறுவன இயக்குநராக முன்னாள் உதவி அரசு தலைமை வழக்கறிஞரான கிறிஸ்டபர் விரேவை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

 

 • இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இந்;திய வழி பேராசிரியரான அசோக் வெங்கடராமன் மார்பக புற்றுநோய் மரபணுவான பி.ஆர்.சி.ஏ-2ஐ வைத்து மேற்கொண்ட ஆய்வில் சாதாரணமாக நம்மைச் சுற்றி காணப்படும் ஆல்டிஹைடின் அதிகமான வெளிப்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.

 

 • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள் :

 • சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.

 

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், பர்மிங்காமில் நேற்று நடந்த 7வது லீக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

 

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், இந்திய ‘ஏ’ அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் டொமினிக் திம், ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்க முன்னேறினார்.

 

 • 1928, 1932 மற்றும் 1936ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த முன்னணி வீரரான தயான்சந்துக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 • பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் ஆடவருக்கான பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த பாப்லோ கரெனோ பஸ்டாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

 • ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலின் முதலிடத்தில் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அறிவித்துள்ளார்.

 

 • இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2016-17ம் நிதியாண்டில் 23சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் உறைய வைக்கப்பட்ட மீன்களின் தேவை அதிகமான காரணத்தினால் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • டேவலெப்பர் மாநாட்டில் புதிய மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வாட்ச் ஆப்ரேட்டிங் சிஸ்டம், புதிய சாப்ட்வேர்கள், ஐபேட் புரோ, ஹோம்பேட் என பல்வேறு தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • சஹாரா குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான சஹாரா பிரைம் சிட்டி நிறுவனம் வீடு வாங்குவதற்காக பணத்தை அளித்த வாடிக்கையாளருக்கு வீடு அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாடிக்கையாளருக்கு ரூ.1.43 கோடி வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 53புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.93 புள்ளிகள் உயர்ந்து 31324.21 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.64.39 காசுகளாக உள்ளது.

 

 • கடந்த ஏப்ரல் மாதத்தின் காபி ஏற்றுமதி புள்ளி விவரத்தை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த மாதத்தில் 9.24 கோடி டாலர் மதிப்பிலான காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

English News

 • The world’s first hybrid ‘acrobat’ that has been built by an Indo-Russian joint venture was unveiled in Moscow. I has been designed by IIA AT Holdings 

 

 • Nepali congress chairman sher Deuba has been elected as the new prime minister of Nepal

 

 • Cadila Health care has become India’s 2nd most valuable pharmaceutical company in terms of market capitalization beating lupine

 

 • Archaeologists have excavated a temple, Fugan temple in China’s chengdu city  around 1000 years after it was deemed to have been lost

 

 • The much awaited second novel of Arundhati Rose

            The  ministry of utmost happiness has been launched.

 • Hashiar singh a 1994 batch officer of the India Telecom services appointed as Registrar of copyrights

 

 • Health minister JP Nadde has launched skill to life save a life initiative to promote skill development in the health sector

 

 • Montenegro has formally become the 29th November of north Atlantic Treaty organization

 

 • India to provide $318 million rupee of credit to Srilanka for development of its railway sector

 

 • Scientist have recently discovered a new species of flying squirrel named Glaucomys Oreganensis in North America that had been hiding in the plain sight

 

 • The presidential election of India will be hold on 17 july as per the announcement made by chief election commissioner Nassim Zaidi on 7 june 17

 

 • The maharastra has rovoked the special planning Authority status given to Lavasa corporation limited in 2008 to develop a private hill city near tune

 

 • India has become the second largest stainless  steel producer in the world after china. According to data released by international stainless steel forum ( ISSI)

 

 • The worl’s smallest Nation Mouser has become the sixth country to ratify the international solar Alliance

 

 • India now ranks 154th according to the latest global Burden of disease (GBO) out of 195 countries

 

 • Noted Journalist Nagesh Hegde has been chosen for the prosligious TSR memories award by the government for 2016

 

 • Veteran Indian actor Amitabh Bachchan was appointed as the goodwill Ambassador for hepatitis in Southeast Asia.

 

 • First world pest day launched in Beijing China on 6th June 2017.

 

 • Kerala Government implements ‘Green Protocol’ for weddings more nature friendly. The aim to reduce the use of plastic in daily life.

 

Call Now
Message us on Whatsapp