June 23

Date:24 Jun, 2017

June 23

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 23

                                                                                                         தேசிய செய்திகள் :

 

 • மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. “ஸ்மார்ட் நகரங்கள்” திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. தில்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு 30 புதிய நகரங்களை இன்று வெளியிட்டார்.
  அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து பிரபல தனியார் நிறுவனங்களின் சிஇஓக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

 •  ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஸ்வீடன் அளித்து வரும் ஆதரவுக்கு ஸ்வீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வெனிடம் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

 •  பி.எஸ்.எல்.வி.சி -38 ராக்கெட் 31 செயற்கைக் கோள்களுடன் இன்று (ஜூன் 23) காலை 9.29 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் சதீஷ் தவண் ஆய்வு மையத்திலுள்ள முதலாம் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.

 

 •  காஷ்மீரின் குல்காம், அனந்த்நாக், சோபியான், புல்வாமா ஆகிய தென் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக சுமார் 2000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 •  நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம் பெற வில்லை. முதலிடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவ்தீப்சிங் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்சித் குப்தா பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் மூல்சந்தனி பெற்றுள்ளார்.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 

 • எகிப்தில் பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கல்லறை ஒன்றில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான மரத்தாலான செயற்கை கால் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

 

 •  2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. தற்போது 760 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகையானது 2030 ஆம் ஆண்டில் 860 கோடியாகவும், 2050 ஆம் ஆண்டில் 980 கோடியாகவும் பில்லியனாகவும் என ஐ.நா சபை அறிவித்தது.

 

 •  வெனிசூலா நாட்டின் வெளியுறவு மந்திரியாக 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்த டெல்சி ரோட்ரிக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது துணை மந்திரி பதவியிலுள்ள சாமுவேல் மன்கடா புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.

 

 •  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹ_வுடன் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜேரட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். டிரம்பின் மகள் இவான்காவின் கணவரும் தொழிலதிபருமான ஜேரட் குஷ்னர் அமெரிக்க அதிபரின் அதிகாரப் பூர்வ மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  இராக்கின் மொசூல் நகரிலிருந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-நூரி மசூதியை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர்.

 

 • பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச விண்கல் தினம் வரும் ஜூன் 30ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி கண்டது.

 

 •  ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.

 

 •  டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட இந்தியாவின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்தர்சிங் தனது 2வது பட்டத்துக்கான போட்டியில் சீன வீரர் ஜூல்பிஹர் மைடியாலியை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெற உள்ளது.

 

 •  ஐசிசியின் வருவாய் பகிர்வாக பிசிசிஐக்கு ரூ 2616 கோடி வழங்கப்படும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரியின் சம்பளம் கடந்த நிதியாண்டில் அதிகரித்து ரூ.10 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ 57 கோடி மதிப்பிலான ஹெச்டிஎப்சி பங்குகளை அவர் விற்றிருக்கிறார்.

 

 •  கடந்த மே மாதத்தின் முடிவில் வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடு ரூ.1.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

 

 •  நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஐடி ஏற்றுமதி 7 சதவீதம் முதல் 8 சதவீதமாக இருக்கும் என ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் கணித்திருக்கிறது.

 

 •  சரக்குகள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே வரிவிதிப்பு இருக்கும். மாநிலத்துக்குள் நடக்கும் சரக்கு பரிமாற்றத்துக்கு சிஜிஎஸ்டிஃஎஸ்ஜிஎஸ்டி மற்றும் யுடிஜிஎஸ்டி என விதிக்கப்படும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்குகள் பரிவர்த்தனைகள் மீது ஐஜிஎஸ்டி என விதிக்கப்படும்.

 

Call Now
Message us on Whatsapp