June 26

Date:26 Jun, 2017

June 26

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 25

                                                                                                         தேசிய செய்திகள் :

 • இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 •  குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்கு கீழ்இருக்கும் நிலப்பரப்பு அளவக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழில்துறை கூட்டமைப்பு அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யூசி தெரிவித்துள்ளது.

 

 •  இந்தியாவின் அண்டை நாடுகளாக நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்ற வெளிநாடுகளைப் போல் அல்லாமல் நேபாளம், பூடானுக்குச் செல்வதற்கு இந்தியர்கள் விசா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாடுகளுக்குச் செல்ல கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  ஆறாவது தில்லி சட்டப் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தை ஜூன் 28ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கூட்டுவதற்கு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் முடிவு செய்துள்ளார்.

 

 •  பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் பொருள்கள் களவு போனால் அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 •  பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான டீசல் வாகனங்களை விற்பதற்கு தடையின்மைச் சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்படாத பிற மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை பட்டியலிட்டுள்ளது.

 

 •  அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் குஜராத், மராட்டியம் உள்ளிட்டவை அடங்கிய மேற்கு மாநிலங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவை அடங்கிய தெற்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாநிலங்களின் கடனளவு கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

 •  நாடு முழுவதுமுள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை எச்சரிப்பதற்காக செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தக் கருவியானது ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 • அமெரிக்காவுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி அந்நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதௌ;ளா, அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ், சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் அஜய் பங்கா உள்பட 20 தலைமைச் செயலதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

 •  ‘மார்த்தா’ என்ற மாஸ்டினோ வகை நாய் இந்த ஆண்டின் ‘அசிங்கமான’ நாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 29வது ஆண்டாக இந்த வருடத்தின் போட்டி கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் நடைபெற்றது. மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.

 

 •  தற்போது பிரபலமாக இருக்கும் பீட்சா இத்தாலி நாட்டில் தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இத்தாலியில் 1853.88 மீ நீளத்துக்கு மிக பிரம்மாண்டமான பீட்சா செய்து சாதனை படைத்தனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் 1930.39 மீ (1.93 கிமீ) நீளத்துக்கு சமையல் கலைஞர்கள் மிக பிரம்மாண்ட பீட்சா செய்து அசத்தி உள்ளனர். இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

 •  ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பயோ கார்பன் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த விமானத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். மரங்கள் வளர்வதற்கு உரிய தேவையான நிலங்களை ஆளில்லா விமானம் கண்டறிந்து விதைகளை தாமாகவே மண்ணுக்குள் செலுத்தும். செங்குத்தான மலைப்பகுதிகளிலும் ஆளில்லா விமானத்தின் மூலம் மரங்களை நடமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

 

 •  சிரியா அதிபர் பஷார் அல்அஸாத், ஹமா நகரில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்ற ரமலான் தொழுகையில் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைநகர் டமாஸ்கஸ_க்கு வெளியே அதிபர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

 

 •  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்நாட்டு சண்டை நடந்து வருகிற மாராவி நகரில் ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் நேற்று 8 மணி நேர சண்டை நிறுத்தத்தை ராணுவம் அறிவித்தது. காலை 6 மணிக்கு தொடங்கி இந்த சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

 

 •  உள்நாட்டுப் போர் நடந்து வருகிற ஏமனில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் காலரா பரவி வருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோரை காலரா தாக்கி உள்ளது. 1300 பேர் இறந்துள்ளனர். காலரா மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஐ.நா சபை ஈடுபட்டுள்ளது.

 

 •  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக கடந்த நவம்பர் 8ந் தேதிக்கு முன்னரே ஒபாமாவுக்கு தெரியும் என்றும் அவர் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார் என்றும் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • உலன்பாதர்;; கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அங்கஷ் தாஹியா தங்கம் வென்றார். மற்றொரு இந்தியரான தேவேந்திரோ சிங் தனது இறுதிச் சுற்றில் இந்தோனேசியாவின் அல்டாம்ஸ் சுகுரோவிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.

 

 •  உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 மற்றும் 6ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி கனடாவிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய அணிக்கு 6ஆவது இடமே கிடைத்தது.

 

 •  ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 •  ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இது ஸ்ரீகாந்த் வென்ற 4ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.

 

 •  இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரகம் ஃபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது 45 மாத ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 •  இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை புரிந்தார். 7வது அரைச் சதத்தை தொடர்ச்சியாக எடுத்து உலகச் சாதனையை மிதாலி ராஜ் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்ப்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்ப்ரி பாகு நகரில் நேற்று நடந்தது. இச்சுற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் வெட்டல் முதலிடத்திலும், ஹாமில்டன் 2வது இடத்திலும் உள்ளனர்.

 

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • உலகளவில் முந்திரிப் பருப்பு நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது தவிர பாதாம், அக்ரூட் பருப்புகள் ஆகியவையும் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

 

 •  சர்வதேச அளவில் 50 பெரிய வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. ஆனால் அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ 28.96 லட்சம். மற்ற தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகளின் தலைவர் வாங்கும் சம்பளம் அருந்ததி பட்டாச்சார்யாவை விட பல மடங்கு அதிகமாகும்.

 

 •  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) தனியார் பிஎப் அறக்கட்டளைகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்கவும் பல்வேறு சலுகைகளை வழங்கவும் 500 தனியார் பிஎப் அறக்கட்டளைகளை இணைக்க இபிஎப்ஓ திட்டமிட்டுள்ளது.

 

 •  பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான ஐந்து பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மிகப் பெரியதாகும்.

 

 •  நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகள் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு அதிகம் பயனளிக்கும் என போஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கை தெரிவிக்கிறது.

 

                 ENGLISH CURRENT AFFAIRS

     JUNE 26

  • June 25 Day of the seafarer was observed by Internation Maritime Organisation theme seafarers matter.

   

  • World heritage coral reefs likely to disappear by 2100, unless CO2 emissions drastically reduce: UNESCO says

   

  • Roger Federer defeated Alexander Zuerev to clinch a record ninth Halle open title

   

  • Kidambi srikanth won the Australia Open Super Series Men’s Singles Title.

   

  • World’s worst cholera outbreak in Yemen

   

  • India and Portugal signs Movs for co-operation in areas including taxation, science, Youth affairs and trade.

   

  • Pakistan has issued its First ever third- gender passport to Farzana Riaz, a transgender activist.

   

  • Leander paes and Adil shamsdin has won the men’s doubles title at the Aegon likely challenger trophy.

Call Now
Message us on Whatsapp