June 24

Date:24 Jun, 2017

June 24

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 24

                                                                                                         தேசிய செய்திகள் :

 

 • கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) இனி ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 1967ஆம் ஆண்டில் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது.

 

 •  3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று (ஜூன் 24) போர்ச்சுக்கல் புறப்பட்டார். தில்லியில் இன்று புறப்பட்ட பிரதமர் மோடி போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் ஜூன் 25, 26 அமெரிக்கா செல்லும் மோடி வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். அமெரிக்கா பயணத்தை முடித்து கொண்டு 27ஆம் தேதி நெதர்லாந்து புறப்படுகிறார்.

 

 •  மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் நாட்டிலுள்ள 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்ற மத்திய அரசு கடந்த 2015ல் திட்டமிட்டது. பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ 500 கோடி வீதம் வழங்கப்படும்.

 

 •  குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாருக்கு முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நாட்டின் உயரிய பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 •  புதிய குடியரத் தலைவருக்காக ரூ 8 கோடியில் சிறப்பு ரயில் பெட்டியைத் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால் சிறப்பு வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டி பயன்படுத்தப்படும். ரயில்வே நிர்வாகம் கடந்த 1956ஆம் ஆண்டில் முதல் முறையாக குடியரசுத் தலைவருக்கான சிறப்புப் பெட்டியை தயாரித்தது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது கடைசியாக 2006ஆம் ஆண்டில் சிறப்பு ரயில் பெட்டியைப் பயன்படுத்தினார்.

 

 •  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களில் 8 வயதுக்குக் கீழும், 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 10 சதவீதம் கட்டண குறைப்பு செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அசை;சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

 

 •  சிக்கிமிலுள்ள நாது லா கணவாய் வழியாக சுமார் 50 இந்தியர்கள் கைலாய மலை –மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இயற்கை சீற்றத்தால் சீனப் பகுதியிலுள்ள சாலைகள் மோசமடைந்துள்ளதாகவும் சீற்றங்கள் அடங்கிய பிறகு பயணத்தைத் தொடரலாம் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 

 • ரஷியா மீது விதித்த பொருளாதார தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்ததாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

 

 •  இந்தியா –ரஷியா இடையே ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் 17வது கூட்டம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், ரஷியாவும் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், ரஷிய அமைச்சர் செர்ஜி சோய்குவும் கையெழுத்திட்டனர்.

 

 •  இந்திய கடற்படைக்கு ரூ 20 ஆயிரம் கோடி செலவில் ஆளில்லா உளவு விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 22 பிரிடேட்டர் கார்டியன் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்திய கடற்படைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

 

 •  தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ‘நிரந்தர உறவு முறிவை’ சந்திக்க வேண்டியிருக்கும் என தூதரக உறவை முறித்துக் கொண்ட அண்டை நாடுகள் எச்சரித்துள்ளன.

 

 •  தென்னாப்ரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிறிஸ்ஹானி மாவட்டத்தில் பிறந்த ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று பிறந்தது. இதற்கு காரணம் குட்டி கருவிலிருக்கும் போது அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்தது தான் என சோதனைக்கு பின் மருத்துவர் லல்லபு கூறினார்.

 

 •  இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சகட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக ஐ.நா சபை தெரிவித்தது. இவ்விசாரணை நடவடிக்கைகளில் சர்வதேச நீதிபதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என லண்டன் தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் எக்ஸ்.எல்.ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியிpல் இந்தியாவில் மகேஷ் மங்கோன்கர் தோல்வி கண்டார்.

 

 •  மங்கோலிய தலைநகர் உலன்பாதர் நகரில் நடைபெற்று வரும் உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மேரிகோம் தோல்வி கண்டார்.

 

 •  மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் டெர்பியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. பிரிஸ்டோலில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் இலங்கையும் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 10 ஆட்டங்களில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படவுள்ளது. மகளிர் போட்டியில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

 •  உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 முதல் 8வது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.

 

 •  சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஜூன் 24 முதல் ஜூலை 2 வரை நடக்கிறது.

 

 •  1400 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 22 பந்தயங்களும், பெண்கள் பிரிவில் 22 பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • குஜராத்தில் உள்ள எஸ்ஸார் ஆயில் சுத்திகரிப்பு ஆலையை ரஷியாவை சேர்ந்த ரோஸ்நெஃப்ட் நிறுவனம் ரூ.86 ஆயிரம் கோடிக்கு வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி ரஷியா சென்றிருந்த பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்துவதற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் அளித்த எல்ஐசி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

 

 •  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனம் 12500 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் “ஸ்டெம்” கல்வித்திட்டம் உள்ளிட்டவற்றுக்காக கடந்த 3 ஆண்டுகளில் 300 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்திலுள்ளது.

 

 •  ஃபோர்டு இந்தியா நிறுவனம் பழுது நீக்கித் தருவதற்காக இந்தியாவில் விற்பனை செய்த 39315 கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

 

 •  விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ1000 கோடி நிதியைத் திரட்ட ஜேகே சிமெண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 •  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில ரக கண்ணாடிகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி ஒரு டன்னுக்கு 136 டாலர் பொருள் குவிப்பு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 •                                                    ENGLISH CURRENT AFFAIRS
 •                                                         JUNE 24
  • IFSC climbing world cup is hosted by Mumbai

   

  • Maharastra State’s forest ministry is going to launch a mobile app named ‘my plant’ on 1 July

   

  • China has banned 40 television commercials rule violation

   

  • International day against Drug abuse and Illicit trafficking .

  Theme :  Listen First –Listening to children and Youth is the first step to them grow healthy and safe.

   

  • First turbaned judge in Canada Palbinder kaus shergil has been appointed a Judge of Supreme court in New west minister.

   

  • CEO of Intellecap Nisha Dutt has been honoured with the social Enterpreneur of the Year.

   

  • ICC has appointed Imran khawaja, a Veteran administrator from Singapore as its deputy chairman.

   

  • RSP leader and Lok Sabha member NK Premachandran has been selected for the best Parliamentarian award for 2016

   

  • Manipur state govt has launched a toll free 24/7 helpline number ‘181’ for women in state to address problems faced by women.

   

  • Jewar to be second airport in Delhi NCR

   

  • RBI amends Banking Ombudsman Scheme under which banks could be penalized for mis-selling third party products like Insurance and mutual funds via mobile or electronic banking.

   

  • Sahitya Akademi awards for Vincy Quadros and Amey Naik.

   

   Vincy Quadros – Jaduche petul (Bal Sahitya Puraskar)

  Amey Naik – ‘Mog dot com’ (Yuva puraskar 2017)

   

  • Axim premji honoured with Carnagie medal of philanthropy for his efforts to reform India’s Public school system

   

  • 17th meeting of India – Russia Intergovernmental commission on military co-operation held in Moscow, Russia.

   

   

Call Now
Message us on Whatsapp