June – 25

Date:25 Jun, 2017

June – 25

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 25

                                                                                                         தேசிய செய்திகள் :

 • நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 17ம் தேதி தான் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

 

 • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நாடு முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க அகில இந்திய வர்த்தக சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

 

 • பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக மேற்கு வங்க மாநில அரசுக்கு ஐ.நாவின் அங்கமான பொதுச் சேவைகள் அமைப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதுக்காக 62 நாடுகளில் இருந்து 552 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் மேற்கு வங்க அரசின் பெண் குழந்தைகள் கல்வித் திட்டம் (கன்யா ஸ்ரீ பிரகல்பா) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

 • மகாராஷ்டிரத்தில் ரூ 34020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். இது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

 

 • இந்தியா, சீனா மட்டுமே அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை படிப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து வருவதாக அண்மையில் செவிஸ் என்ற அமைப்பு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் சேர்ந்து படிப்பவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்ளே என தெரிய வந்துள்ளது.

 

 • திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும்ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது

 

 • காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் ஆறுகளை மேம்படுத்தவும் பாசன அமைப்புகளை புனரமைக்கவும் மத்திய நீர்வள ஆணையம் கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ 11420 கோடி. 2013ம் ஆண்டு இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி மத்திய நீர்வள ஆணையம் கல்லணை கால்வாய் உபவடிநில மேம்பாடு திட்டத்திற்கு ரூ 2298.75 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • பிரதமர் மோடி மாதம் தோறும் வானொலியில் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஆற்றும் உரை ஜூன் 25 (இன்று) காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது. அதன்படி மன் கி பாத் நிகழ்ச்சி இன்று அகில இந்திய வானொலியின் அனைத்து அலை வரிசைகளிலும் தூர்தஷன் மற்றும் மோடி ஆப் ஆகியவற்றிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 • இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 24 (நேற்று) போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்றார். அங்கு போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை சந்தித்து பேசினார். இந்தியா- போர்ச்சுகலுக்கு இடையே தீவிரவாத தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி, பருவ நிலை ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மவோக்ஸியன் மாவட்டத்திலுள்ள அபகிட் ஜின்மோ கிராமத்திலுள்ள 62 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100 பேரைக் காணவில்லை.

 

 • கனடா உச்ச நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்விந்தர் கெய்ர் ஷெர்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த முதல் சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • தூதரக உறவினை முறித்துக் கொண்டுள்ள நிலையில் கத்தாருக்கு அரபுநாடுகள் நிபந்தனைகள் விதித்திருப்பது மனித உரிமை ஒப்பந்தங்களை மீறிய செயல், இதை கத்தார் ஏற்கக் கூடாது என கத்தார் தேசிய மனித உரிமைகள் கமிட்டி கூறி உள்ளது.

 

 • கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட டச்சு பத்திரிக்கையாளர்கள் டெர்க் போல்ட்டும், யூஜினியோ பாலண்டரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

 

 • பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான ஆலோசனை மையத்தின் கூட்டம் ஐ.நாவில் நடைபெற்றது. இதில் எல்லைகள் கடந்து பரவிவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எந்தவொரு தேசத்தாலும் தனித்து நின்று தோற்கடிக்க முடியாது என ஐ.நாவுக்கான இந்தியத் துணைத் தூதர் தன்மயா லால் தெரிவித்தார்.

 

 • ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்தியா –ரஷியா இடையேயான வருடாந்திரக் கூட்டத்தில் ராணுவத் தளவாடங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் ரஷியாவும் முடிவு செய்துள்ளன. இந்தியா –ரஷியா இடையேயான ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் 17வது கூட்டம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புத் துறையில் இந்தியா- ரஷியா அமைச்சர்கள் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், அங்குஷ் தாஹியா ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 •  ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் சென்லாங்கை நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்தார். இதன் மூலம் 4வது தொடர் சூப்பர் சீரிஸ் தொடரை ஸ்ரீ காந்த் வெல்கிறார்.

 

 •  இங்கிலாந்தின் டெர்பி நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

 

 •  இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்டு தனது பதவியை ராஜினாமா செய்ததாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா அறிவித்துள்ளார்.

 

 •  மாநில சீனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • மத்திய அரசின் புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், வீடு, நிலம் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் எனவும் வீட்டுவசதி கடன் வழங்கும் எனவும் எச்.டி.எப்.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பதேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். சேக்ஷாயி அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

 

 • ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற உதவும் வகையிலான புதிய மென்பொருளை அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பு அறிமுகப் படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியில் தங்கத்துக்கு 3 சதவீத வரி என்ற மத்திய அரசின் முடிவு பாராட்டத்தக்கது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக உள்ளது.

 

 • சீனாவின் பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி மீதான தடையை மத்திய அரசு 2018 ஜூன் வரை நீட்டித்துள்ளது. நாட்டின் பால் உற்பத்தியில் உ.பி முதலிடத்தில் உள்ளது.

 

 • பல மாநிலங்களில் ரொட்டி விற்பனையில் முன்னணியிலுள்ள மாடர்ன் புட்ஸ் நிறுவனம் விற்று முதல் கடந்த நிதியாண்டில் 270 கோடி ரூபாயாக இருந்தது. இதை நடப்பாண்டில் 25 சதவீதம் அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

     ENGLISH CURRENT AFFAIRS

                                                                      JUNE 25

 • Kanyashree prakalpa scheme of the West Bengal government won the first prize in United Nations Public Service award for Asia Pacific

 

 • Ireland and Afganisthan were given the status of test playing nation by the International cricket council.

 

 • Arizona States of the United States of America declared emergency due to escalating wildfires.

 

 • Government of India, has offered 10 percent discount in the pass port fees of applicants below the age of eight and above 60.

 

 • Victor umaifo was recently named by UNESCO as Human Living Treasure.

 

 • A Bipartisan bill tabled in US house seeks to revoke pakisan country’s Ally status

 

 • 23 June globally observed as Widow’s day.

Call Now
Message us on Whatsapp