June 27

Date:27 Jun, 2017

June 27

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 25

                                                                                                         தேசிய செய்திகள் :

 • தேசியக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானி கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 •  அடுத்த ஆண்டு முதல் நிதியாண்டை ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜனவரிக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 150 வருடங்களாக ஏப்ரல் முதல் மார்ச் வரையில் நிதியாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி 2018ம் ஆண்டிலிருந்து ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நிதியாண்டை கணக்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 •  கண் வங்கிகளில் தானம் செய்யப்பட்ட கண்கள் வீணாவதை தடுக்க தானம் செய்பவர்களின் வயதுவரம்பை குறைக்க கண் வங்கி முடிவு செய்துள்ளது.

 

 •  சமூக வலைதளமான Nபுஸ்புக்கில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியை பேஸ்புக்கில் 3.5 கோடி பேர் பின் தொடருகின்றனர்.

 

 •  சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து 2 இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்துள்ளது. 1962ம் ஆண்டு நடந்த இந்தியா – சீனா போருக்கு பிறகு இந்திய – திபெத் எல்லை பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள 5சதவீதம் ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தி விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தியானது நடந்து வருகிறது. சுமார் ரூ 150 கோடி அளவில் நாள்தோறும் ஜவுளி உற்பத்தி நடைபெறுவதுடன் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியும் நடந்து வருகிறது.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 • சீனாவில் அமைந்துள்ள நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் லியூ ஜியோபோ கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து மருத்துவ சிகிச்சை பெற அவரை சீன அரசு சிறையில் இருந்து பரோலில் விடுவித்துள்ளது. எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், மனித உரிமை ஆர்வலருமான லியூ அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க பொதுமக்களை தூண்டியதாக குற்றம் சாட்டி கடந்த 2009ல் சீன அரசு கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 •  சீனா அடுத்த தலைமுறைக்கான புல்லட் ரயிலை உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே தயாரித்து இருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 400 கிமீ வேகத்தில் மின்சக்தியில் ஓடும் இந்த ரயிலின் போக்குவரத்து நேற்று பீஜிங்ஷாங்காய் நகரங்களுக்கு இடையே தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புல்லட் ரயிலுக்கு ‘புஜிங்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 •  பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த உதிரிக் கட்சியுடன் முறைப்படியான ஆதரவு உடன்படிக்கை ஜூலை 26ல் கையெழுத்தானது. ஆதரவுக்கு பதில் உதவியாக வடக்கு அயர்லாந்து பகுதியின் மேம்பாட்டுக்குச் சிறப்பு நிதியாக 100 கோடி பவுண்டு (சுமார் ரூ 8200 கோடி) ஒதுக்கப்படும் என அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

 •  பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் எழுதிய புகழ்பெற்ற கற்பனை புதினமான ஹாரி பாட்டரின் முதல் பாகம் கடந்த 1997, ஜூன் 26ல் வெளியானது. நேற்றுடன் அந்த புதினம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் வகையில் பிரிட்டனின் போல்டன் நகரைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் 676 பேர் ஹாரிபாட்டர் புதினத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.

 

 •  போதை மருந்துகளுக்கு எதிரான ஐ.நா தினமான இன்று மியான்மர், தாய்லாந்து நாட்டு அதிகாரிகள் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்களை அழித்தனர். தாய்லாந்திக் அயத்தாயா மாகாணத்தில் 9 டன்கள் எடையுள்ள போதைப் பொருட்கள் எரிக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு 590 மில்லியன் டாலர்களாகும். மியான்மரில் 217 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்களை அழித்தனர்.

 

 •  இஸ்லாமிய நாடுகளான ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கான விசா வழங்குதலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும், சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்பதை காலவரையின்றி தடை செய்தும் டிரம்ப் பிறப்பித்த ஆணைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 •  வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்டரங்கில் அமெரிக்க இந்திய இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். அமெரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தடைகளை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்த அதிபர் டிரம்ப் அமெரிக்காவிடமிருந்து அதிகளவு எரிசக்திகளை இந்தியா வாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று 2 மணி, 45 நிமிடங்கள் நடைபெற்றது. லோதா குழுவின் பரிந்துரையை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது என பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 •  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஜூவன் நெடுஞ்செழியன் களமிறங்குகிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜூவன் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். அவர் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்ட்சன்னுடன் இணைந்து விளையாட உள்ளார்.

 

 •  சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் குரோஷியாவின் மரின் சிலிச் 7-ஆவது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

 •  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

 

 •  தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி கண்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் கைப்பற்றியது.

 

 •  ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 •  உலன்பதார் கோப்பை குத்துச் சண்டை போட்டிகள் மங்கோலிய தலைநகரான உலன்பதாரில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப் போட்டியில் 60 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் அன்குஷ் தாஹியா தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர இந்தியா தரப்பில் பங்கு பெற்ற சியாம் குமார், பிரியங்கா சவுத்ரி, முகமது ஹ{சாமுதின் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

 

                                                பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ 64.41ஆக உள்ளது.

 

 •  மே மாதங்களில் துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள், 11.40 கோடி டன்னாக அதிகரித்து உள்ளதாக இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

 •  பொதுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆர்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவின் வான்கர் கஸ்டர் எண்ணெய் வயல்களை வாங்குவது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறது.

 

 •  வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் ரூ 85000 கோடி நிதி திரட்ட பங்குதாரர்களின் அனுமதியைக் கோர உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

 •  மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலகவங்கி 25 கோடி டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வேலைக்கு தகுதி படைத்தவர்களாக திறன் மேம்படுத்தும் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்துக்கு உலக வங்கி கடன் வழங்க முன்வந்துள்ளது.

 

                                                                 ENGLISH CURRENT AFFAIRS

                                                                  JUNE 27

  • Krihnaswamykasturirangan has been appointed to head the committee to draft the national education policy
 •  
  • Arunachal Pradesh government raises retirement age of employees to 60 years
  • Goa chief minister Manohar Parrikar has inaugurated the three-day MODI(Making of Developed India) fest at kala academy in Panaji
 •  
  • China’s fastest bullet train with maximum speed of 400 km per hour has been run on country’s busiest Beijing-shanghai line
 •  
  • Manushichhillar from Haryana wins the title of Miss India 2017
 •  
  • J&K governor NNvohra has been appointed as the president of the India International Center(IIC)
 •  
  • Srinivas Gokulnath becomes first India to solo race across America
 •  
  • Boxer AnkushDahiya wins gold in viaanbaatar
 •  
  • Lupin founder and chairman DeshBandhu Gupta passes away
 •  
  • NASA is lauching a sounding rocket CHESS(Colorado-High – Resolution Echelle Stellar Spectegraph) to study interstellar clouds
 •  
  • YashswiniDeswar bags gold in 10M Air pistol
 •  
  • Venkaiah Naidu and Gujarat CM Vijay Rupani released a book “ The – Emerging : Indian Democracy’s Darkest Hour” written by A Surya Prakash
 •  
  • Best Sportsman of the year to P.V.Sindh by Sports Journalist Federation of India

Call Now
Message us on Whatsapp