June 6

Date:06 Jun, 2017

June 6

We Shine Daily News

jkpo;

 ஜூன் 6

 

தேசிய செய்திகள் :

 • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்புதல், வானிலை முன்னறிவிப்புகள், புயல் எச்சரிக்கை, கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, கடல்சார் ஆய்வு, பூமி ஆய்வு, கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வுகள் போன்றவற்றுக்காக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்நிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனையை படைத்து உள்ளனர்.

 

 • இந்தியாவில் மறைமுக வரி திட்டங்களை சீரமைத்து ‘சரக்கு மற்றும் சேவை வரி’ கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி அமலாக உள்ள் ஜிஎஸ்டி வரி நாட்டின் பொருளாதாரத்துக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகள் எளிமையானதால் இந்தக் காலாண்டில் பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

 • செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 • ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

 

 • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் கலந்து கொண்ட மோடி சிறந்த பூமியை உருவாக்குவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உறுதி ஏற்போம் என வலியுறுத்தியுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • தீவிரவாதிகளுக்கு உதவியதாக அரபு நாடுகள் தூதரக உறவை துண்டித்ததால் கத்தார் நாட்டில் 6.5 லட்சம் இந்தியர்கள் தவிக்கின்றனர்.

 

 • அணு மூலப்பொருள் விநியோகிக்கும் நாடுகள் (என்எஸ்ஜி) அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் இந்தியா உறுப்பினராகச் சேர சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்க விஞ்ஞானிகள் மனித மூளையின் நினைவுப் பதிவில் இருந்து ஒருவரது முகத்தை வரையும் கருவியை வடிவமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.

 

 • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருந்தாலும், பொருளாதாரம், முதலீடுகளில் அந்த நாட்டுடன் நல்லுறவு நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதை சீனா வரவேற்றுள்ளது.

 

 • வளர்ந்து வரும் பெரிய நாடுகளின் சந்தைகளில் வர்த்தகம் மேம்பட்டுள்ளதை அடுத்து இடர்பாடுகள் உள்ள நிலையிலும் நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி காணும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

 • இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் (ஐ.எஸ்.எஸ்) எப்.சி.கோவா அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த செர்ஜியோ லோபெரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் கிளப் அணி 12வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ மூன்று இறுதிப்போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 

 • பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவில் ஆன்டி முர்ரே காரென் காச்சனோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் பிரிவில் சிமோனா ஹாலெப் சுவாரஸ் நவவரோவை வெளியேற்றி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மும்பையில் மோதுகின்றன.

 

 • அரியலூர் மாவட்டம் கொடுக்கூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில், மகளிர் பிரிவில் ஒட்டன்சத்திரம் வெண்ணிலா அணியும், ஆடவர் பிரிவில் பெங்களுரு அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

 

 • சிங்கப்பூர் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா – இவான் டோடிக் (குரோஷியா) ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா-கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் மோதுகிறது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா, துணை நிதி நிறுவனங்களில் கொண்டுள்ள குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

 

 • புகை மாசைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸ_கி அதிக கவனம் செலுத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் செலிரியோ (லிட்டருக்கு 27.62கி.மீ), புதிய டிஸையர் (லிட்டருக்கு 28.4கி.மீ), சியாஸ் (லிட்டருக்கு 28.09கி.மீ) ஆகிய மூன்று மாடல் கார்கள் இந்தியாவில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட கார்கள் என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 31430.32 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.64.32 காசுகளாக உள்ளது.

 

 • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அழைப்பு, இணையச் சேவைகளை தனியார் நிறுவனம் மொத்தமாக வாங்கி விற்கும் சேவை நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் தொடங்க உள்ளது.

 

 • பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திய பிறகே விமானத்தில் இணைய சேவை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

English News

 • An e-taxi service was launched in Hyderabad to mark the world Environment Day. The e-taxis have been launched by green mile, an electric vehicle infrastructure startup company

 

 • ISRO launched India’s heaviest rocket GSLV-MK III along with a communications satellite GSAT -19 from Satish Dhawan space centre

 

 • India has been ranked 40th down 4 notches from last year in IMO’s world competitiveness list USA stood at 4th spot – Its lowest position in 5 years

 

 • India has surpassed china to secure the top position among 30 developing countries on ease of doing business in retail sector. The GRDI titled doing business in retail sector. The GRDI titled’ The Age of focus ranks china in second place

 

 • India’s first bicycle sharing scheme. A public bicycle sharing system. Trin trin was launched by chief Minister siddaramaiah in mysuru.

 

 • National Thermal power corporation limited has facilitated the installation of charging stations for electric vehicles at Delhi and Noida.

Call Now
Message us on Whatsapp