June 4

Date:04 Jun, 2017

June 4

We Shine Daily News

jkpo;

 ஜூன் 4

தேசிய செய்திகள் :

 • மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றி வந்த முகுல் ரோத்தகியின் 3 ஆண்டு பதவிக் காலம் ஜூன் மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் அவருடைய பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் செக்டார் பகுதியில் இருக்கும் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 • புது டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்கம், பீடி, பிஸ்கட்கள், ஜவுளி மற்றும் காலணிகள் உட்பட பல பொருட்களுக்கு வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 • இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் பிராணவாயு உருளையின்றி உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

 

 • உடல் உறுப்பு தானத்தை சட்டப்பூர்வமாக ஊக்குவிக்கும் வகையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவோர் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் கொண்டிருந்தால் அதை ஓட்டுநர் உரிமத்திலேயே குறிப்பிடும் வசதி செய்யப்பட உள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • ஜி.எஸ்.எல்.வி மார்க்3 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

 

 • கர்நாடக மாநிலம் மணல் கொள்கையில் மாபியா கும்பல் ஈடுபடுவதை ஒடுக்கவும், மணல் விலை உயர்வை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

 

 • மராட்டிய மாநிலம் கெய்னா நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். ராணுவம், விண்வெளி, அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற மேம்பாடு, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் விதித்து ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் லியோ வரத்கர் அயர்லாந்து நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களில் அதிகளவில் இஸ்லாமிய மதத்தினர் பலியாகி வருவதாக குளோபல் தீவிரவாத இண்டெக்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

 • 21ம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3டிகிரி செல்சியஸ் உயரும் என ஐநா தகவல் அளித்துள்ளது.

 

 • லண்டன் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பர்மிங்காமில் இந்திய அணி தங்கியிருக்கிற ஹோட்டலில் அதி உயர் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஜெர்மனியில் நடந்து வரும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 வது ஆட்டத்தில் சீன வீரர் லின் இந்திய வீரர் சரத்கமலை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே ஜூவான் மார்ட்டின் போட்ரோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 • பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையிலான ஹாக்கி போட்டி தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி இந்திய அணியை வீழ்த்தியது.

 

 • பாங்காங்கில் நடந்து வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் தாய்லாந்தின் பன்னாவித்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

 • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை பூசனனிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்துவதை அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

 

 • ஜிவிகே பவர் அண்ட் இன் பிராஸ்ட்ரெக்சர் நிறுவனம் தனது துணை நிறுவனமான பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.

 

 • பிரசார் பாரதி அமைப்புக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தொழில்நுட்ப வல்லுநரான சஷி சேகர் வேம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • புதிய ஜிஎஸ்டி வரித்திட்டத்தின் படி தங்கத்திற்கு 3மூ வரியும், ரூ.500க்கும் குறைவான காலணிகளுக்கு 5மூ வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

 

 • கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 31273 புள்ளிகளாக நிலைத்துள்ளது.

 

 • டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு கார் விற்பனை கடந்த மே மாதத்தில் 27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • இந்தியன் வங்கியின் கடன் பத்திரத்துக்கு “ஏஏூ” தர மதிப்பீட்டை கிரிஸில் நிதி ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது.

 

 • “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு அளிக்கும் புள்ளி விவரங்கள் தவறானவை” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பொருளாதார நிபுணர் விஜய் ஆர்.ஜோஷி கூறியுள்ளார்.

Call Now
Message us on Whatsapp